எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 8 மார்ச், 2014

தெலுங்கில் படப்பிடிப்பில் ‘திருசியம்’ ரீ-மேக்  



மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்த படம் ’திருசியம்’ இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீ-மேக் ஆகிறது. 


தெலுங்கில் உருவாகும் இப்படத்தை நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா இயக்குகிறார் என்றும், மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேர்கடரில் வெங்கடேஷும், மீனா நடித்த கேரக்டரில் தெலுங்கிலும் மீனாவே நடிக்கிறார் என்பதும் ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

சமீபத்தில் ஹைதராபாத்தில் இப்படத்தின் துவக்க விழா நடைபெற, படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளாவிலுள்ள தொடுபுழாவில் ஆரம்பமாகியுள்ளது.

நடிகர் வெங்கடேஷின் சொந்த பட நிறுவனமான ‘சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் இரண்டாவது மகளாக நடித்த பேபி எஸ்தரே தெலுங்கிலும் நடிக்க, ஆஷா சரத் நடித்த போலீஸ் கேரக்டரில் நதியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா கான் கார் விபத்தில் பலி  


பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா கான், ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் பலியானார். 


சனா கானும் அவரது கணவர் பாபர் கானும் நேற்று கராச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாபர் கான் ஓட்டிச் சென்றுள்ளார்.

ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சனா கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பாபர், லியாகத் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சனா கான்-பாபர் கான் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்காக சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா  



கோலிவுட் நடிகைகளில் தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பவர் நயன்தாராதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நாயகியும் நயன்தாராவேதான். 



ஒரு படத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் பேசி கறாராக வாங்கிவிடுவார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் கஹானி ரீமேக் படமான நீ எங்கே என் அன்பே படத்திற்கும், இது கதிர்வேலன் காதல் படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி படத்திற்கும், உதயநிதியின் நண்பேண்டா படத்திற்கும் அதே தொகைதான் வாங்கியுள்ளார். இந்நிலையில் நண்பேண்டா படத்தின் தயாரிப்பாளர் உதயநிதியிடம் சமீபத்தில் தொடர்பு கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அவராகவே முன்வந்து கூறியிருக்கின்றாராம்.

இது கதிர்வேலன் காதல் படம் வசூல்ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்காததால், நயன்தாரா, இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. நயன்தாராவே முன்வந்து சம்பளத்தை குறைத்ததை பார்த்து கோலிவுட்டில் பலரும் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தேன் மருத்துவம்



தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.

இரத்த சோகையை அகற்ற: 

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.

தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.

தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.

சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.

தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.

தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.

தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.

டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.

முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள்.

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: 

சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.

உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்


உடற்சூட்டை தணிப்பவை

பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை

இஞ்சி


இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?

தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!


சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ"த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை

என்பது பழமொழி அல்லவா?

நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.


இஞ்சி பொதுக் குணம்


இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.


உபயோக முறைகள்


இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.


இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)


சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.


இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!


இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.


இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.


ஆஸ்துமா இருமலுக்கு


இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)


இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

காபி, தேயிலை பானங்களை மிதமிஞ்சி சாப்பிட்டு அதனால் ஏற்படும் பலவித தொந்திரவுகளை நீக்கிக் கொள்ள விரும்பும் வாசக அன்பர்கள், அவைகளை சில நாள் விட்டு 1 தேக்கரண்டி இஞ்சி ரசம் 1 தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறு இவைகளை ஒன்றாகக் கலந்து தெளிந்த பின் வடிகட்டி சிறிது சர்க்கரை கூட்டி அந்த அளவு வெந்நீர் விட்டு கலந்த காலையில் 10 நாளைக்குக் குடித்து வந்தால், காபி, டீ சாப்பிட்டதால் பித்தம் வாந்தியாகும்.


பித்தமது அடங்கியனால் பேசதே போய்விடு
எத்திய ஐயம் எழும்பிடில் கிட்டாதே
எத்திய வாதம் எழும்பினால் மருந்து செய்


இது சித்தர் நாடி கூறும் இலக்கணம். இதன் பொருள் வாத நாடி நடக்கும்போது தான் மருந்து தர வேண்டுமாம்! வாதத்தை நடுநிலையாகக் கொண்ட இயற்கை மூலிகைகள் சிலவே. இதில் இந்த சுப்பிரமணி முதன்மை வகிக்கக்கூடியது. சுக்கு இதற்குத்தான் உபயோகிக்கலாம்; இதற்கு கூடாது என்ற வரம்பே இல்லை. எந்த காலத்துக்கும், எதற்கு வேண்டுமானாலும் யாவரும் பயன்படுத்தக் கூடிய எளிய ஆனால் உயர்ந்த வஸ்து. அகத்தியர் இதனை 'ஈதுக்குதவும் தீதுக்குதவா தென்றோரு விதியிலை நவசுறு குணமிதுவே' என்றார் நவசுறு எனில் சுக்கு. பெரிய குடும்பத்தில் தலைவன் ஒரு தந்தையாக இருந்த போதிலும் முதல் மருமகளாக வாய்க்கும் பெண்ணுக்கு எவ்வளவு பெருமையும், பொறுப்பும் உள்ளதோ? அத்தகைய மதிப்பினை மக்கள் சமுதாயத்தில் இந்த சுப்பிரமணி பெற்றுள்ளது.

சுக்குவின் குணம்

உடல் உற்ற வாய்வை எல்லாம் அகற்றிவிடும். வாத ரோகங்கள் யாவும் போகும். பசியைத் தூண்டும். மன அகங்காரத்தை ஒடுக்கும்; சிர நோய், சீதளம், வாத குன்மம், வயிற்றுக்குத்தல், நீர் பீனிசம், நீரேற்றம், சலதோடம், கீல்பிடிப்பு, ஆசன நோய், தலைவலி, பல்வலி, காதுகுத்தல், சுவாசரோகம் ஆகிய எல்லா வியாதிகளும் போகும். வாய்வு உஷ்ணம் சீதளம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் இந்த சுப்பிரமணி தீர்த்து வைக்கும்.

உபயோக முறைகளில் சில

பொதுவாக ஒரு சுக்கு துண்டை மேல்தோல் நீக்கி நறுக்கி ஒரு குவளை நீரில் போட்டுக் காய்ச்சி சிறிது பால் சர்க்கரை கலந்து தினமிரு வேளை குடித்துவர மேல்கண்ட நோயெல்லாம் விலகும்.

வாதரோக சம்பந்தப்பட்ட கீல்வாய்வு, பிடிப்பு, வீக்கல், மூட்டுக்களில் வலி இவை உடம்பின் எந்த மூட்டுக்களில் வந்த போதிலும் சரி ஒரு துண்டு சுக்கு, ஒரு துண்டு உயர்ந்த பெருங்காயம் பால் விட்டு அரைத்து சேர்ந்த விழுதியை வலியும் வீக்கமுள்ள இடங்களில் தடவி வெய்யில் அல்லது நெருப்பனல் காட்ட குணமாகும். பல்வலி தாங்க முடியாதபோது எகிறுசள் வீங்கி ஊசி குத்துதல் போன்று வலிக்கும்போது, ஒரு துண்டு சுக்கு எடுத்து நறுக்கி அதை அப்படியே வலிகண்ட இடத்தில் வைக்க சாந்தப்படும். தலைவலி, மண்டைப்பிடி இவைகளுக்குத் தாய்ப்பாலில் சுக்கை அரைத்து தலைவலி கண்ட இடத்தில் பற்றுப் போட்டுவர வலிகள் நின்றுபோகும்.

முக்குணத் துணை மருந்து

சுக்கு, மிளகு, திப்பில் ஆகிய மூன்றையும் உலர்த்தி சுத்தம் செய்து சம எடை எடுத்து இடித்து துல்லியமாக தூள் செய்து வைத்துக் கொள்வது தான் 'முக்குணத்துணை மருந்து' என்பது. இதை நோய்த் தடுப்பு மருந்தாக சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கலாம். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுடைய தொழில் ஆக்கம், காத்தல், அழித்தல் என்பன போன்று இந்த முக்குண துணை மருந்தும் உடலுக்குத் தேவைகளை ஆக்கி, தேவையற்றவைகளை அழித்து வெளியேற்றி உடலைக்காக்கும் தன்மையது. இம்மருந்து வைத்திராத சித்த மருத்துவர் கிடையாது என்று துணிந்து கூறலாம். ரசபாஷாண வகைகளை இதை துணை மருந்தாக சேர்த்துக் கொடுப்பதில் நோய் சிக்கல் அடையாமல் விரைவில் குணமாவதுடன் ரசபாஷாண நஞ்சு மருந்துகளால் வாய்வு பிடிப்பு, வேக்காடு ஆகிய கெடுதல் குணம் உண்டாகாது என்பது சித்தர்களின் வாக்கு.

அளவு: குழந்தைகளுக்கு இரு மிளகளவு வெந்நீருடன், சிறுவர்களுக்கு இருமடங்கும், பெரியோர்களுக்கு வயதுக்குத் தக்கபடி 10 முதல் 15 அரிசி எடை இம்மருந்தை பொதுவாக தருவார்கள். 'திரிகடுகம்' என்றும் இதனை சொல்வதுண்டு.

ஐந்தீ சுடர் மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகளைச் சுத்தம் செய்து சம எடை எடுத்து வெய்யிலில் உலர்த்தி இடித்து துல்லியமாக தூள் செய்து ஒரு புட்டியில் வைத்துக் கொள்க. அளவு 10 முதல் 20 அரிசி எடை தேன், நெய், வெந்நீர் ஆகிய துணைகொண்டு காலை மாலை இருவேளை பித்தநாடி மிகுந்த போது காணும் அதிஉஷ்ணம், மார்பு எரிச்சல், பக்க சூலை அனல் வாய்வு, பித்த புளியேப்பம், வயிற்றுப் புசம், பசியின்மை, வறட்சி ஆகியவைகள் ஐந்தீச்சுடர் பட்ட மாத்திரம் தீயில் பட்ட பஞ்சுபோல் பறக்கும்! இதைத் துணை மருந்தாக அமைத்து சண்ட மாருத செந்தூரம், ஆறுமுக செந்தூரம், அயம், காந்தம் முதலானவைகளுக்கு சமயோசிதம் போல் சித்த மருத்துவர்கள் கையாண்டு நீடித்த பல நோய்களைத் திறமையாக போக்கி விடுவார்கள். இம்மருந்தை 'பஞ்ச தீபாக்கினி' என்றும் கூறுவார்கள்.

ஐம்புனல் நீர் மருந்து

ஏலம் 10 கிராம், திப்பிலி 20 கிராம், சுக்கு 50 கிராம், பழுப்பு சர்க்கரை (பூராசர்க்கரை) 250 கிராம் சர்க்கரையை நீக்கி மற்றவைகளை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி இடித்துத் தூள் செய்தபின் சர்க்கரையை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அளவு 15 முதல் 20 அரிசி எடை வெந்நீர், சூடான பால், தேன் ஆகியவைகளுடன் உட்கொள்ள பித்தத்தால் தூண்டப்பெற்ற ஐயநாடி கிளர்ந்த போதும், வாந்தி, குமட்டல், செரியாமை, பெருஏப்பம், வயிற்றில் நீரும் வாய்வும் திரண்டு அதனால் உண்டாகும் தொல்லைகள், வாய் நீரூரல், சதா உமிழ்நீர் சுரந்து துப்பிக் கொண்டிருத்தல், தூக்கத்திலும் வாயில் நீர் சுரந்து நீர் வடிதல் போன்றவைகளுக்கும் நற்பயன் தரக்கூடிய மருந்து. இதற்கு 'பஞ்சதாரைச் சூரணம்' என்று பெயர்.

மாந்தைக் குடிநீர்

சுக்கு ஒரு நெல்லிக்காய் அளவு, மிளகு 6 மட்டும், சீரகம் 35 கிராம், தோல் நீக்கிய பூண்டு 3, ஓமம் 10 கிராம், சோற்றுப்பு நாலு கல் இவைகளை மெல்லிய மண் ஓட்டில் போட்டு சிறுக வறுத்து எடுத்து கொண்டு அதை அம்மியில் வைத்து அதோடு வேப்பிலைக் கொழுந்து அவுன்சு வெந்நீர் விட்டுக் கலக்கி மெல்லிய துணியில் வடிகட்டிய குடிநீரை சாறு வைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு அரை சங்களவு தாய்ப்பால் கலந்து தினம் இரண்டு முதல் நான்கு வேளை நோய்க்குத் தக்கபடி சிறுவர்களுக்கு முழு சங்களவு கொடுத்துவர சகல மாந்தம், கணை மற்றும் வயிற்றுக் கோளாறுகள் யாவும் விலகும்.

சுகபேதிக் குடிநீர்

சுக்கு, பிஞ்சு கடுக்காய், சீமை நிலாவிரை ரூபாய் எடை வீதம் எடுத்து இடித்து இரண்டு குவளை நீர் விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக்கி வடிகட்டி அத்துடன் 1 ரூபாய் எடை பேதி உப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவிட்டால் இரண்டொரு மணி நேரத்திற்குள் களைப்பு ஆயாசமின்றி நன்றாக பேதி ஆகி வயிற்றில் உள்ள மலச்சாக்கடை சுத்தமாகி உடல் ஆராக்கியம் பெறும், பேதியை நிறுத்த மோர் சாதம் அல்லது எலுமிச்சம் பழ சர்பத் குடிக்க பேதி நின்று போகும். இம்முறையில் கண்ட மருந்து நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

பல் ரோகப்பொடி

சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில் இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும் ஒழிந்துபோகும்.

சுக்கு இல்லாவிடில் மருத்துவத்துறையில் சிறப்பான முறைகளைச் செய்வது அரிது! பல மருந்துகளில் சுக்கு தலைவனாக சேரும்போது திறமை மிகுந்த தளபதியைப் போல் நோய்களை விரட்டும், சுக்குக்கு மேல் தோலிலும், அருகம்புல்லுக்கு கணுக்களில் நஞ்சும் இருப்பதாக மருத்துவ ஏடுகள் கூறுகின்றன. ஆகவே இவைகளைப் பயன்படுத்தும் போது நஞ்சு பாகத்தை நீக்கி பயன்படுத்தல் வேண்டும்.

மத்தள வாய்வு வலி

கனமான மாவு சுக்காக தேர்ந்து எடுத்து தேவையான அளவு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அந்த சுக்கு அளவுக்கு சோற்றுக்குப் போடும் உப்பு எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு ஒவ்வொரு சுக்கின் மேலும் கவனமாக கவசமிட்டு உலரவைத்த பின் அடுப்பில் நெருப்பு ஆறி நீறுபூத்த அனலாக இருக்கும் சமயம் அதனுள் இந்த சுக்குகளை சொருகி வைத்து சிறிது நேரம் கழித்த பின்பு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அனலில் வைத்த சுக்கு கருகி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)

அளவு 15 முதல் 30 அரிசி எடை வெந்நீர் அல்லது மோர் ஆகியவைகளில் குடிக்கலாம். வயிற்றில் உண்டாகும் சகல வாய்வு ரோகமும் வயிறு பெருத்து பலூன் போலாகி வாய்வு திரண்டு அடிக்கடி சூடாக ஆசனவாய் வழியே புதிய காடா துணி கிழிப்பது போன்ற சப்பதத்துடன் காற்று வெளியாவதும், வாய் வழி பெருஏப்பம் விடல் மந்தமான வாய்வு பொருமல் யாவும் குணமாகிவிடும்.

சுக்கு தனித்து தொடர்ந்து சில நாள் சாப்பிட மனதில் நன்கு வேலை செய்து அகங்காரம், கோபம், எரிச்சல் ஆகியவைகளையும் தணிக்க வல்லது. இதனை உடனடியாக சோதிக்க விரும்புவோர் ஒன்று செய்யுங்கள்! சுக்கை வெந்நீர் விட்டு அரைத்த விழுதியை கண் இமையின் உள்ளே தடவிப் பாருங்கள்! கண்கள் எரிய அகங்காரமெல்லாம் போய் கோபம் தணிந்து மன அமைதி பெறும். அது மட்டுமா? கண்களிலிருந்து அழுக்குகள் கெட்ட நீர் எல்லாம் வெளியாகி கண்கள் பிறகு சில்லென குளிர்ச்சியாக கண்கள் ஒளி பெறும். இதனை நம் முன்னோர்கள் சிறு வயதில் அடங்காது அட்டகாசம் செய்யும் முரட்டுப் பிள்ளைகளை ஒரே சுக்குத் துண்டால் சாதுவாகச் செய்து விடுவார்கள்!

சுக்கு ஒரு பழங்கா பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி.

சுக்கு - சித்தர்கள் கண்டுபிடித்த பென்சிலின் என்றால் மிகையல்ல!

சுக்கு தீவிர நோய்களை குணப்படுத்துவது போல நாட்பட்ட நோயால் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம் என்பதனை 'திரிபலா சுக்கு டோக்க தெரித்து உயிர் போமுன்' என்ற திருப்புகழ் பாடலால் அறியலாம்.

குடிநீர் பானம்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே குடிநீர் நிலையங்கள் இருந்தன. இதில் இரு விதம் உண்டு. ஒன்று தண் ர் பந்தல் மற்றொன்று அரசினர் அனுமதி பெற்ற கள்ளுக்கடை இரண்டிலும் இட்லி, தோசை, வடை ஆகிய சிற்றுண்டிகளும் கிடைக்கும். இந்த இரண்டு குடிநீர் பானங்களும் ஏறத்தாழ நல்ல ஆரோக்கியம் உள்ளவைகளே என்றால் இதை யாரும் மறுக்க முடியாது. இந்த தண் ர் பந்தல் சுக்கு குடிநீரை விட்டு, நாகரீகத்தை தழுவி காப்பி குடியே கபே ஓட்டல்களாக மாறின! இதுபோல் கள்ளுக்கடைகளும் மறைந்து, கள்ளச்சாராயம் காய்ச்சும் கருப்புச் சந்தையாகி மக்களின் உயிரைக் குடித்து வருகிறது என்றால் இதையும் மறுக்க முடியாதல்லவா?

சுப்பிரமணி என்றால் செவியால் கேட்கும் ஒலி மட்டும் அல்ல! கண்களால் பார்க்கும் ஒளிக்கும் மணி என்றுதான் பொருள். தினமணி என்றால் நாள்தோறும் ஒளிவீசும் செய்திச்சுடர் என்று பொருள், அதுபோல சுப்பிரமணி என்பது இருளைப் போக்கும் செவ்வானம். கவின்மிகு காலை ஒளியால் இருண்டு கிடந்த இரவு திரைமெல்ல விலகி உறக்கம் கொண்ட எல்லா உயிர்களும் விழித்தெழுந்து இரை தேடி உடல் வளர்க்கப் போகும் காட்சி என்பது பொருள். அறியாமையும், நோயுடைய வாழ்க்கையும் இருண்டுபோன இரவுக்கு சமமானவைகளே! எனவே இருள் என்ற அறியாமை, பிணி யாவும் சுப்பிரமணி (சுக்கு) எனும் முருகன் அருளால் நீங்கிவிடும்.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி




தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

முடி வளர சித்தமருத்துவம்




முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

அருகம்புல்

 


நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?

நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹோர்லிக்ஸ், ஓவல்டின், போன்ற பானங்களைஸ் சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன்  சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.

அருகம்புல்லை நிரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இத நோய்க்கு இதமளிக்கும்.

திடிரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும்,  அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன் - தமிழ் நடிகை ஸ்ரீபிரியங்கா  



கங்காரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஸ்ரீபிரியங்கா. ஏற்கனவே அகடம் படத்திலும் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் பெண்.



சினிமா அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா சொல்கிறார். தமிழ் பெண்கள் நடிக்க விரும்புவது இல்லை. சினிமா பற்றிய தவறான எண்ணமே இதற்கு காரணம். இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் வந்திருப்பது போல் சினிமாவுக்கும் வர ஆரம்பித்து விட்டனர். கங்காரு அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.

பாசமலர் மாதிரியான கதை. நான் தங்கையாக வருகிறேன். சாவித்திரி போல் என் கேரக்டர் பேசபபடும். எனக்கு பிடித்த நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவ கார்த்திகேயன்.

நடிகைகளில் ஸ்ரீதேவி, ஸ்ரீதிவ்யா பிடித்தமானவர்கள். கங்காரு எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

விண்வெளியில் ராக்கெட்டுகளுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையம்



ராக்கெட்டுகளுக்கு விண்வெளியில் ‘கியாஸ்’ எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கப்படுகிறது. 


விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளுக்கு பூமியில் ‘கியாஸ்’ எரிபொருள் நிரப்பப்படுகிறது. ஆனால் விண்வெளியிலேயே அதற்கான கியாஸ் நிரப்பும் நிலையங்களை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையங்கள் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் லாக்ரெஞ்ச் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுவரைதான் இங்கு புவி ஈர்ப்பு விசை உள்ளது.

எனவே இங்கு கியாஸ் நிரப்பும் நிலையம் அமைக்கும் சாத்திய கூறு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியில் அமெரிக்காவின் மசாசூசைட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறைந்த செலவில் கியாஸ் நிரப்பும் நிலையத்தை வடிவமைக்க ஆய்வு மேற்கொண்டுள்ளார். பூமியில் இருந்து கூடுதலாக கியாஸ் எரிபொருள் நிரப்ப வேண்டும்.

ஆனால் விண்வெளியில் அதைவிட ஒரு மடங்கு குறைவாக நிரப்பினால் போதும். அதன் மூலம் செலவு தொகை குறையும்.

உலகின் மிகச்சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்தது.



உலக அளவில் கல்வி நிறுவனங்களில் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து தரவரிசை பட்டியல் ஒன்றினை டைம்ஸ் இதழ் வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. 


இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், மூன்றாம் இடத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 4 வது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், 5வது இடத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 6வது இடத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஆகியவை இடம் பெற்றுள்ளன.

உலகின் மிகச்சிறந்த 100 கல்வி நிலையங்கள் பட்டியலில் சீனாவின் இரண்டு கல்வி நிறுவனங்களும், ரஷ்யா மற்றும் பிரேசிலின் ஒரு கல்வி நிறுவனங்களும், இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் ஒரு கல்வி நிறுவனம் கூட இந்த பட்டியலில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் 226வது இடத்தில் இருக்கின்றது. டெல்லி, கான்பூர், காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள IIT தொழில்நுட்ப கலவி நிறுவனங்கள் 350வது இடங்களுக்கு மேல்தான் உள்ளது

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு


சூரியக் குடும்பத்துக்கு வெளியே தற்போது 715 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது. புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட கெப்ளர் தொலைநோக்கி,  இந்த 715 புதிய கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது.

கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

'மனிதர்களுக்குத் தெரிந்த கோள்களின் எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது. 305 வௌ;வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது' என நாசா ஆய்வாளர் லிஸ்ஸாயர் கூறியுள்ளார்.

புதிய கோள்கள் கண்டறியப் பட்டாலும், இக்கோள்களின் கூட்டுப் பொருள்கள் (அல்லது எவற்றையெல்லாம் உள்ளடக்கி யவை) என்பது குறித்த அதிக விவரங்கள் தெரியவில்லை. கடினமான தரை, நீர், அவை சுற்றி வரும் நட்சத்திரங்களிலிருந்து அவற்றின் தொலைவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து அறியப்படவில்லை.

அந்தக் கோள்கள் அதிக வெப்ப முடையவையா, கடும் குளிர் நிலவும் பிரதேசமா என்பன போன்ற விவரங்களும் அறியப்படவில்லை. ஆனால், தங்கள் நட்சத்திரங்களை அவை பலமுறை கடப்பதை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த புதிய கோள்கள் அனைத் தும் கெப்ளர் நிறுவப்பட்ட 2009 மார்ச் முதல் 2011 வரையிலான காலகட்டங்களில் கண்டறியப்பட் டவை. புதிய பகுப்பாய்வு முறையின் மூலம் அவை கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் வரும் மார்ச் 10 ஆம் திகதி வெளிவரவுள்ள ஆய்விதழில் வெளியிடப்படவுள்ளன.

யானைகளுக்காக வாழ்வை தியாகம் செய்த பெண்


தனது பெற்றோரை கவனித்துக்கொள்ள முடியாமல் அவர்களை முதியோர் இல்லங்களில் பிள்ளைகள் விட்டுச்செல்வதும், பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் அவர்களை நடுவீதிகளிள் விட்டுச்செல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில் சேம்பியா நாட்டைச்சேர்ந்த ருவியல் மார்டன் என்ற பெண் அநாதையான யானைகளை கவனித்து அனைவரின் மனதையும் இடம்பிடித்து கொண்டுள்ளார்.

சேம்பியா நாட்டை சேர்ந்த ரூவியல் மார்டன் (33) என்ற விஞ்ஞான பட்டதாரியான இப்பெண் யானைகளை பார்த்துக் கொள்வதிலும், கவனித்துக்கொள்வதிலும் அதீத ஆர்வம் உள்ளவர்.

இரண்டிலிருந்து மூன்று வயதுடைய 6 யானைக்குட்டிகளின் தாய் ஆபிரிக்காவில் காணாமல் போனதால், அந்த 6 குட்டிகளையும் ஒரு தாயைப்போல இவர் அன்பாக கவனித்து வருகின்றார்.

காயமடைந்த யானைகளுக்கு முதலுதவி, யானைகளுக்கான அதிகூடிய பாதுகாப்பு, அவைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கள், பாலுட்டுதல், அவைகளின் உடல் உள பிரச்சனைகளை கவனித்தல் போன்ற வேலைகளில் மிகவும் கவனமாகவும், சாதூர்யமாக செய்து வருவதுடன் 24 உயிரினங்களை பாதுகாப்பாகவும் அவதானமாகவும் கண்கானித்து வருகிறார்.

மார்டன் பட்டப்படிப்பை முடித்த பின்னர், விலங்கின பாதுகாப்புக்கான பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு 2008ஆம் ஆண்டு சேம்பியா நாட்டிற்கு வந்தார்.

யானைகளை உயிரோடு பலியாக்குதல், தந்தங்களை திருடுதல் போன்ற செயற்பாடுகளில் இருந்து யானைகளை பாதுகாப்பதற்காக இவர் தற்போது, சேம்பியாவில் தங்கியுள்ளார்.

பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த போதிலும் யானைகளை பராமறிப்பதை நினைக்கும் போது தனக்கு மகிழ்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தினரை பிரிந்து இருப்பது கூட இவ்வாறான விடயத்தில் கவலையை தராது, சந்தோஷத்தையே தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



'நீ எங்கே என் அன்பே' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து இயக்குநரை அசத்தியுள்ளார் நடிகை நயன்தாரா. 

பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா தமிழ், தெலுங்கில் உருவாக்கும் திரைப்படம் 'நீ எங்கே என் அன்பே'. இந்தியில் வெளியான கஹானியின் ரீமேக் இது.

இந்த இரு மொழிகளிலும் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. ஒரிஜினல் திரைப்படத்தில் ஹீரோயின் கர்ப்பிணியாக வருவார். ஆனால் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கவில்லை. திருமணமான புதுமணப்பெண்ணாக வருகிறார்.

ஆரம்பம், ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல் ஆகிய திரைப்படங்களின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்சர் அடித்திருக்கும் நயன்தாராவுக்கு நடிக்க ஏக வாய்ப்புள்ள ரோல் வேறு.

தமிழ், தெலுங்கு என கிட்டத்தட்ட ஆறு படங்களில் கமிட் ஆகியிருக்கும் நயன்தாரா அதிகம் எதிர்பார்ப்பது என் அன்பே நீ எங்கே என்ற திரைப்படத்தைதானாம். 

இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம் இத்திரைப்படத்திற்காக நயன்தாரா ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் திரைப்படக்குழுவினர்.

இதுகுறித்து பேசிய இயக்குனர் ஷேகர் கம்முலா 'என் அன்பே நீ எங்கே' திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்தபோது நான் அந்த கதாபாத்திரத்தை அதிக நகம் இல்லாதவராகத்தான் கற்பனை செய்துவைத்திருந்தேன். இதைப் பற்றி நான் நயன்தாராவிடம் கூறியதுமே அவரது நகங்களை வெட்டிக்கொண்டார்.

மேலும் சில ஆக்ஷன் காட்சிகளுக்காக டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோதும், வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் நயன்தாரா என்றார்.