எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 21 மார்ச், 2014

Katayai heater, essential oil than the hatch



கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர்   என்னென்ன தேவை? 


கார்ன் ஃப்ளேக்ஸ் - 4 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
முந்திரிப் பருப்பு - 1/4 கப்,
திராட்சை - 1/4 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
சர்க்கரை (விரும்பினால்) - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள், உப்பு - தேவைக்கேற்ப,
பொரிப்பதற்கு- எண்ணெய்.

எப்படிச் செய்வது?  

கடாயை சூடாக்கி, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும், முதலில் கார்ன் ஃப்ளேக்ஸை கொஞ்ச கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுத்துபேப்பர் மேல் வைத்துக் கொள்ளவும். பிறகு, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை, வேர்க்கடலை என்று கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து எண்ணெய் வடிந்ததும் சூடாக இருக்கும் போதே அதன் மேல் உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

இந்த மிக்ஸரை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். பரிமாறும்போது தட்டு நிறைந்து இருக்கும்.வெறும் கடாயில் கார்ன்ஃப்ளேக்ஸை வறுத்து உடனே கலந்து பரிமாறவும்.

                            


  ஆரஞ்சு பழத்தின் ரகசியம்

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டுவந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச்சாறின் மருத்துவக் குணங்களையும்,  அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.
சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது.
மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருக்கமடைகிறது. தலைமுடியை நரைக்கச் செய்கிறது. இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்
வுடன் இருக்கச் செய்கிறது.
இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது.
இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் c-யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.      
மங்களூர் போண்டா
        Mix everything together except the oil in the oil porittetukka do it and do it at Gooseberry.



என்னென்ன தேவை?

தயிர் - 1 கப்,
மைதா - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
ரவை - 1/4 கப் (வறுத்தது),
சோடா உப்பு - சிறிதளவு,
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக அரிந்தது),
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் (சின்னதாக நறுக்கியது),
எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து நெல்லிக்காய் அளவில் கிள்ளிக் கிள்ளி எண்ணெயில் பொரித்தெடுக்க வும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

      மசாலா வேர்க்கடலை

    Keep dry groundnut dip filter. Mix all other ingredients and then soaked


      என்னென்ன தேவை?
      வேர்க்கடலை -100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
அரிசி மாவு - 10 கிராம்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
அம்சூர் தூள் (உலர்ந்த மாங்காய் தூள்) அல்லது எலுமிச்சைச்சாறு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காய்ந்த வேர்க்கடலையை நனைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து,  நனைத்த வேர்க்கடலையுடன் பிரட்டி மைக்ரோ வேவ் அவனில் பரப்பி ஒரு நிமிடம் வைக்கவும். பிறகு பிரித்து வைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மறுபடியும் 2  முதல் 3 நிமிடங்கள் வைக்கவும். கரகரப்பாக வறுபட்டதும், ஆறவைத்து ஒரு டப்பாவில் நிரப்பி வைக்கவும்

வெள்ளை கொண்டைக்கடலை வறுவல்

        Soak chickpeas for 8 hours. Drain and put it in a white cloth and leave to dry for a short time under the fan.


என்னென்ன தேவை? 

கொண்டைக்கடலை - 250 கிராம்,
எண்ணெய் தேவையான அளவு.

வெறும் கடாயில் வறுப்பதற்கு...

வறுத்த மசாலா தூள்,
மிளகு, சீரகம், உப்பு, தனியா, காய்ந்த மிளகாய் தூள்,
தனித் தனியாக வறுத்து பொடித்தது - தலா 2 டீஸ்பூன் அல்லது 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கு ஏற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்).
எப்படிச் செய்வது?  

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். அதை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் வைத்து ஃபேனுக்கு அடியில்  சிறிது நேரம் காய  விடவும். பிறகு ஒரு வாய் அகன்ற கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கொண்டைக்கடலையை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து, வடித்து ஒரு  பேப்பரின் மேல் போட்டு வைக்கவும். அது சூடாக இருக்கும்போதே டிரை ரோஸ்ட் செய்யவும் (எல்லாவற்றையும் கலக்கவும்). அந்த காரத் தூளை  கொண்டைக்கடலையின் மேல்தூவி, குலுக்கவும். கடலையின் மேல் மசாலா நன்கு ஒட்டிக் கொண்டு ஆறியதும் எடுத்து வைக்கவும்.

கொண்டைக்கடலையை கவனமாக, வெடிக்காதபடி மிதமான தீயில் பொரிக்க வேண்டும். 

மூன்று கலர் காரா பூந்தி

        Chickpea flour in a bowl, mix the rice flour, salt, baking soda, asafoetida, along with water and add to the flour term



என்னென்ன தேவை? 

கடலை மாவு - 2 கப்,
பச்சரிசி மாவு - 6 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை,
தரமான ஃபுட் கலர் 3 (எல்லா பெரிய கடைகளில் கிடைக்கும்).
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப,
வேர்க்கடலை - விரும்பினால் தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
பெருங்காயம் - சிறிது,
காஷ்மீரி மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?  

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவைக் கலந்து, உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயம், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக்  கலக்கவும். இதை மூன்று பாகமாக வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்தில் பச்சை கலர் சேர்த்து, ஒரு பாகத்தில்  காஷ்மீரி மிளகாய் சேர்த்து, ஒரு பாகத்தில் ஆரஞ்சு கலர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, எண்ணெயின்  மேல் காரா பூந்தி துளையிடப்பட்ட கரண்டியைக் கொண்டு ஒரு குழிக்கரண்டி முதல் பாகத்தை ஊற்றி தட்டிக் கொண்டே இருந்தால் பூந்திகள் விழுந்து  விடும். எண்ணெய் ஒலி குறையும் வரை வறுக்கவும்.

இப்படி முதல் பாகத்தை முடித்து விட்டு இரண்டாவது கலர் பாகத்தையும் மூன்றாவது கலர் பாகத்தையும் பொரித்து வடிக்கவும். ஒரு டிஸ்யூ பேப்பரின்  மேல் பொரித்தவற்றை வைத்து ஆறவிடவும். ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சூடாக இருக்கும்போதே சிறிது மிளகாய் தூள் சேர்த்துக்  கலந்து எண்ணெயில் வறுத்த முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து, வீட்டில் ஓமப் பொடி இருந்தால் அதையும் சேர்த்துக் கலந்து  பரிமாறவும்.                                                                                                                                      

மெதுவடை

        Dal soaked for 4 hours, as the ball skimmed the ground without even a drop of water, salt, green chillies Grind.


என்னென்ன தேவை?

முழு உளுத்தம் பருப்பு - 2 கப்,
உப்பு, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
எப்படிச் செய்வது?

உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வெண்ணைப் பந்து போல் அரைத்து, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து  அரைக்கவும். கறிவேப்பிலை தூவி வடைகளாகப் பொரித்தெடுக்கவும். மாவைப் புளிக்கவிடாமல் உடனே எண் ணெயில் பொரித்தெடுத்தால் மேலே  மொறுமொறுவென்றும், உள்ளே மெத்தென்றும் இருக்கும். எண்ணெய் குடிக்காத வடை ரெடி

வடை கறி

       Katalaipparuppai Soak 4 hours, pouring a little water to solid ground is a little karakarap.


என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 6 பல்,
பட்டை - 2,
சோம்பு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லி - 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கெட்டியாக சிறிது கரகரப்பாக அரைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பட்டை,  சோம்பு விழுதாக அரைக்க வேண்டும். மேற்கண்ட எல்லா சாமான்களையும் அரைத்த கடலைப் பருப்புடன் சேர்த்து கலந்து வைத்து, தேவையான  போது சிறிய சிறிய வட்டங்களாகத் தட்டி பொரித்து (நல்ல பொன்னிறமாக), தயாரான தக்காளி கறியுடன் (அடுத்த பக்கத்தில் செய்முறை உள்ளது)  கலக்க வேண்டும்.                                                                                                                                                                

சீரகத்தின் தாரக மந்திரம்

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம், ஆனால் அதனை எ‌ந்த ‌விடய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.
வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் தண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.                                                                                                       


   
சுவையுடன் சுகம் தரும் பிளம்ஸ்!

நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ்.
நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.
மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும்.
சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.
ரத்தத்தை சுத்தப்படுத்த
ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
ஜீரண சக்கியைத் தூண்ட
உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

ஆரோக்கியத்துடன் கூடிய பலம்

இந்த உலகில் மனிதனாக பிறந்தவன் பணம், புகழோடு வாழவிரும்புகிறானோ இல்லையோ நோயற்ற வாழ்வே வாழவிரும்புகிறான்.
அந்தவகையில் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு சத்தான உணவுகளுடன் சேர்த்து உடலுக்கு பலம் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும்.
இதோ நீங்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கான பலமான உணவுகள்,
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.
முருங்கை
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்துசம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிரங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வில்வம்பழம்
வில்வம்பழத்தின் சதை பாகத்தை எடுத்து அத்துடன் சீனி கற்கண்டை சேர்த்து கலந்து ஒரு கோலி உருண்டை அளவு காலை மட்டும் என இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலுபெறும்.. வில்வப்பழத்தை சாப்பிடும் காலத்தில் புளி காரம் சேர்க்க கூடாது.
வேப்பம்பூ
வேப்பம்பூ , நிலவேம்பு ஒரு அவின்ஸ், எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலகீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலகீனங்களும் சரியாகிவிடும்.
அரிசி
அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும்.
கல்யாண பூசணி
கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளைச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.
உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால் வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
நீண்ட நாள் வியாதியில் படுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும் ஆரஞ்சுதோல் சேர்த்து நீரும் தக்காளிபழ ரசமும் முன்றும் சமமாக கலந்து குடித்தால் அதீக சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.



Photo 1 of 6

வியாழன், 20 மார்ச், 2014


ஆறே கிழமைகளில் 9000 டொலரை மாத்திரம் செலவு செய்து பிரமாண்டமான வீடொன்றை நபரொருவர் நிர்மாணித்துள்ளார்.

தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வீடானது வழமையாக நாம் காணும் வீட்டின் தோற்றத்தை போன்றல்லாது குவிவு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் அரீன் என்பவரே இந்த வீட்டை நிர்மாணித்துள்ளார். இவர் தனது நண்பரான ஹஜார் கிப்ரன் என்பவரின் வீட்டிற்கு சென்றபோதே தனது கனவு இல்லம் பற்றி சிந்தித்துள்ளார். பின்னர் அதனை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வீடானது சீமெந்தாலும் செங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் அடிப்படை அலகுகளுக்கு மாத்திரம் 6000 டொலரை இவர் செலவிட்டுள்ளார். வீட்டை அழகு படுத்துவதற்கான தளபாட வசதிகள் உள்ளடங்கிய ஏனைய விடயங்களுக்கு 3000 டொலர் உள்ளடங்களாக மொத்தமாக 9000 ஆயிரம் ரூபாவை அவர் செலவு செய்துள்ளார்.


புதன், 19 மார்ச், 2014



தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைச்சு பண்ணதுதான் இந்த கோச்சடையான், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி, ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் படம் 'கோச்சடையான்'. ஏ ஆர் ரஹ்மான் இசையில், வாலி, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, சவுந்தர்யாவின் இயக்கத்தை மேற்பார்வையும் செய்துள்ளார். முரளி மனோகர் தயாரிக்க, ஈராஸ் நிறுவனம் இப்படத்தினை வெளியிடுகிறது. இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவைப் பார்க்கவும், வெளியில் ரஜினியைப் பார்க்கவும் திரண்டிருந்த கூட்டம் வரலாறு காணாதது என்றால் மிகையல்ல. சத்யம் அரங்குக்கு பக்கத்திலிருந்த கட்டிடங்களிலெல்லாம் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஷாரூக்கான், கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கோச்சடையான் படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இது கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா அல்ல. இப்படம் உருவாவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லும் விழா. இப்போ நான் நிறைய பேசுறத விட, இந்த படத்தோட வெற்றி விழாவில் நான் நிறையப் பேசப்போகிறேன். முதல்ல இந்த படம் இப்படி உருவாகும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்ப இஷ்டம். ரொம்ப பிடிக்கும். 150 படங்கள் நான் பண்ணியிருந்தால்கூட, ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்துக்கிட்டே இருந்தது. இனிமேல் எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை. எனக்கு ஆண்டவன் புண்ணியத்தில் எல்லாமே நீங்க கொடுத்திருக்கீங்க.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில் கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் ராணா படம் தொடங்கினேன். அந்தப் படத்தோட கதையை நான் 20 வருஷமா மனசுக்குள்ள வச்சிருந்தேன். அந்தப் படம் தொடங்கின நேரத்துல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சு அப்படிங்குறது உங்களுக்கே தெரியும்.

ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பினாலும், ராணா கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியாம போச்சு. ஒரு நாள் முரளி மனோகர் எனக்கு போன் பண்ணி ராணாவுக்கு மேலே கே.எஸ்.ரவிகுமார் கோச்சடையான் அப்படினு ஒரு கதை பண்ணியிருக்கார். கேட்டுப் பாருங்கனு சொன்னாங்க. இப்போ பண்ண முடியாதே, 2 வருஷமாவது ஆகுமே அப்படினு சொன்னேன். இல்ல. நீங்க முதல்ல கேளுங்க. அதை எப்படி பண்ணலாம்னு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க. சரி கேட்கிறேனு கேட்டேன்.

ராணாவே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. ராணாவை விட எனக்கு கோச்சடையான் கதை ரொம்ப பிடிச்சது. நல்லாயிருக்கு ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கேட்டேன். நீங்க சரினு சொன்னீங்கன்னா ஒரு ஐடியா இருக்கு. சுல்தான்னு ஒரு படம் ஏற்கனவே சௌந்தர்யா பண்ணியிருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும், ரொம்ப பெருசா பண்ணனும் முடிவு பண்ணினேன். இந்தப் படத்தைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பேர்கிட்ட கேட்டேன், பேசினேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகுமேனு சொன்னாங்க. இல்ல. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு சொன்னாங்க.

உடனே சவுந்தர்யாகிட்ட பேசினேன். என்னம்மா... பெரிய பொறுப்பு இருக்குமே. பண்ண முடியுமானு கேட்டேன். நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம்தான். இந்தப் படத்துக்கு பட்ட கஷ்டத்தை வாயால எல்லாம் சொல்ல முடியாது.

இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்குன்னா அதற்கு உழைச்சவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

இதைவிட பெரிசாக இசை வெளியீட்டு விழாவை நடத்தத்தான் முடிவு செய்திருந்தார்கள். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். படத்தின் வெற்றிவிழாவை மிகப் பெரிய அளவில், எஸ்.பி.முத்துராமன் சார் கேட்டுக் கொண்ட மாதிரி நடத்தலாம்.

சவுந்தர்யா, ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப அவங்க படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர் தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, அவங்களை ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
இன்னும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும். அதே நேரத்தில், குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு ஆகுற வரைக்கும் நல்லா பாத்து வளர்த்துட்டு, அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி சவுந்தர்யாவைக் கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்றுக்கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படின்னு நான் சொல்லியிக்கிறேன் என்றார்.




நடிகர்               : ஜெயம் ரவி
நடிகை             : அமலாபால்
இயக்குனர்     : சணித்திரகனி
இசை                : ஜீ.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு    : சுகுமார்

நாசர் நடத்தும் ஆசிரமம் ஒன்றில் தங்கி படித்து வரும் ஜெயம் ரவி, படிப்பு முடிந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனசுக்குள் பொங்கி எழும் ஜெயம் ரவி ஒருநாள், சிக்னலில் டிராபிக் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறார். எல்லா பேப்பர்களும் சரியாக இருந்தும் பைன் கட்டச் சொல்கிறார் டிராபிக் பொலிஸ். இல்லையென்றால் 100 ரூபாய் இலஞ்சமாக கேட்கிறார்.

ஆனால், இலஞ்சம் கொடுக்க ஜெயம் ரவி மறுக்கிறார். அதனால், நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாகிறது. அங்கு நீதிமன்றத்தில் தன்னிடம் இலஞ்சம் கேட்ட எல்லோரையும் மாட்டிவிடுகிறார். இதனால், அந்த அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஜெயம் ரவியை அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

ஆனால், அசராத ஜெயம் ரவி ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட புது திட்டம் தீட்டுகிறார். அதாவது, இல்லாத ஒரு ஆளுக்காக அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் நல்ல அதிகாரிகளின் துணையோடு பெறுகிறார். இதற்காக இலஞ்சம் கொடுத்ததை வீடியோவும் எடுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ ஆதாரத்தை கோபிநாத் உதவியுடன் டிவி சேனலில் ஒளிபரப்புகிறார். இதில், டாக்டர், நீதிபதி, பொலிஸ், எம்.பி. என 147பேர் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் ணின்னாலும், சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ஜெயம் ரவி. இதனால், கொதிப்படைந்த அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க ணிடிவெடுக்கின்றனர். இறுதியில் ஜெயம் ரவியை அவர்கள் பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இலஞ்சத்துக்கு எதிராக தமிழில் வெளிவந்த இந்தியன், சாணிராய், சிட்டிசன், அந்நியன் ஆகிய திரைப்படங்களில் வரிசையில் நிமிர்ந்து நில் படமும் நிற்கிறது. ஜெயம் ரவி ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு வேடங்களில் வரும் இவர், இரண்டிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜில் அசத்தியிருக்கிறார்.

அமலாபாலுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. ஹீரோவை காதலிக்கவும், டூயட் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். இவர் இல்லாவிட்டாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாதது போன்றே இருக்கிறது. கருப்புத் தங்கம் என்ற பட்டப்பெயரோடு அறிணிகமாகும் சூரி காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.
சரத்குமார், கோபிநாத் ஆகியோர் திரைப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, பிற்பாதியில் ஏனோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

தனி மனிதன் திருந்தினால் தான் நாடு திருந்தும் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சணித்திரகனி. இதில், கொலை, ரத்தம் எதுவும் காட்டாமல் இருந்தது கொஞ்சம் நிம்மதியை தருகிறது.

சணித்திரக்கனியின் முந்தைய படமான நாடோடி படத்தை ஒப்பிடும்போது, இது கொஞ்சம் சறுக்கல்தான். ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறார் சுகுமார் ஜீவன் ஆகியோரின் ஒளிப்பதிவு கஷக்கல். மொத்தத்தில் நிமிர்ந்து நில் துணிந்து செல்லும். (மாலைமலர்)
                                                 

ராஜாவின் சங்கீத திருநாள் இசை நிழ்ச்சி

2 of 28
Cine Vila Raajavin Sangeetha Thirunaal Music Show Stills
நிகழ்ச்சியை காண அலை கடலாய் திரண்ட மக்கள் கூட்டம்.
2 of 28
                                                                                                                                                                                                                              

திங்கள், 17 மார்ச், 2014

Aarakshan bollywood movie photos (1)

Kadhal Solla Aasai Movie Stills - Image 1 of 18

வானில் பறந்த பாம்புகள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு

அமெரிக்காவிலுள்ள வேர்ஜினியா வன பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் பறக்கும் பாம்புகள் சிலவற்றை தமது ஆராய்ச்சியின்போது அவதானித்துள்ளனர்.

ஆசிய மழைக் காட்டுப் பகுதியில் பாம்புகள் உடலை விரித்து தட்டையாக்கி பறப்பதை தாம் கண்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தனது உடலை வடிவாக்கி 100அடி உயரமான மரங்களிலிருந்து அவை வானில் மிதந்தன. பார்ப்பதற்கு அவை வானில் நீந்துவது போல தெரிந்தது' என கலாநிதி ஜேக் செர்ச்சா கூறியுள்ளார்.

'விமானம் ஒன்றின் வடிவம் விமானத்தை உயர்த்தும் விசையை வழங்குவது போலவே பாம்புகள் தமது உடல் வடிவத்தை மாற்றியமைத்து காற்றில் மிதக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.