எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 15 செப்டம்பர், 2012

சுற்றுலாப் பயணிகளின் மனதை தொட்டுள்ள பேராதெனியப் பூங்கா



(மொஹொமட் ஆஸிக்)

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவை பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்.

147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பேராதெனியப் பூங்காவில் 300 இற்கும் மேற்பட்ட ஓகிட் வகைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதெனியப் பூங்காவை பார்வையிடுதற்காக ஒவ்வொரு வருடம் தோறும் குறைந்தபட்சம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக பேராதெனியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விக்கிரமபாகு மன்னனின் காலமான 371ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா 1821ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சட்டபூர்வ அரசாங்க நிர்வாகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது.
















எஜமானின் கல்லறைக்கு அருகில் 6 வருடங்களாக வாழும் நாய்: மனதை உருக்கும் சம்பவம்
 


 
ஆர்ஜன்டீனாவில் மறைந்த தனது எஜமானின் கல்லறைக்கு அருகில் 6 வருடங்களாக வாழ்ந்து வரும் நாயொன்று குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 
அந்நாயின் பெயர் ' கெப்டன்' ஆகும்.
 
இது குறித்துத் தெரியவருவது.
 
ஆர்ஜன்டீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விலா கார்லொஸ் பாஸ் நகரில் வசித்து வந்த மிகுவல் கஸ்மென் என்ற நபர் கடந்த 2006 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
 
இதன்பின்னர் கெப்டன் திடீரெனக் காணமல் போயுள்ளது.
 
கஸ்மென்  மறைந்து ஒருவாரத்துக்கு பின்னர் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக கல்லறைக்குச் சென்றுள்ளனர்.
 
இதன்போது அவர்கள் வளர்த்த நாய் கல்லறைக்கு அருகில் கவலையுடன் படுத்திருப்பதனைக் கண்டுள்ளனர்.
 
அன்று முதல் அந்நாய் தனது எஜமான் கல்லறையிலிருந்து வெளியே வருவதைக் கண்டது மிகக் குறைவு என மிகுவல் கஸ்மெனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
அவர்கள் 'கெப்டனை' தங்கள் வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்த போதும் அது வர மறுத்து விட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
 
தற்போது கெப்டனுக்கு உணவளித்து வருவது அக்கல்லறை அமைந்துள்ள மயானத்தின் பராமளிப்பாளர்களே எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
கஸ்மென் அந்நாயை தனது மகனுக்குப் பரிசளிக்கும் பொருட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
 
அதற்கு அடுத்தவருடமே அவர் உயிரிழந்துள்ளார்.
 
 
 
மனதை உருக்கும் இச்சம்பவமானது டோக்கியோ ரயில் நிலையத்தில் 1925  மே மாதம் முதல் சுமார் 9 வருடங்கள்  வேலைக்கு சென்ற தனது எஜமான் உயிரிழந்ததை அறியாமல் அவர் வரும் வரை தினசரி அங்கு வந்து காத்திருந்த 'ஹச்சிகோ' என்ற நாயின் கதையை ஒத்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனடோல் மூலம் தலவில மற்றும் மடு பிரதேசங்களில் நிவாரணம்
 
By J. Sujeewa Kumar
2012-09-15 16:15:48

கிளாசோ ஸ்மித்கிளைன் (GSK'S) நிறுவனத்தின் வர்த்தக நாமமும், பரசிடமோல் வர்க்கத்தை சேர்ந்த இலங்கையின் நம்பிக்கைக்குரிய வலி நிவாரணியான பனடோல், தலவில மற்றும் மடு திருவிழாக்களில் மருத்துவ மற்றும் முதலுதவி சிகிச்சை முகாம்களை ஏற்படுத்தி பக்தர்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தது.

இந்த இரு திருவிழாக்களின் போது பரி.ஆன் மற்றும் மடு அன்னையை தரிசிக்க 900,000 க்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இவ்விரு பிரதேசத்திலும் பனடோல் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் பக்தர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ உதவிகள், முதலுதவி சிகிச்சைகள் போன்றன வழங்கப்பட்டன.

இம் முகாம்களில் கட்டில், தெளிப்பான், மருத்துவ உபகரணங்கள், ஆலோசனை பிரிவு, பார்வையாளர் பிரிவு போன்றன மருத்துவ ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு ஆலோசனை மற்றும் திடீர் மருத்துவ தேவையுள்ளோருக்கு அவசியமான சேவைகளை வழங்கும் பொருட்டு நடமாடும் முதலுதவிக் குழுவினர் மூலம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சேவைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவசர மருத்துவ உதவி தேவையுள்ளவர்களை அருகாமையில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.