


| உலகின் மிக உயரமான விமான நிலையம்! - சீனாவில் திறக்கப்பட்டது. |
சீனாவில் உலகின் மிக உயரமான விமான நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.தென்மேற்கு சீனாவில் உள்ள சிசுவன் மாகாணம் டாவ்செங் மாவட்டத்தில் டாவ்செங் யாடிங் விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 4,411 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு திபெத்தின் காம்டோ பகுதியில், கடல்மட்த்துக்கு மேல் 4,334 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பங்டா விமான நிலையமே உலகின் மிக உயரமானது என்ற சாதனையைப் படைத்திருந்தது.
|
இதனை டாவ்செங் யாடிங் விமான நிலையம் முறியடித்துள்ளது.இந்த விமான நிலையப்பகுதியிலிருந்து மாகாண தலைநகரமான செங்டுவுக்கு பேருந்தில் செல்ல 2 நாள்கள் வரை ஆகும். ஆனால் இதே தூரத்தை தற்போது விமானத்தின் மூலம் 65 நிமிடத்தில் கடந்து விடலாம். இந்த விமான நிலையத்தை சீன அரசு 255 மில்லியன் டொலர் செலவில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|