எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 1 நவம்பர், 2013


தீபாவளி பண்டிகையுடன் லக்ஷ்மி குபேர பூசை இன்று
 

ஐப்பசி மாதத் தேய் பிறை சதுர்த்தசியில் உலகம் முழுவதிலும் வாழும் இந்துப் பெருமக் களால் சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகின்ற தீபாவளி பண்டிகை இன்று ஆகும்.
தீபாவளி பண்டிகை யின் போது பட்டாசுக ளுக்கும் பலகார வகை களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. தீமைகள் அழிக்கப்பட்டதை பெருவிழாவாக எமது முன்னோர்கள் கொண்டாடியுள்ளதற்கு அமையவே இன்றும் நாம் இப்பண்டிகையை கொண்டாடுகின்றோம்.
நரகாசுரன் என்ற அசுரன் மஹா விஷ்ணுவால் அழிக்கப்பட்ட தினத்தை அவரின் தயாராகிய பூமாதேவியின் வேண்டுதலுக்கு அமையவே தீபாவளி அமையப் பெற்றது.
தீபாவளி தினமான இன்று சூரியன் உதயமாவதற்கு முன் தலைக்கு எண்ணெய் தேய்த்து சுடுநீரில் ஸ்ஞானம் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. துலா மாத மகாத்மியம் என்ற நூலில் தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும் என்பதை தைலே லட்சுமி ஜல கங்கா என எடுத்துக்கூறுகின்றது.
தீப ஒளி திருநாளை முன்னிட்டு லக்ஷ்மி குபேர பூஜைகள் இடம் பெறுவது வழக்கமாகும். தீபாவளி தினத்தில் இடம்பெறுகின்ற குபேர பூஜை நாளை (03) செய்ய வேண்டுமெனவும் அமாவாசை நாளை (03) என்பதால் இது பொருந்தும் என சொல்லப்பட்டிருப்பதும் சில பஞ்சாக விதிகளுக்கு அமையும் சோதிட விற்பன்னர்களின் கூற்றுப்படியும் இது மாறுபடலாம் எனவும் கூற முடியும்.
தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது. தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது. தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்ததங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர். இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை. முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர். அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது. தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.


நேத்து ராத்திரி நல்லா பட்டாசு வெடிச்சிருப்பீங்க, இந்த அதிரசம், முறுக்கு, உன்னியப்பம் எல்லாம் சாப்ட்டுருப்பீங்க, அப்படி சாப்டலனா ஏதாவது பேக்கரில இருந்து பால்கோவா, ஜாங்கிரி, லட்டு, மிக்சர்னு வாங்கி ஆச ஆசையா சாப்ட்டுருப்பீங்க.... என்னமோ எல்லாம் பாத்த மாதிரியே சொல்ற, உனக்கு இதெல்லாம் தெரியுமான்னு கேக்குறீங்களா? பின்ன, நேத்துல இருந்து இந்த பக்கம் யாரையும் காணோம், இப்பவும் எட்டிப்பாப்பீங்களா மாட்டீங்களான்னு தெரியல, ஆனாலும் நான் என் கடமைய செய்து தானே ஆகணும்....

ஆனா ஒண்ணுங்க, நல்ல நாளும் அதுவுமா ஆன்-லைன்ல இல்லாம குடும்பத்தோட கொண்டாடுற எல்லோருக்கும் ஒரு பெரிய ஓ...... போட்டுக்குறேன் முதல்ல....

அப்புறம், இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, இத்தனநாள் என்னை பொறுத்துகிட்டு சகிச்சுகிட்டு, இருந்த உங்க எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

இத்தன நாள், எனக்கு ரொம்ப தெரிஞ்ச, அப்புறம் தெரியாத பதிவர்கள தேடி தேடி இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஆனா இப்போ அப்படி யாரையும் தேடி ஓடப் போறதில்ல... இங்கயே, நமக்குள்ள நல்லா அறிமுகமானவங்க எல்லாம் எப்படி தீபாவளி கொண்டாடுறாங்க, தீபாவளி பத்தி என்னதான் சொல்றாங்கன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டப் போறேன்.

அப்படி கொட்டுறதுக்கு முன்னாடி ஒரே ஒரு புதுமுக அறிமுகம்... ஆனா நான் கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணா அங்க அட்டனன்ஸ் போட்டுட்டாங்க. சோ அவருக்கு பழசு, நமக்கு புதுசு. இந்த ப்ளாக்ல அப்படி என்ன இருக்குனு கேக்குறீங்களா? 

திரைக்கதை முதல் திரைப்படம் வரை ஒரு கதைய அணுஅணுவா எப்படி உருவாக்குறதுன்னு சொல்லிக்குடுக்குறார். திரைக்கதை மேல ஆர்வம் இருக்குறவங்க வாங்களேன், ஒண்ணா கைக்கோர்க்கலாம்னு கூப்டுறார்... போய் தான் பாருங்களேன்.
கனவுப்பட்டறை 


இந்த தீபாவளி எதனால வந்துச்சு, எப்படி வந்துச்சு, அப்படின்னு ரொம்ப ரொம்ப சிம்பிளா விளக்குறாங்க மீரா அம்மா... கண்டிப்பா படிச்சு பாத்துடுவோம் 

சரி சரி, இப்போ தீபாவளி கவிதைகள்ல ரெண்டை பாக்கலாம்

ஒருநாள் அசுரன் அழிந்ததனால் திருநாள் தீபாவளி வந்திடுச்சாம்... அது ஏன்னு அருணா செல்வம் அண்ணா சொல்றாங்க, கேளுங்க கேளுங்க...

கூடவே நாம எப்போ என்ன பண்ணினா சிவக்குமார் அண்ணா நமக்கு தீவாளி வாழ்த்து சொல்வார்னு பாக்கலாம் வாங்க...

அப்புறம், தீபாவளிய கலகலப்பா கொண்டு போக வேணாமா? அதுக்கு தானே இவங்க எல்லாரும் இருக்காங்க. இவங்கன்னா யார் யாரு?

எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்சவங்க தாங்க... இவங்கள பத்தின அறிமுகம்னு எதுவுமே நமக்கு தேவையில்லை, அப்படி நான் ஏதாவது சொன்னா அது அதிகப்ரசங்கி தனமா தான் இருக்கும். அதனால கப்சிப்ன்னு வாய மூடிட்டு, லிங்க் மட்டும் தரேன், என்னன்னு நீங்களே பாருங்க...

அதுல பாருங்க, எல்லாருமே அவங்கவங்க அனுபவங்கள சொல்றாங்க, அதுவும் ரொம்ப ரொம்ப சுவாரசியமா சொல்றாங்க.... நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க, ஆனாலும் மறுபடியும் படிக்கலாம் வாங்க.

தீபாவளி: பொட்டுவெடி டூ பொக்ரான் குண்டு 

உல்லாசம் பொங்கும் இனிய தீபாவளி 

ஏப்பி டிவாலி

என்ன, இதெல்லாம் படிச்சிட்டீங்களா? இல்ல இனி தான் படிக்கனுமா? படிச்சிட்டீங்கனா சந்தோசம், மகிழ்ச்சி... இல்லனா படிச்சிடுங்க, ரொம்ப சந்தோசப்படுவேன்...

அப்புறம், மதியமா எல்லோர் வீட்லயும் கறிக்குழம்பு தான் விசேசமா இருக்கும். நல்லா சாப்பிடுங்க, சாப்ட்டுட்டு தெம்பா இருங்க, நாம அடுத்த பதிவுல பாக்கலாம்.