எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 29 மார்ச், 2014





நயனுக்கு தடை...!


தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென தனி இடத்தை கொண்டுள்ளவர் நயன்தாரா. சிம்பு, பிரபு தேவாவுடனான சர்ச்சையில் சிக்கி, இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் இறால் மீதான அவரது அளப்பரியா காதலில் ஊர் விரிசல் விழுந்துள்ளது, நயன்தாரா சாப்பிடும் உணவு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது இறால் மீன் குழம்பு. தினமும் உணவோடு இது இருக்க வேண்டும்.

வெளியூர் படப் பிடிப்புக்கு போனாலும் நயன்தாராவின் ஆசையை அறிந்து ஓட்டல்களில் தேடி அலைந்து இறால் குழம்பை படக்குழுவினர் வாங்கி வைத்து விடுவார்கள். அளவுக்கு அதிகமாக இறால் குழம்பை சாப்பிட்டதால் நயன்தாராவின் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டது.

தோல் பள பளப்பை இழந்து வரட்சியாக காணப்பட்டுள்ளது, எனவே இதுகுறித்து டாக்டர்களிடம் ஆலோசித்த போது இறால் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இதனால் தனக்கு பிடித்த இறாலை சாப்பிட முடியாததால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் நயன்தாரா.


இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்


ஞ்சநேய பக்தர் அலேக்காக காதலில் விழுந்து, பிரச்னைகளில் இருந்து மீண்டெழுவதே... 'இது கதிர்வேலன் காதல்’!
அக்காவின் காதல் திருமணப் பஞ்சாயத்தைத் தீர்க்க மதுரையில் இருந்து கோவை (மாமா வீட்டுக்கு) செல்லும் உதயநிதிக்கு எதிர் வீட்டு அழகி நயன்தாராவைக் கண்டதும் காதல். ஆனால், நயன்தாரா குடும்பத்துக்கும் மாமாவுக்கும் 'பார்டர்’ பகை. உதயநிதி அப்பாவுக்கு 'காதல்’ என்றாலே கொள்ளை கோபம். நயன்தாராவுக்கோ தன் நண்பன் சுந்தர் மீது ஒரு மையல் பிரேமம். இப்படி ஏகப்பட்ட டோல் கேட்களைத் தாண்டி 'கதிர்வேலனின் காதல்’ ஜெயிக்கிறதா என்பதே... கதை!
உதய்-சந்தானம் காமெடி, காதலி சேஸிங், டீஸிங், வெளிநாட்டுப் பாடல்கள், குடும்ப சென்ட்டிமென்ட்கள் என 'ஒரு கல் ஒரு கண்ணாடி’யின் ஜெராக்ஸாகவே கதிர்வேலனைக் காதலிக்கவைத்திருக்கிறார் இயக்குநர்
எஸ்.ஆர்.பிரபாகரன். துளி கிளாமர் இல்லாமல், வெட்டு-குத்து, வம்பு-தும்பு இல்லாமல், குடும்ப உறவுகளின் ஈகோ யுத்தத்தை, அதன் சிம்பிள் தீர்வுகளைச் சொல்லியிருப்பது நல்ல விஷயமே. ஆனால், அதை சீரியஸ் சீரியல்தொனியில் சொல்லி இருப்பதுதான்..!? அதிலும் மகனைத் தலை முழுக, அப்பா தண்ணீரைத் தலையில் கவிழ்த்துக்கொள்வதெல்லாம்... அப்பப்பா!
முந்தைய படத்துக்கு இதில் உதயநிதி 'டபுள் ஓ.கே.’ பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கிறார். நயன்தாராவுக்காக உருகும்போதும், அப்பா தன்னை 'தலை முழுகிவிட்டார்’ என்று மருகும்போதும் தேர்ந்த வித்தியாசங்கள். சிரிக்கும்போது, முறைக்கும்போது, அழும்போது... எப்போதும் அழகாக இருக்கிறார் நயன். ஆனால், ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகாக வந்து போவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை. அட, ஒரு பளிச் வசனம்கூட நயனுக்கு இல்லையே!
'என் காதலுக்கு நல்லது - கெட்டது எது நடந்தாலும் நீயும் கூடவே இருக்கணும்!’ என்று படத்தில் சந்தானத்திடம் அடிக்கடி சொல்கிறார் உதயநிதி. அது ரீலுக்கு மட்டுமல்ல, ரியலுக்கும் பொருந்தும். டூயட்களைத் தவிர அனைத்துக் காட்சிகளிலும் உதயநிதியுடனே இருக்கிறார் சந்தானம்!
'இப்போ எதுக்கு, பாக்யராஜ் சண்டை போடப் போறப்போ செயின், வாட்ச்லாம் கழட்டிவைக்கிற மாதிரி நீ பண்ற?’, 'அப்புறம் சட்னி, சாம்பார்லாம் எப்படிக் கேப்பீங்க?’, 'அப்பா... நீங்க ஒரு நல்ல அப்பா’ என்று டபுள் மீனிங், அடல்ட்ஸ் ஒன்லி காமெடி இல்லாமல் நச்நச்சென விழுகின்றன சந்தானத்தின் பன்ச்கள்!
சரண்யா, ஜெயப்பிரகாஷ், நரேன், முருகதாஸ் என டீசன்ட் நடிகர்களுக்கு எந்த ஸ்கோப்பும் அளிக்கவில்லை திரைக்கதை!
உதயநிதி காதலுக்கு மிரட்டல் வில்லனாக இருக்க வேண்டிய சுந்தர் கேரக்டரை டம்மி ஆக்கிவிட்டு, அப்பா, மாமா கேரக்டரை சீரியல் வில்லன் ஆக்கியதெல்லாம்  காலங்காலமாக தமிழ் சினிமா காதல் கண்ட எதிர்ப்புகள்தானே!
காதல், காமெடி, சென்டிமென்ட் மசாலா பேக்கேஜில் மிக்ஸிங் சறுக்கியதில், இது கதிர்வேலனுக்கு மட்டுமே காதல்!

“நகரம் உங்களைக் கண்காணிக்கிறது!”


ஜித் முறைக்கிறார்; அபிஷேக் பச்சன் சிரிக்கிறார்; சோனம் கபூரும் ஆண்ட்ரியாவும் அழகு காட்டுகிறார்கள்; விஜய் யோசிக்க, அமீர்கான் ஆவேசமாகப் புறப்படுகிறார் - அறையின் சுவர் முழுக்க, கூரை முழுக்க விதவிதமான சினிமா ஸ்டில்கள். 'மெல்லிசை’ பட அலுவலகமே கலர்ஃபுல்லாக இருக்கிறது.
''விஜய் சேதுபதிகிட்ட இந்தப் படத்தோட கதையைச் சொன்னேன். நான் கதை சொன்ன விதம் அவருக்குப் பிடிச்சிருச்சு. 'இந்தக் கதையை நேரடியாச் சொன்னா, பாடம் எடுக்கிற மாதிரி ஆயிரும். நீங்க கமர்ஷியலா மாத்தினதால கேட்கவே நல்லா இருக்கு’னு சொன்னார். ஆனா, அவர்கிட்ட கால்ஷீட் இல்லை. 'ஒரு வருஷம் காத்திருக்க முடியுமா?’னு கேட்டார். சரினு சொல்லிட்டு, வேற ஸ்கிரிப்ட் தயார் பண்ற வேலையில் இறங்கிட்டேன்.
திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு, 'நான் பண்றதா இருந்த ஒரு படம் தள்ளிப் போகுது. இன்னும் 20 நாள்ல உங்களால் நம்ம படத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்க முடியுமா?’னு கேட்டார். நான், என் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ்., மூணு பேரும் ஒரு வருஷமா இந்தக் கதையோட டிராவல் பண்ணிட்டு இருக்கோம். அதனால், உடனே ஷூட்டிங் போனோம். இதோ, 50 நாள்ல படத்தை முடிச்சிட்டோம். விரைவில் 'மெல்லிசை’ உங்களை மெய்சிலிர்க்கவைக்கும்!'' - ஆர்வமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர், இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'மெல்லிசை’ படத்தின் இயக்குநர்!
''படத்தில் விஜய் சேதுபதி, மியூசிக் ஆல்பம் பண்ண முயற்சிக்கிற ஓர் இளைஞன். காயத்ரி, மியூசிக் டீச்சர். இவங்க ரெண்டு பேரைச் சுத்திதான் மொத்தப் படமும் நகரும். இன்னொரு கோணத்தில் பார்த்தா, இது நகர வாழ்க்கையைப் பத்தின  சினிமா. நவீனமயமாக்கப்பட்ட நகர வாழ்க்கையில் சிக்கல்கள் நம்மைத் சுத்தி ஒரு வலை மாதிரி பின்னிக்கிடக்குது. ஆனா, அதை நாம் கவனிக்கிறதே இல்லை. இந்த நகரத்தை நாம எத்தனை பேர் கவனிக்கிறோம்னு தெரியாது. ஆனா, இந்த நகரம் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் கவனிச்சுட்டே இருக்கு. இங்கே எல்லோருமே சுவாரஸ்யமாக வாழ்றோம். ஆனா, நிம்மதியா... சுதந்திரமா வாழ்றோமா? இந்தக் கேள்விக்குப் பதில்தான் இந்தப் படம்!''
'' 'மெல்லிசை’னு பேர் வெச்சுட்டு ஏதேதோ சொல்றீங்களே!''
'' 'மெல்லிசை’னா இதமான ஒரு சோகம். சோகமாவே இருந்தாலும் மனசு லயிச்சுத் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும். இதை உளவியல் மர்மக் கதைனுகூட சொல்லலாம்.
எனக்கு ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், கிறிஸ்டோபர் நோலன் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவங்க, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் உளவியல் ரீதியா நகர்த்துவாங்க. சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கும் ஒரு கேரக்டர், ஒரு இடத்துல பதட்டமாகி, வாழ்றதுக்காக ஓட ஆரம்பிக்கும். இந்தப் படத்துலயும் அப்படி ஒரு ட்ரீட்மென்ட் இருக்கும். கமர்ஷியல் விஷயங்களையும் கச்சிதமா மிக்ஸ் பண்ணியிருக்கோம். என்ன நடக்குமோங்கிற பதற்றமும், த்ரில்லர் படங்களுக்கே உண்டான வேகமும் இருக்கும்!''
''சிவகார்த்திகேயன், ஹன்சிகா வரைக்கும் போயிட்டார். ஆனா, விஜய் சேதுபதிகூட நடிக்க இன்னும் ஒரு டாப் ரேங்க் ஹீரோயின் புக் பண்ண மாட்டேங்கிறீங்களே?''
''இந்தப் படத்துக்கு திடீர்னு விஜய் சேதுபதி கால்ஷீட் மொத்தமாக் கிடைச்சது. அப்போ ஹீரோயின் கால்ஷீட்டும் அதே நாள்ல மொத்தமா வேணும். அதுவும் இல்லாம இந்தக் கதைக்கு பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி அமைதியான, சாந்தமான ஒரு முகம் வேணும். இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் காயத்ரிதான் பொருந்தினார். ஸ்க்ரீன்ல ரெண்டு பேரையும் பார்க்கிறப்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். மனசுக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தரை வழியனுப்பிட்டு, ஏதோ ஒரு யோசனையோட வீட்டுக்கு நடந்து வருவோமே... அப்படி ஒரு ஃபீலிங் தரும் இந்த 'மெல்லிசை’                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          




விஜய் - அமலாபால் திருமணம்


நடிகை அமலாபால் இயக்குனர் விஜயை திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதராசப்பட்டணம், கிரீடம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.

இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன.

ஆனாலும் இருவரும் அது குறித்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் இணைந்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


                                      !''

தனியாகக் களமிறங்கும் வடிவேலு!



யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, மீனாட்சி தீட்ஷித் நடித்திருக்கும் படம் 'தெனாலிராமன்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் 1ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை ஏப்ரல் 11ல் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டனர்.
ஏப்ரல் 11ம் தேதி திரு இயக்கத்தில் விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' ரிலீஸ் ஆக உள்ளது. அதே தேதியில் ரிலீஸ் ஆனால் 'தெனாலிராமன்' படத்திற்கான வரவேற்பு குறைந்துவிடுமோ என்ற தயக்கம் படக்குழுவிற்கு வந்துள்ளது.
ஆகையால் 'தெனாலிராமன்' படத்தை ஏப்ரல் 18ல் வெளியிட முடிவு செய்திருக்கிறதாம் படக்குழு.


சீனியரின் சிக்ஸர்!



'சூப்பர் ஹிட்’ என்பதை மோகன் லால் ருசித்து பல வருடங்கள் ஆகின்றன. கடந்த சில வருடங்களாக, 'ஆவரேஜ்’, 'லாலேட்டா ரசிகர்களுக்கு மட்டும்’, 'ஃப்ளாப்’ என்றரீதியிலேயே அவர் நடித்த மலையாளப் படங்கள் இருந்தன. அத்தனைக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக சமீபத்தில் வெளியான 'திருஷ்யம்’ படம் 'ஆல்டைம் ரெக்கார்டு ஹிட்’ அடித்துவிட்டது. ஹிட் என்றால், அகில உலக மலையாளிகளும் கொண்டாடும் அடிப்பொளி ஹிட்!
'மோகன்லால் கேரியரின் மிக முக்கியமான சினிமா’ என்று விமர்சகர்கள் ஃபைவ் ஸ்டார் வழங்க, 'கேரள சினிமா வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்ற சினிமா’ என்று பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள் தடதடக்கிறார்கள்.  
'திருஷ்யம்’ - ஒரு த்ரில்லிங்கான குடும்பக் காவியம். கேபிள் ஆபரேட்டராக வேலைசெய்யும் மோகன்லால், அடிப்படையில் ஒரு விவசாயி. மனைவி, இரண்டு மகள்கள், கடன் இல்லாத வருமானம். ஊருக்குள் யாரும் மோகன்லால் மீது ஒரு சின்னக் குற்றம்கூட சுமத்த முடியாது. எதிலும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. நான்காவது மட்டுமே படித்திருக்கும் மோகன்லால், எந்தப் பிரச்னைக்கும் எளிதில் தீர்வு சொல்லிவிடுவார். காரணம், சினிமா!
கேபிள் ஆபரேட்டர் என்பதால், எந்த நேரமும் சகல மொழிப் படங்களையும் பள்ளிப் பாடம் போல பார்த்துக்கொண்டிருப்பார். இரவுகளில் ஒளிபரப்பாகும் சினிமாக்களை மிஸ் பண்ணக் கூடாது என்பதால், 'ராத்திரி கேபிள் லைன் கட் ஆகிருச்சுனு போன் வந்தா உடனே போகணும்ல... இல்லைன்னா கலெக்ஷனுக்குப் போகும்போது காசு கொடுக்க மாட்டாங்க!’ என்று சாக்குச் சொல்லி வீட்டுக்குச் செல்லாமல் இரவு முழுக்க சினிமா பார்த்துக்கொண்டிருப்பவர். அந்த சினிமா பிரேமை, அவர் குடும்பத்துக்குள் நிகழும் ஒரு சிக்கலைத் தீர்க்க எப்படி உதவுகிறது என்பதுதான் படம்! (படத்தின் கதை, அதன் மர்ம ட்விஸ்ட்கள் பற்றி ஒரு வரி, ஒரு வார்த்தை சொல்வதுகூட சஸ்பென்ஸ் கலைத்துவிடும். அதனால், அதைப் பற்றிப் பேசவே வேண்டாம். திரையில் அதை ரசிப்பதே பெஸ்ட்!)
படத்தில் மோகன்லால் மட்டுமே ஹீரோ அல்ல. ஒவ்வொரு கேரக்டரும், திரைக்கதை அடுக்கும், வசனமும் கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. ஆனால், மொத்தப் படத்தையும் தாங்கிப்பிடிப்பது மோகன்லாலின் மெஸ்மரிஸம். அதில் வழக்கமான ஹீரோயிஸம் துளியும் இல்லை.
கல்லூரி செல்லும் பெண்ணுக்கு அப்பாவாக, அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு மூச்சுமுட்ட சைக்கிள் மிதித்துச் செல்பவராக, ஒவ்வொரு பைசாவையும் எண்ணி எண்ணிச் செலவு செய்பவராக இருக்கும் 'ஜார்ஜ் குட்டி’ கேரக்டருக்கு, மோகன்லால் மிகப் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.
மனைவியும் குழந்தைகளும் செலவுகளை அடுக்கும்போது, விதவிதமான சாக்குகள் பிடித்து அதைத் தட்டிக்கழிக்கிறார். இரவு 'கிளாமர் பாடல்’ ஒன்றைப் பார்த்ததும் மூடு மாறி வீட்டுக்குச் செல்பவர், சென்ட் அடித்துக்கொண்டு உற்சாகமாக வந்து மீனாவை (மனைவி) தாஜா பண்ணுகிறார். அந்தச் சமயம், 'ஏங்க... நம்மகிட்ட இருக்குற ஜீப்பை வித்துட்டு புது மாருதி கார் வாங்கலாங்க!’ என்கிறார் மீனா. 'ச்சே... அதை வாங்கு... இதை வாங்குனு... இதே வேலையாப் போச்சு’ என்று புரண்டு படுக்கிறார் மோகன்லால். ஆனால், சில நிமிடங்களிலேயே திரும்பிப் படுப்பவர், 'சரி... வேணும்னா செகண்ட் ஹேண்ட் மாருதி கார் வாங்கலாம்’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொல்வது... 'ஏ’ க்ளாஸ்!
மிகவும் கெடுபிடியான போலீஸ் விசாரணை ஒன்றுக்கு, தன் குடும்பத்தினரை மோகன்லால் தயார் செய்வதே படம். அந்த அத்தியாயங்கள் அனைத்தும் திடுக் வேகம். வழக்கமாக த்ரில்லர் கதையில், க்ளைமேக்ஸ் சொதப்பலாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் க்ளைமேக்ஸ் முடிச்சும் அதைக் காட்சிப்படுத்திய விதமும்... அட்டகாசம்!  
படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப், த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட். 'டிடெக்ட்டிவ்’, 'மம்மி அண்ட் மீ’, 'மெமரீஸ்’... என த்ரில் திகில் படங்களாகவே இயக்கியவர். ஆவரேஜ், ஹிட், சூப்பர் ஹிட் என்று ஒவ்வொரு படத்திலும் வெற்றியை விஸ்தரித்துக்கொண்டே இருந்தவர், 'திருஷ்யம்’ படத்தின் மூலம் தொட்டிருப்பது வெற்றியின் விஸ்வரூபம்.
கேரள சினிமா இப்போது இளைஞர்கள் வசம். நடிகர்களாக ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பால்... இயக்குநர்களாக ஆஷிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், சமீர் தாஹிர், ராஜீவ் ரவி... என்று இளைஞர்கள் அங்கு 'டிவென்ட்டி டிவென்ட்டி’ போல விளாசிக்கொண்டு இருக்கும்போது, கிளாசிக் டெஸ்ட் ஆட்டக்காரர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் சில காலம் தடுமாறித்தான் போனார்கள். மம்முட்டி வேறுவிதமாக அதில் இருந்து மீண்டுவர, மோகன்லால் இப்போது தனக்கான பாதையை 'திருஷ்யம்’ மூலம் கண்டுகொண்டிருக்கிறார்!

ஆல் ஹீரோயின்களுக்கும் கோயில் கட்டுவோம் ப்ரோ!



 தியா பொட்டு, அனுஷ்கா புட்டு, சிம்ரன் ஜாக்கெட், குஷ்பு இட்லி, ரோஜா சட்னினு பொங்குறதுல இருந்து திங்கிறது வரை எல்லா பிராண்டுகளிலும் நடிகைகள் பேரைச் சேர்த்து அழகு பார்க்கும் சமூகம், நம்ம தமிழ்ச் சமூகம்! ஆனா, அப்படிப்பட்ட புண்ணியாத்மா ஹீரோயின்களை, தமிழ் சினிமா என்னைக்காவது கண்ணியமா நடத்தியிருக்கா? மாமி பாயசத்துல முந்திரி போல, மம்மி கேபினட்ல மந்திரி போல, ரெண்டு பக்க டயலாக், நாலு பாட்டு மட்டும் கொடுத்துட்டு அனுப்பிடுறாங்க.
அந்தக் கால ரம்யா கிருஷ்ணன்ல ஆரம்பிச்சு இந்தக் கால த்ரிஷா கிருஷ்ணன் வரைக்கும் ஹீரோயின்களை தமிழ் சினிமா கையாளும் விதத்தை, அந்த லார்டு கிருஷ்ணனே பொறுக்க மாட்டார். உச்சி முதல் உள்ளங்கால் வரை சமூக சேவைக்காகவே அர்ப்பணிச்ச அந்த வெள்ளை உள்ளங்களின் வேதனைக் குமுறல்கள் உங்க காதுக்குக் கேட்கலையா?
துணிக் கடையில் ஆயிரம் நல்ல புடவை இருக்கிறப்ப, மழை சீன்ல நனையுற நடிகைகளுக்கு வெள்ளைப் புடவை மட்டுமே தர்ற மோசமான உலகம் சார் இது.
ரெண்டு கண்ணுலயும் டக்கீலா வெச்சிருக்கிற தானைத் தலைவி ஷகிலா படிச்சிருந்தா, வக்கீலா ஆகியிருக்கலாம். இருந்தாலும் இளைஞர் நலனுக்காக தன் சுயநலம் பார்க்காம பெரிய மனசோட நடிக்க வந்தாங்க. ஆனா, இந்த டைரக்டர்கள் ஷகீலாவை நடிக்கவெச்சதைவிட, குளிக்கவெச்சதுதானே அதிகம்.
முன்னாடி விஜயசாந்தியை நடிக்கவெச்சு, பெண் போலீஸை நெருப்பாக் காட்டியிருக்காங்க. லட்சுமி, ஜெயசுதாவை நடிக்க வெச்சு பெண் போலீஸைப் பொறுப்பாகவும் காட்டியிருக்காங்க. ஆனா, இப்ப அமலா பால், காஜல் அகர்வாலை பெண் போலீஸாப் போட்டு சிரிப்புக் காட்டுறாங்கய்யா சிரிப்பு. எட்டாப்பு அரைப் பரீட்சையோட கிளம்பி நடிக்க வந்த, மூக்கும் மூக்கும் இடிச்சுக்காம முத்தம் கொடுக்கக்கூடத் தெரியாத பச்ச மண்ணுங்கய்யா அதுங்க! அவங்க கையில ஒரு டிஸ்ட்ரிக்ட் பாதுகாப்பை டிசைட் பண்ற பொறுப்பைக் கொடுக்கிறது... நியாயமாரே!
ஜோதிகா மொகத்துல மீசை வரையுறது, அசின் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள்ள கையை விடுறது, அனுஷ்காவை லுங்கி டான்ஸ் ஆடவிடுறது, ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுற கார்த்திகாவை ஆடு மேய்க்கவிடுறது, வேதிகா முகத்துல கறுப்பு மையைக் கரைச்சு ஊத்துறது, நஸ்ரியாவை நைட்டி டான்ஸ்ல குதிக்கவெக்கிறதுனு... எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ? பாம் போட யோசிக்கிறவன்கூட, இப்படி ரூம் போட்டு யோசிக்க மாட்டான் பாஸ்!
பாக்யராஜோட டான்ஸ் ஆடுறது 'பரதநாட்டிய’ பானுப்ரியாவுக்கு, முன் ஜென்ம சாபம். முறுக்கைக்கூட கடிச்சுத் திங்கத் தெரியாத மீனாவை, நாலு நல்லி எலும்பை வாய்க்குள்ளேயே உடைச்சு கரகரனு மாவா அரைச்சுத் திங்கிற ராஜ்கிரணுக்கு ஜோடி போட உங்களுக்கு எப்படிய்யா மனசு வந்துச்சு? முட்டம் பீச்ல குடையும் கையுமாக் கூந்தல் பறக்க நடந்துபோன ரேகாவை, ராமராஜனோட காளை மாட்டுல பால் கறக்கவிட்ட பாவத்தை, பக்கத்துல நின்ன பசு மாடுகூட மன்னிக்காது. ஊரே கூடி ஊலல்லலா பாடினாலும், உதயநிதி மேல ஹன்சிகாவுக்குக் காதல் வந்து ஃபீல் ஆகி ஆஃப் தேடினது... நோ கமென்ட்ஸ். பவர் ஸ்டாருக்கு ஜோடியா நடிக்கிறவங்க எல்லாம் நாயகிங்க இல்லைண்ணே, தமிழ் சினிமாவின் தியாகிங்க!
வெள்ளைக்காரனெல்லாம் ஒரு ஹீரோ ஹீரோயின், ஒரு கப்பலை வெச்சுக்கிட்டு அற்புதமாப் படம் எடுக்கிறான். நம்மாளுங்க ஹீரோ, ஹீரோயின் ப்ளஸ் ஹீரோயின் தொப்புளை வெச்சுக்கிட்டு பண்ற அலம்பல் சலம்பல் இருக்கே.. குமுதா, ரொம்பப் பாவம் அண்ணாச்சி!
விரலால வாக்கிங் போறது, வாயால ஜாக்கிங் போறது, உரலை எடுத்து வந்து உள்ளூர்ல நோம்பி மாவு இடிக்கிறது, பம்பரத்துல ஆக்கர் போடுறதுனு நீங்க பண்ற அராஜகத்
துக்கு, அந்தத் தொப்புளுக்கு மட்டும் வாய் இருந்திருந்தா உங்க ஸ்கிரிப்ட் மேலயே துப்பியிருக்கும்! ஏம்ப்பா ஏய்ய்ய்ய்... ஆம்லெட் ஆஃபாயில் ஆரம்பிச்சு செட் தோசை, பொடி தோசை, பணியாரம் சுட ஹீரோயின்கிட்ட இருக்கிறது இடுப்பா இல்லை... இண்டக்ஷன் அடுப்பா?
நாலணா, எட்டணா, ஒரு ரூபா, ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா, பத்து ரூபானு சில்லறை காசுலகூட ஆறு வகைதான்யா இருக்கு. ஆனா, தமிழ் சினிமா லூஸு ஹீரோயின்கள் நூறு வகைகள் இருக்காங்களே!
புக்குக்குள்ள மயிலிறகை வைச்சு 'குட்டி போடு’ங்கிறது, சுப்ரமணி நாய்க்குட்டிக்கு ஜட்டி போடுவேங்கிறது, ஃபாரீன் ரோட்டுல பல பேரு பார்க்கத் தனியா ஆடுறது, 'சின்னதம்பி’கிட்ட தாலி கட்டிக்கிட்டுப் பலியாகிறது, 'மன்னன்’ ரஜினிகிட்ட தாலி கட்டிக்கிட்டு பழிவாங்குறது, ஏர்வாய்ஸ் ஓனரை ஜட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிடுறதுனு தமிழ் சினிமா ஹீரோயின்களை இந்த இயக்குநர்கள் செய்ய வெச்ச லூஸுத்தனங்களை புத்தகமாப் போட்டா, அது 'நெஞ்சுக்கு நீதி’யை மிஞ்சும் பவுண்டு வால்யூம்களா வருமே!
இதுக்காகவே லைலா, ஜெனிலியாவைக் கஷ்டப்பட்டு கல்யாணம் கட்டிக்கொடுத்து மும்பைக்கு ஃப்ளைட் ஏத்திவிட்டா, அடுத்த பஸ்ல தமன்னா, நயன்தாரா, நஸ்ரியானு புது லோடு அடிக்கிறீங்களே... ஏன் இந்தக் கொலவெறி!
நாட்டுல அட்டூழியம் பண்ணவனைத் தேடி ஹீரோ காட்டுக்குப் போறதுக்கு ஒரு லாஜிக் இருக்கு. ஆனா, வில்லனை வேட்டையாடப் போற விபரீதமான இடத்துக்கு ஹீரோயினை எதுக்கு இழுத்துக்கிட்டுப் போகணும்கிறேன்? நிஜத்துல படத்தோட ஆடியோ ரிலீஸுக்கு சத்யம் தியேட்டருக்குக்கூட வராத இந்தப் புள்ளைங்க, படத்துல சத்யமங்கலம் காட்டுக்கே சகஜமாப் போயிடுதுங்க. மொத்த பாடியையும் இரும்பாக்கி, எல்லா நாடி நரம்பையும் முறுக்கேத்தி முஷ்டியில வெறியேத்தி ஒன்றரை டன்ல வில்லன்களை ஓங்கி அடிக்க ஹீரோயின்கள் என்ன 'சிங்கம்’ பட சூர்யாவா? நல்லாப் பாருங்க மக்களே... அவங்கள்லாம் நேத்து துளிர்விட்ட வெத்தலைக் கொடிங்கய்யா!
நிஜ வாழ்க்கையில் நாய் செத்துப்போனாக்கூட நாலு மாசம் குளிக்காமக்கொள்ளாம வாழும் தெய்வங்கள் நம்ம ஹீரோயின்கள். ஆனா, சினிமாவில் பெத்த தாயோ தகப்பனோ செத்துப்போன அடுத்த காட்சியிலேயே அவங்களுக்கு ஹீரோவோட டூயட் வெக்கிறீங்களே... சட்டுனு அவுத்துத் தூக்கி எறிய அது என்ன ஊதா கலர் ரிப்பனா? ஊட்டி வளர்த்த ஆத்தா அப்பன்யா!
எல்லாப் படங்கள்லயும் வில்லன் என்ன செய்றான்? ஹீரோயினோட இடுப்பைக் கிள்ளுறான்... உடுப்பை இழுக்கிறான்... தாவணியைப் பிடுங்கிக் கையில் கட்டிக்கிறான்! ஆனா, இந்த வில்லனை அடிச்சுப் போடுற ஹீரோ, திரும்ப அதே வேலையையே ஹீரோயின்கிட்ட செய்றான். இதுக்கேன் யூ டர்ன் போட்டு, டேபிளை உடைச்சு, காத்துல பறந்து, ரத்தத்தைத் தெளிச்சு... அய்யய்யோ!
'மாற்றம் ஒன்றே மாறாதது’னு சொல்லும் செயலுமா வாழும் தெய்வம் நயன்தாராவா இருக்கட்டும், 'மாற்றம் அதிகமானா, ஏமாற்றம் வரும்’கிறதுக்கு வாழும் உதாரணமா இருக்கும் நமீதாவா இருக்கட்டும், 'ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப் பெருசாக்கும்’ நஸ்ரியாவா இருக்கட்டும், 'கண்ணால் காண்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்’னு உணர்த்துற அமலா பாலா இருக்கட்டும், 'காதலுக்கு வயசும் சைஸும் தேவை இல்லை’னு அழுத்தமா சொன்ன ஆண்ட்ரியாவா இருக்கட்டும், 'மணல்ல புரண்டு நடிச்சாலும், மக்களவையில் சவுண்டுவிட முடியும்’னு நிரூபிச்ச 'குத்து’ ரம்யாவா இருக்கட்டும், 'விளம்பரப்படுத்தினால்தான் நாம வாழுறதே தெரியும்’னு புரியவெச்ச கனகாவா இருக்கட்டும், 'வாழ்க்கையையே விளம்பரமா நடிக்க முடியும்’னு நிரூபிச்சுட்டு இருக்குற சினேகாவா இருக்கட்டும்... நடிகைகள் வெறுமனே நடிச்சுட்டு மட்டும் போகலை குமாரு... நாட்டுக்கு நாலு நல்ல விஷயங்களை நறுக்குனு இப்படி மறைமுகமாச் சொல்லிட்டும் போறாங்க!
ஆனா, அவங்களை இந்தப் பாடு படுத்துறோமே..!
மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, நான் தெரியாமல்தான் கேட்கிறேன்... தமிழ் சினிமா தாய்க்குக் கண்ணில்லையா? இல்லை தமிழ் சினிமா ஹீரோயின்கள்தான் பெண்ணில்லையா?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                




அரசியலில் களமிறங்கிய சமந்தா


சமந்தா அரசியலில் ஈடுபட போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தற்போது விஜய் ஜோடியாக கத்தி மற்றும் சூர்யா ஜோடியாக அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

சமந்தாவும் சித்தார்த்தும், காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ள நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சமந்தா  கூறும் போது; தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நல்ல ஆட்சியாளரை தெரிவு செய்ய இது தான் சரியான நேரம். நமது நாட்டுக்கு நரேந்திர மோடி போன்ற திறமையான தலைவர் தேவை. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர். அவர் நல்லாட்சி தருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து  என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா விரைவில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



கவுண்டமணியின் டவுசர் காலம்!

 
 

பிரான்சிடம் இருந்து 70 Airbus விமானங்களை வாங்கும் சீனா


மார் 28, 2014
 
பிரான்சிற்கு வருகை தந்திருந்த சீன ஜனாதிபதி 10 பில்லியன் யூரோக்களிற்கும் அதிகமான வியாபார ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளார். பிரான்ஸ் ஐரோப்பியத் தயாரிப்பான 70 Airbus விமானங்களை வாங்கும் ஒப்பந்தமொன்றைச் சீனா பிரான்சுடன் செய்துள்ளது.

43 நடுநிலைத்தூரப் பயண விமானங்களாகிய A320களையும் 27 நெடுந்தூரப் பயண விமானங்களாகிய A330களையும் கொள்முதல் செய்ய உள்ளனர். அத்தோடு பிரான்ஸ் மேலும் பத்து வருடங்களிற்குச் சீன விமானத் தயாரிப்பு நிறுனமான Aviation Industry Corporation of China (AVIC) உடன் சேர்ந்தியங்கும் ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட்டுள்ளனர். Tianjin இலுள்ள இதன் தொழிற்சாலையில் A320ரக விமானங்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பிரான்ஸ் செய்ய உள்ளது. 

உலகில் செலவுமிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்



 
2014ம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் அதிகம் செலவு ஆகும் நகரம் எது என்று கண்டறிவதற்காக 131 நகரங்களில், எக்கனொமிஸ்ட் இண்டர்லிஜண்ட் யுனிட் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
உலகில் துணி வகைகளை வாங்குவதற்கு மிகவும் அதிகம் செலவு செய்ய வேண்டிய நகராகவும் அது திகழ்கிறது. 2013ம் ஆண்டில் மிகவும் செலவு மிக்க நகராக டோக்கியோ நகரே திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பரிஸ், ஒசியோ, சூரிச், சிட்னி, வெனிசுலா, ஜெனிவா, மெல்போர்ன், ரோக்கியோ, கோபனேகன் ஆகியவை உள்ளன. உலகில் செலவு மிகவும் குறைவாக ஆகும் நகரங்களில் முதல் 10ல் இந்தியாவின் மும்பை முதல் இடத்தைபிடித்துள்ளது.
தொடர்ந்து பாகிஸ்தானின் கராச்சி (2), டில்லி (3), சிரியாவின் டமாஸ்கஸ் (4), நேபாளத்தின் காத்மாண்டு (5), அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் (6), ரோமானியாவின் புகாரெஸ்ட் (7), பனாமா நகரம் (8), சவூதி அரேபியாவின் ஜெடா (9), ரியாத் (10) ஆகியவை உள்ளன.
சிங்கப்பூரில் ஒரு கிலோ பாண் வாங்க 3.36 அமெரிக்க டொலர் செலவாகிறது. டில்லியில் இதற்காக ஆகும் செலவு 1.05 டொலராக உள்ளது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பையில் இதற்கான செலவு 0.91 டொலர் மட்டுமே.

சில சுவாரசியமான தகவல்கள்- தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடிய விலங்கு எது?

மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும். 
200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள். 
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது. 
ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.
மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால் தான் வாலை ஆட்டும்.
நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்துவிட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

-

உலகின் முதவாலதாக விரும்பப்படும் சுற்றுலாத்தலமாகப் பாரிஸ்.

பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்குமான சுற்றுலாத்துறைப் போட்டியில் இருவரும் மாறி மாறி முதலிடத்தைப் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும் பரிசையும் அதன் சுற்றுப்புற நகரங்களையும் அடக்கிய Ile-de-France பகுதிகளில் 2013ம் ஆண்டு 32.3 மில்லியன் உல்லாசப்பயணிகள் வந்ததன் மூலம் உலகின் முதவாலதாக விரும்பப்படும் சுற்றுலாத்தலமாகப் பரிசும் அதன் சுற்றுப்புறநகரங்களும் தெரிவாகி உள்ளன என பிராந்திய சற்றுலாச் சபை (Comité Régional du Tourisme) தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாகப் பிரித்தானியாவிலிருந்து வந்து பிரான்சின் தலைநகர விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் தொகை 2.1 மில்லியனைத் தொட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள், ஜேர்மனியர்கள், இத்தாலியர்கள், சீனர்கள் என இந்த வரிசை நீள்கின்றது. இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் 881.000 பேர் வந்து தங்கியுள்ளனர். இது இந்தப்பகுதி ஆசிய நாடுகளிலிருந்து முன்பு வந்தவர்களை விட் 52.6 சதவீதம் அதிகமாகும் எனச் சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.

-

பூமிக்கு அருகே மிக அபாயகரமான விண்பாறை: நாசா கண்டுபிடிப்பு



பூமிக்கு அருகே சுற்றி; மிகவும் அபாயகரமான விண்பாறை ஒன்று சுற்றி வருவதாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளி குறித்து ஆராய்வதற்காக நியோவைஸ் என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. அந்த செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

கடந்த டிசெம்பர் மாதம் நியோவைஸ் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், பூமியில் இருந்து 43 மில்லியன் மைல் தூரத்தில் அபாயகரமான விண்பாறை ஒன்று சுற்றிவருவது தெரியவந்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படம் பிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவேற்பைப் பெற்றுள்ள ‘இனம்’ திரைப்படம்!

inamசந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘இனம்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலக முக்கிய கலைஞர்கள் பலரும் வாழ்த்திவருகின்றனர்.
இனம் படம் பற்றி ஆர்.கே.செல்வமணி :
சந்தோஷ்சிவன் என் இனம் எப்படி அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார். அந்த இன அழிப்பு துயரங்களை கொடுமைகளை ஒரு சதவிகிதம் தான் காட்டியிருக்கிறார். அதுவே இவ்வளவு கொடுமையாக தெரிகிறது. படத்தில் சொல்லப்படாதவை எவ்வளவோ இருக்கின்றன.
கருணாஸ் பாத்திரம் மிக அற்புதமாக உள்ளது. இங்கே சரியான புரிதல் இல்லாமல் அறிவில்லாமல் பேசுகிற பல முட்டாள்களுக்குப் பதிலாக அந்த பாத்திரம் இருக்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ‘என் குடும்பத்தை காப்பாற்ற நான் எதையும் செய்வேன்’ என்கிற அந்த வசனம் தான் இலங்கையில் தன் குடும்பத்தை, இனத்தை காப்பாற்ற எதையும் செய்ய வேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் தமிழர்களின் போராட்டம்
இனம் படத்தை வெளியிடும் இயக்குனர் லிங்குசாமி :
இனம் படத்தைப் பார்த்தோம், பிடித்தது வெளியிடுகிறோம். இதில் வேற எந்த வியாபாரக் கணக்கும் இல்லை. படத்தின் மூலம் இரண்டு சொட்டு கண்ணீர் போதும் அதுதான் எதிர்பார்ப்பு கணக்கு
இயக்குனர் பாலாஜி சக்திவேல் :
“இனம்” ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு. இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. சாதாரண கண் கொண்டு இப்படத்தை பார்க்க வேண்டாம். நெஞ்சில் ஏந்திப் பாருங்கள்
நடிகர் சித்தார்த் :
ஐம்பது நூறு ஆண்டுகளில் மனித இனம் கண்டறியாத மனிதப் படுகொலை இன அழிப்பு தான் இலங்கையில் நடந்தது. அது மனித நாகரிகம் இதுவரை காணாத இனப்படுகொலையாகும். அதைப் பற்றி பேசுகிற இந்த படத்தை அரசியல் படமென்று யாரும் சிறுமைப் படுத்திவிட வேண்டாம். கசப்பான உண்மைகளை உலகமே கைகட்டி நிற்கும் இந்த சூழலில் எடுத்திருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய உணர்ச்சிகரமான முக்கியமான நல்ல படம் “இனம்”                                                                                                                                                                                                                                                                                                                                                          

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - திருடப்பட்ட திரைக்கதையா?

Oru Kanniyum Moondru Kalavanigalum story is stolen story
உலகஅளவில் திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய படங்களில் முக்கியமானதொரு படம் - ராஷோமான். 1950 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் திரைப்படமேதையான அகிராகுரோசாவா. ராஷோமான் படத்தின் திரைக்கதையை உத்தியை தழுவித்தான் பல வருடங்களுக்கு முன் அந்த நாள் என்ற படத்தை இயக்கினார் வீணை எஸ்.பாலசந்தர். சில வருடங்களுக்கு முன் கமல் இயக்கிய விருமாண்டி படமும் ராஷோமான் படத்தின் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமே. திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய மற்றொரு திரைப்படம் -ரன் லோலா ரன்.

1998 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெர்மனிய திரைப்படமான 'ரன் லோலா ரன்' படத்தின் திரைக்கதையும் ராஷோமான் திரைக்கதைக்கு நிகரானது. ராஷோமான் படத்தைப்போலவே இப்படத்திலும் ஒரே சம்பவங்கள்தான்.! சில நிமிட இடைவெளியில் அந்த சம்பவங்கள் நடைபெற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதுதான் கதை. வித்தியாசமானமுறையில் அமைக்கப்பட்ட திரைக்கதைதான் ரன் லோலா ரன் படத்தை அப்போது பரபரப்பாக பேச வைத்தது. இப்படத்தின் திரைக்கதையைத்தான் அப்படியே காப்பியடித்து தன்னுடைய ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
இதே சிம்புதேவன்தான் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

அதை எங்கேருந்து சுட்டிருப்பார்னு தெரியலையே..!

Maan Karate, OKMK, Thenali Raman, NSM

Naan Sigappu Manithan - Official Trailer | Vishal, Lakshmi



கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துவருகிறார் நடிகை பிரியாமணி. தமிழ் திரைப்படங்களில் நடிக்கவும் கதை தேடி வருகிறாராம்.

இந்நிலையில், பிரியாமணி அளித்துள்ள பேட்டியொன்றில், தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட உலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் நடிக்க விரும்பினால் அம்மா, அண்ணி கதாபாத்திரங்களையே கொடுக்கிறார்கள்.

இந்த நிலைமை மாற வேண்டும். இந்தியில் திருமணத்துக்கு பிறகும் கரீனாகபுர், வித்யாபாலன் போன்ற நடிகைகள் கதாநாயகிகளாகவே நடிக்கின்றனர். அந்த நிலைமை இங்கு வர வேண்டும்.

தமிழ் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளது. டைரக்டர்கள் தான் என்னை அழைக்க வேண்டும். நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது.

என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகே என் திருமணம். இந்தி திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரியாமணி.



ரவிக்கு உடன்பாடில்இயாம்!


எனக்கு சொக்லேட் போய் இமேஜ் இருப்பதாக சொல்வதில் உடன்பாடில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். அண்மையில் வெளியான நிமிர்ந்து நில் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி கூறியதாவது,

தொடர்ந்து காதல் கதைகளில் மட்டும் நடிக்கிறீர்களே. ஆக்ஷன் வராதா? என்று கேட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில், பேராண்மையில் நடித்தேன். பாராட்டினார்கள்.

பிறகு ஆதி பகவன், நிமிர்ந்து நில் படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு நடிகன் என்பவன், இமேஜ் என்கிற குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பது என் கருத்து.

நானும் அந்த இமேஜ் என்ற மாயையை உடைக்க போராடிக் கொண்டிருக்கிறேன். என்றாலும், அவ்வப்போது காதல் கதைகளிலும் நடிக்கிறேன். அப்படி இருந்தும் எனக்கு சொக்லெட் போய் இமேஜ் இருப்பதாகச் சொல்வதில் உடன்பாடில்லை.

நான் நடித்த பூலோகம் விரைவில் ரிலீசாகிறது. அடுத்து என் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கிறேன். டைட்டில் முடிவாகவில்லை.

ஆக்ஷனும், காதலும் சரிவிகிதத்தில் இருக்கும். நயன்தாரா ஜோடி. இதுவரை ஜோடியாக நடித்தவர்களில், எனக்கு பிடித்த நடிகை ஜெனிலியா மட்டும்தான் என்று கூறியுள்ளார் ரவி.




அஞ்சானில் இந்தி நடிகை


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் அஞ்சான். சமந்தா ஹீரோயின். மற்றும் வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், விவேக், பிரம்மானந்தம் சூரி உட்பட பலர் நடிக்கின்றனர்.

யூடிவி மோஷன் பிக்சர்ஸும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் இந்தி நடிகை சித்ரங்காடா சிங் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியுள்ளார்.

விவேகா எழுதிய, சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி. நான் சில்க்ஸ்மிதா கம்யுனிட்டி என்று தொடங்கும் அந்தக் குத்துபாடலின் ஷூட்டிங், ஒரு கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து மும்பையில் படமாக்கப்பட்டது. இதில் ஆட சித்ரங்காடாவுக்கு சம்பளம் 1 கோடி ரூபாய்.



அமீர்கான் மீது முறைப்பாடு


ஏழைகளின் இடத்தை மோசடி செய்ததாக அமிர்கான் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பங்களா கட்ட ஏழைகள் நிலத்தை ஆக்கிரமித்ததாக இந்தி நடிகர் அமீர்கான் மீது முறைப்பாடு கூறப்பட்டுள்ளது.

மும்பை பாத்ரா பகுதியில் சொகுசு பங்களா கட்ட அமீர்கான் திட்டமிட்டுள்ளார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இது கட்டப்பட உள்ளது.

இதற்காக அங்குள்ள ஹவுசிங் சொசைட்டியிடம் ஒப்பந்தம் போட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும்படி வற்புறுத்தினாராம்.

ஆனால் பவேலா என்ற 87 வயது மூதாட்டி மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டாராம். ஹவுசிங் கொசைட்டியின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.




சஞ்சய்தத்துக்கு மீண்டும் சிறை


மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அப்போது சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு தடா கோரர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் வெளியே வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சஞ்சய்தத்தின் தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் எஞ்சிய சிறைக்காக சரண் அடைந்த சஞ்சய்தத், பூனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒக்டோபர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சஞ்சய்தத் 15 நாட்கள் பரோலில் வந்தார். இந்த பரோல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிந்த பிறகு அவர் சிறைக்கு திரும்பினார்.

இதற்கிடையே சஞ்சய்தத்தின் மனைவி மானியதாவுக்கு இதயம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் பரோல் கேட்டார். அவருக்கு ஒரு மாதம் பரோல் அனுமதிக்கப்பட்டது.

கடந்த டிசெம்பர் மாதம் வெளியே வந்தார். ஜனவரி 21ஆம் திகதியுடன் அவரது பரோல் முடிந்தது. மனைவி அருகே இருக்க வேண்டி இருப்பதாக கூறி ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு கேட்டார்.

இதையடுத்து மேலும் ஒரு மாதம் அவருக்கு நீடிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பு கேட்டதால் இரண்டாவது ணிறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது.




குக்கூ  - விமர்சனம்  


கண்களிருக்கும் மனிதர்களின் காதலுக்கு ஆயிரம் தடைகள்.. பிரச்சினைகள். அதை பல படங்களில் பார்த்தும் விட்டோம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரின் காதலுக்கு வரும் சோதனைகள்... அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை மனம் வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் ராஜு முருகன்.

வெறும் பொழுதுபோக்கு, குத்துப் பாட்டு, கேவலமான காமெடியெல்லாம் ஏதுமில்லாத அழகான படமாக வந்திருக்கிறது குக்கூ. அன்பின் வலிமை அன்பானவர்களை ஒன்று சேர்க்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் தமிழுக்கும் கொடிக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ... எங்காவது மோதிக் கொள்வார்களோ.. அந்த வாகனம் இடித்துவிடுமோ என பதறுகிறது மனசு.

பார்வையில்லாதவர்களின் உலகம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் எள்ளலை, அவர்களின் சந்தோஷங்களை இத்தனை இயல்பாக, அதே நேரம் பிரச்சார தொனியில்லாமல் யாரும் சொன்னதில்லை. பார்வையில்லாத ஒரு காதலியும், காதலனும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் இருவேறு திக்கில் பிரிந்து போன பிறகு.. மீண்டும் சேர்வதில் உள்ள சிக்கலை யோசித்துப் பார்த்தால்... அடே யப்பா... எவ்வளவு பெரிய துயர் இது! இருவரும் ஷண்டும் சந்திக்கிறார்களா.. அந்தக் காதல் கைகூடியதா என்பது கதை.

பார்வையற்ற நாயகர்கள் வேடத்தில் இதற்கு முன் நடித்த கமல், விக்ரமையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் தினேஷ். குறிப்பாக அவரது உடல்மொழி. தன் காதலி எதிரில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்லும்போது அந்தக் கோபம்.. காதலி சமாதானமானதும் மகிழ்ச்சியைக் காட்டும் விதம்... சினிமா கேட்க தியேட்டருக்குப் போய் பண்ணும் நக்கல்ஸ்... எல்லாவற்றிலும் ஒரு உண்மையான மாற்றுத் திறனாளியை நகலெடுத்திருக்கிறார் தினேஷ். வெல்டன். காதலியாக வரும் மாளவிகாவும் பிரமிக்க வைக்கிறார்.

படத்தில் நடித்த அனைவருமே இயல் மீறாமல் நடித்துள்ளனர். படத்தில் குறைகள் என்று சொல்ல கொஞ்சமல்ல.. நிறையவே இருக்கிறது. ராஜூ முருகன் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது என்றே சொல்லலாம்! படத்துக்கு இசை இளையராஜா என்று போட்டிருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அப்படி ஒரு பாதிப்பு.

நாயகன் இளையராஜா குரலில் பாடுபவன் என்பதால், ராஜாவின் பாடல்கள் பின்னணி இசையாக ஒலிப்பதைக் கேட்கவே அத்தனை சுகமாக உள்ளது.

இந்தக் கதை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்... என்பதையெல்லாம் யோசிக்காமல், எந்த மனிதருக்கும் காதல் வரும்.. அதில் சோதனைகள் வரும். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் மனசில் பதியும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் தன் முதல் படத்தைத் தந்திருக்கும் ராஜூ முருகனை வாழ்த்தி வரவேற்போம். 
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •  
     
  •