தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)
பொங்கல் ஸ்பெஷல்"
தேவையான பொருட்கள்:
1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது)
3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி
750 கிராம் சீனி
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
1 லீற்றர் எண்ணை
சிறிதளவு தேசிப்புளி
செய்முறை
முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும்.
வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும்.
எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊறவைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து மைபோல அரைத்து எடுக்கவும்.
பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக பிளிந்து விடவேண்டும்.
பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி வைக்கவும். அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.
குறிப்பு:
உழுந்தினை அரைத்து அதிக நேரம் வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.
பாகு மிகுதியாக இருந்தால் அதனை தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் ஊற்றிவிடலாம். மறுநாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
மிகவும் எளிதானதும் இலகுவானதும் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி.
தீபாவளி ஸ்பெஷலாக செய்து பரிமாறி உண்டு மகிழலாம்.

0 கருத்து(கள்)
பூந்தி லட்டு - 30 உருண்டைகள்
பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
250 கிராம் கடலைமா
400 கிராம் சீனி
50 கிராம் பெரிய கல்லுசீனி
100 கிராம் கயு
25 கிராம் ஏலக்காய்
1/2 லீற்றர் எண்ணை
8 கப் தண்ணீர்
1/2 சுண்டு அவித்த கோதுமை மா
சிறிதளவு உப்பு
1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
மஞ்சள் கலறிங்
250 கிராம் கடலைமா
400 கிராம் சீனி
50 கிராம் பெரிய கல்லுசீனி
100 கிராம் கயு
25 கிராம் ஏலக்காய்
1/2 லீற்றர் எண்ணை
8 கப் தண்ணீர்
1/2 சுண்டு அவித்த கோதுமை மா
சிறிதளவு உப்பு
1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
மஞ்சள் கலறிங்
செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.
பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.

அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள எண்ணெயில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (மாவை விடும்போது எண்ணெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாகவோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)
தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.
பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு எண்ணை வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.
பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கஜூவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் சீனியை 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்த பாணி காச்சவும். பாணிடை தண்ணீரக்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.
அத்துடன் கயு ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு பூந்தியில் சேரும்வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும். கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரவலாக அடுக்கவும். பின்னர் அதற்கு மேல் பெரிய கல்லுச் சீனியை தூவி அழகுபடுத்தி பரிமாறலாம்.
பூந்தியை பொரிப்பதற்கு என்ன எண்ணெய் என்றாலும் பாவிக்கலாம். நெய் விஷேசமானது. இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். ஆனால் நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.
பச்சைக் கற்பூரம் இந்தியாவில் சேர்ப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர் பாவிப்பதாக தெரியவில்லை. கராம்பு அனேகம் பேருக்குப் பிடிக்கும். பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்னையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை.

உங்களுக்குத் தேவையான உருண்டைகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்
றவ்வை லட்டு - 30 உருண்டை
பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
1 சுண்டு றவ்வை
1சுண்டு சீனி
அரை ரின்பால்
1 சுண்டு தேங்காய் பூ
1 சுண்டு வெள்ளை அரிசி
அரை சுண்டு எள்ளு
50 கிராம் அவிக்காத கோதுமைமா
50 கிராம் ஏலக்காய்
செய்முறை
றவ்வை, தேங்காய்ப்பூ, எள்ளு என்பவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
சீனியை அரைத்து எடுக்கவும்.பின்னர் வறுத்து எடுத்தவற்றை தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த றவ்வை, அரைத்த சீனி, அரைத்த எள்ளு, அரைத்த தேங்காய்பூ, ஏலக்காய் பவுடர் போட்டு ரின்பால் சேர்த்து நன்றாக கலக்கவும். (உருட்டும் பதம் வரவில்லையென்றால் சிறிது கொதிநீர் சேர்க்கலாம்)

பின்னர் அக்கலவையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்து எடுத்தவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
வெள்ளை அரிசியை ஊறவைத்து மாவாக அரைத்து எடுக்கவும். பின்னர் அதனுடன் அவிக்காத கோதுமைமாவையும் தண்ணீர் சேர்த்து தடித்த கலவைபோல் எடுத்து , அவ் உருண்டைகளை அவ் மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்து எடுத்து ஆறியபின்னர் பரிமாறலாம்.
பேரீச்சம்பழக் கேக்
தேவையானபொருட்கள்
400 கிராம் றவ்வை
350 கிராம் சீனி
250 கிராம் மாஜரீன்
400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது)
250 கிராம் முந்திரிகை வற்றல்
1/2 ரின் அன்னாசி
1/2 ரின் ரின்பால்
5 முட்டை
50 கிராம் இஞ்சி
1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்)
1 மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர்
1 மேசைக்கரண்டி வனிலா
50 கிராம் கஜூ
செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும்.
அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஊறவைத்த சேர்வையை கசக்கி தனியாக அடித்து கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். அன்னாசியையும் சிறு துண்டுகளாக்கி அதனுள் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியில் றவ்வை, பேக்கிங்பவுடர், வனிலா போன்றவற்றை தனியாக கலக்கிய பின்னர் அதனுள் சேர்த்து கொள்ளவும்.
அத்துடன் கயு, முந்திரியை வற்றல் என்பவற்றையும் சேர்த்து கலக்கிய பின்னர் 175 பாகையில் 30 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும்.
(குறிப்பு: இஞ்சியை அரைத்து தேயிலை சாயத்தினுள் ஊறவைத்து பின்னர் தும்பு இல்லாது வடித்து சாயத்தை எடுத்தும் பயன்படுத்தலாம்).

மஸ்கெற் (கோதுமை அல்வா) - 50 துண்டுகள்
பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
750 கிறாம் கோதுமை மா
1 கிலோ சீனி
1/6 லீற்றர் எண்ணை
75 கிராம் முந்திரிப்பருப்பு
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)
செய்முறை
கோதுமைமாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக குளைத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வைத்து அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் மறுநாள் அம்மாக் கலவையை ஊறவைத்த தண்ணீருல் சிறிது சிறிதாக சேர்த்து கரைத்து துணியில் வடித்து பாலாக எடுக்கவும்.
பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை உருக விடவும் . சீனி நன்றாக உருகியதும் அதனுள் அம்மாப் பாலை ஊற்றி கட்டி படாது தொடர்ந்து கிண்டவும்.
கலவை ஒட்டும் பதம் வரும் போது எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும் திரள தொடங்கும் போது அதனுள் முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிண்டவும்.
கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்

உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்
தொதல் - 50 துண்டுகள்
தேவையான பொருட்கள்
1 சுண்டு பச்சையரிசி
5 தேங்காய் (அல்லது ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை)
ஏலக்காய்ப்பொடி சிறிதளவு
200 கிராம் கஜு
1 கிலோ சீனி (4 சுண்டு)
3 மேசைக் கரண்டி சவ்வரிசி (பதிலாக வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்)
250 கிராம் சக்கரை
செய்முறை
அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்து கொள்ளவும். முழு தேங்காளாயின் துருவி முதல் பால் தனியாகவும் மற்றைய பாலை தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிளிந்து எடுக்கவும்.
அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ் தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன் கலந்து வைக்கவும்.
பின்னர் வாய் அகன்ற கனமான பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால், சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து 2 மணித்தியாலம் வரை கிண்டவும்.
கலவை திரள தொடங்கியதும் மிகுதியாயுள்ள 6 ரின் தேங்காய்ப்பாலை அல்லது முதல்பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டவும். அத்துடன் தூளாக வெட்டிய கஜூவையும் பொடி செய்த ஏலக்காயையும் போட்டு கெட்டியாகும் வரை கிளறவும்.
பின்னர் கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி கொட்டி ஆறவிடவும். பின்னர் மறுநாள் வெட்டி பரிமாறலாம்.