எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 15 மார்ச், 2014

Anjaan Tamil Movie Stills

ஜில்லா

  • நடிகர் : விஜய், மோகன் லால்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :நேசன்
  
Bookmark and Share




தயாரிப்பாளர் சூப்பர் குட் ஆர்.பி. சௌத்ரியின் 25 ஆண்டு கால திரைப்பட தயாரிப்புபணியில் 85வதாக தயாராகி வெளிவந்திருக்கும் திரைப்படம், காவலன், நண்பன், துப்பாக்கி ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து தலைவா தோல்விக்குப்பின் வெளிவந்திருக்கும் விஜய்யின் 56வது திரைப்படம், புதியவர் ஆர்.டி. நேசனின் இயக்கத்தில் முதல் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ஜில்லா!

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் ஜில்லா வின் மீதிக்கதை!

இளைய தளபதி விஜய், தனக்கே உரிய ஸ்டைலில் சக்தியாக சக்தி காட்டியிருக்கிறார். மோகன்லால் - பூர்ணிமா மீதான அப்பா அம்மா பாசத்திலாகட்டும், மகா - நிவேதா, விக்வேஷ் - மகத் மீதான சகோதர பாசத்திலாகட்டும், வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடியிலாகட்டும், காஜல் அகர்வாலுடனான காதலில் ஆகட்டும் அனைத்திலும் ஸோ குட் சக்தி - விஜய்!

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

மோகன்லால் கிட்டத்தட்ட விஜய்யின் காவலன் படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்றாலும்.. விஜய் மாதிரியே இந்த சிவன் பக்கத்தில் நின்னு பார்த்திருப்ப.. எதிர்த்து நின்னு பார்க்குறியா.. என்றும், இந்த சிவன் கால் படுற இடம் மட்டுமல்ல, நிழல் படுற இடம் கூட எனக்கே சொந்தமாயிரும் என்றும் அடிக்கிற டயலாக்குகளில் தியேட்டர் அதிர்கிறது. அவர் விஜய்யுடன் போடும் ஆட்டங்களும் சூப்பர்ப்!

காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

கணேஷ் ராஜவேலின் ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். டி. இமானின் இசையில் பாடல்கள் எட்டு ( கரோக்கி டிராக்குகள் உட்பட) அத்தனையும் குட்டு! ஆர்.டி. நேசனின் எழுத்து, இயக்கத்தில் முன்பாதி சற்றே ஜவ் வாக இழுத்தாலும், பின்பாதி பரபரப்பாக பட்டையை கிளப்பி இருக்கிறது. விஜய் அ.தி.மு.க., பார்டர் போட்ட டி. சர்ட்டுடன் ஒரு பாடலில் ஆடுவது, லாஜிக் இல்லாமல் போலீஸ் ஆவது... உள்ளிட்ட காமெடிகள் இருந்தாலும், ஜில்லா - நல்லாவே இருக்கிறது. ஆனாலும் இயக்குநர் பார்ட் 2 பில்டப்புடன் படத்தை முடித்திருப்பது கொஞ்சம் ஓவர்!
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : அமலா பால்
  • இயக்குனர் :சமுத்திரக்கனி
  
Bookmark and Share


பி.சமுத்திரகனியின் இயக்கத்தில், சமூகபொறுப்புணர்வுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''நிமிர்ந்து நில்''. பொதுவாக இதுமாதிரி சமூகத்திற்கு பாடம் சொல்லும் நற் கருத்துடைய திரைப்படங்கள், போதனையாக, சோதனையாக... போரடிக்கும்! ஆனால் பெரும் சாதனையாக சமுத்திரகனியின் 'நிமிர்ந்து நில்' திரைப்படம், தியேட்டரில் சீட்டு நுனியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆரம்பகாட்சி முதல் இறுதிகாட்சி வரை கண்கொட்டாமல் கை தட்டவைப்பது தான் ஹைலைட்!

கதைப்படி, அரவிந்த் சிவசாமி எனும் ஜெயம் ரவி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழத்தெரியாமல் சட்டத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ஒருநாள் அறை நண்பரும், அலுவலக நண்பருமான சூரி உடன் இல்லாமல் பைக்கில் வேலையாக கிளம்பும் ஜெயரம் ரவி, லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும் டிராபிக் போலீஸ் எதிர்பார்க்கும் காந்தி தாள் தராததால் போலீஸ், கோர்ட், கேஸ் என ஏகத்துக்கும் அலைகழிக்கப்படுகிறார். டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் அரவிந்த் சிவசாமி அதாங்க, ஜெயம் ரவி, இச்சயமத்தில் தன்னை லஞ்சம் தந்து காபந்து செய்த ஆரூயிர் நண்பர் சூரியையும், அவருக்கு ஐடியா தரும் (ஜெயம் ரவியை ஒரு தலையாக காதலித்த படி) அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே 'பகீர்' என்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன? ஜெயம் ரவி அதிகார வர்க்கத்தால் சட்டத்திற்கு புறம்பாக செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி, அமலாபால் மற்றும் கோர்ட்டில் ஜெயம் ரவியின் நேர்மை கண்டு ஈர்க்கப்பட்ட வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர். இவர்களது கனிவாலும், கவனிப்பாலும் விரைந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்தமுறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி! இதில் நமக்கெதுக்கு வேண்டாத வேலை... என வெகுண்டெழும் அமலாபால், தான் ரவியின் நேர்மைகண்டு ஆறுமாத காலமாக ரவிக்கே தெரியாமல் ரவியை பின்தொடர்ந்து, அவரை காதலிக்கத் தொடங்கியவர் என்பதையும் மறந்து அரவிந்த் சிவசாமி 'அலைஸ்' ஜெயம் ரவியை பிரிகிறார். ஜெயம் ரவி அதுப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சூரி, வக்கீல் சுப்பு பஞ்சு, நேர்மையான ஏட்டு தம்பி ராமைய்யா, உண்மை டிவி. அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் ஆப்பு வைக்கிறார். அதில் ரவியை அடித்து துவைத்த போலீஸ்காரர்களும் அடக்கம்!

பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நமத்து போகச் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? அமலாபாலும் அவரது காதலும் என்னவாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது 'நிமிர்ந்து நில்' படத்தின் மீதிக்கதை!

ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு பரிமாணங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, ஊழல் எதிர்ப்பாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் அநியாயங்களை கண்டு அவர் பொங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. வளைந்து கொடுத்து போகத்தெரியாதவனை வாழத்தெரியாதவன் என சிரிப்பது தானே நம் இயல்பு, அப்படித்தான் சிரிக்கிறோம்... ஆரம்பகாட்சிகளில் ஜெயம் ரவியை பார்த்து, ஆனால் அதன்பின் அவர் எடுக்கு அவதாரங்களும், விஸ்வரூபங்களும் தான் 'நிமிர்ந்து நில்' படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் விஷயங்கள்! வாவ், ஜெயம் ரவி வாயிலாக இயக்குநர் சமுத்திரகனி தெரிகிறார், என்ன துடிப்பு, என்ன நடிப்பு!

ஆந்திரா, ராஜமுந்திரி - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்! ஆனாலும் 'ஆதிபகவன்' ஜெயம் ரவிகளின் மேனரிஸங்கள் இரண்டு ரவிகளிடமும் இந்தப்படத்திலும் இருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! (ஆனாலும் 'ஆதிபகவன்' தோல்வியையும், 'நிமர்ந்து நில்' வெற்றி ஜெயம் ரவிக்கு ஈடுகட்டிவிடும் என்பது சிறப்பு!)

''உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்...'' என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருக்கிறது. ஆனால், அதேநேரம் ரவியுடன், அமலாபால் திரும்ப சேருவது அமலாவின் அப்பாவும், ஊழல் பேர்வழிகளில் ஒருவர் என்பது தெரிந்ததும் வீட்டில் போராடுவது அமலாவின் பாத்திரத்திற்கும், படத்திற்கும் வலு சேர்க்கின்றன!

சூரி, இப்போதெல்லாம் கடிப்பதில்லை... கலாய்க்கிறார், ஜமாய்க்கிறார் என்பது 'நிமிர்ந்து நில்' படத்திற்கும் பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, 'இன்ஸ்' இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதனால் 'நிமிர்ந்து நில்' படமும் பளிச்சிடுகிறது!

எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் இமாலய வெற்றி!

''அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவங்களுக்கு தப்பா ரூட் போட்டு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்!'' என்பது உள்ளிட்ட இன்னும் பல அனல் பறக்கும் வசனங்களில் நம்மை கவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் காரை பறக்கவிட்டு டி.வி. லைவ் ரிலே டிரையிலர் லாரியை மோத விடுவதும், ஜெயம் ரவிகளை தேவை இன்றி மோதவிடுவதையும் தவிர்த்திருந்தார் என்றால் 'நிமிர்ந்து நில்' இன்னும் 'தில்'லாக இருந்திருக்கும்! ஆனாலும், ''நிமிர்ந்து நில்'' - ''சமுத்திரகனியின் - தில்'' - ''ரசிகர்களின் நெஞ்சில்!''

ManaTelugu.in - Telugu Daily Serials | Movies | Shows | News | Galleries and Many More

ManaTelugu.in - Telugu Daily Serials | Movies | Shows | News | Galleries and Many More

        Government Gazette
YEARMONTH
DATE
2014Archives
2001
2002

2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
January0310172431
February07132128 
March0714   
April     
May     
June     
July     
August     
September     
October     
November     
December     
                    

வெள்ளி, 14 மார்ச், 2014

உலகின் முதற்பணக்கார கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகின் முதற்பணக்கார கால்பந்து வீரராக, போர்த்துக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலை பெற்றுள்ளார். நீண்ட நாட்களாக இந்த சாதனையை வைத்து இருந்த இங்கிலாந்து அணியின்  முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் தொழில்சார் கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலமே கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலையைப் பெற்றுக்கொண்டார். 
 
122 மில்லியன் பவுண்டுகளை 2013ஆம் ஆண்டின் வருமானமாக இவர் பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் கழக அணியின் ஒப்பந்தம் மற்றும் நைக்கி நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் மூலமே இந்த வருவாயைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டேவிட் பெக்காம் ஓய்வு பெறும்போது அவரின் வருமானம் 165 மில்லியன் பவுண்டுகளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 120.5 மில்லியன் பவுண்டுகளை வருமானமாக கொண்ட அர்ஜென்டினா வீரர் லியனொல் மெஸ்சி இரண்டாம் இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Rajinikanth, Kamal, Vijay, Ajith, Amitabh Bachchan at 100 Years of India...

Sun Singer | Ep- 25 | Dt 21-07-13

Sun Singer | Ep-3 | Dt 10-02-13

Sun Singer | Ep-2 | Dt 03-02-13

Sun Singer | Ep-14 | Dt 05-05-13

Natchathira Kondattam | Dt 01-05-13

Diwakar sings Aarariraro

Neeyae Unakku Endrum by SS10 Diwakar (+பட்டியல்)

ஞாயிறு, 9 மார்ச், 2014

நட்சத்திரங்களைப் போல் நீங்களும் பெயரை மாற்றித்தான் பாருங்களேன்!......


நடிகர், நடிகைகள் படங்களில் நடிக்க வரும்போது சிலர் அதே பெயரில் நடிக்கிறார்கள், சிலர் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு நடிக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்டைலுக்காக பெயரை மாற்றுகிறார்கள், சிலர் நியூமராலஜிக்காக மாற்றுகிறார்கள். அப்படி பெயரை மாற்றிய நட்சத்திரங்களை இப்பொழுது பார்க்கலாமா?....
விழுப்புரம் சின்னையா பிள்ளை தான் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர்.
காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நிஜ பெயர் ராமசாமி கணேசன்.
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.
நவரச நாயகன் கார்த்திக்கின் இயற்பெயர் முரளி கார்த்திகேயன்
சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்.
ரேவதியின் இயற்பெயர் ஆஷா கோளுன்னி குட்டி.
நதியாவின் நிஜப் பெயர் ஜரீனா மொய்டு.
குஷ்புவின் உண்மையான பெயர் நக்கத் பேகம்.
சிம்ரனின் நிஜப் பெயர் ரிஷிபாலா.
சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா.
தொடை அழகி ரம்பாவின் பெயர் விஜயலக்ஷ்மி.
உதட்டழகி ரோஜாவின் பெயர் லதா.
புன்னகை செல்வி சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு.
தேவயாணியின் இயற்பெயர் சுஷ்மா ஜெயதேவ்.
நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்
                                                                                                                                                                                             

நான் சிகப்பு மனிதன்

  • நடிகர் : விஷால்
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :திரு
Thumbnail View