எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 14 ஜனவரி, 2013


தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)



PDF
பொங்கல் ஸ்பெஷல்"
தேவையான பொருட்கள்:
1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது)
3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி
750 கிராம் சீனி
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
1 லீற்றர் எண்ணை
சிறிதளவு தேசிப்புளி


செய்முறை
முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும்.

வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும்.
எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊறவைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து மைபோல அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக   பிளிந்து விடவேண்டும்.

பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி வைக்கவும். அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.

குறிப்பு:
உழுந்தினை அரைத்து அதிக நேரம் வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.

பாகு மிகுதியாக இருந்தால் அதனை தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் ஊற்றிவிடலாம். மறுநாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மிகவும் எளிதானதும் இலகுவானதும் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி.
தீபாவளி ஸ்பெஷலாக செய்து பரிமாறி உண்டு மகிழலாம்.

பூந்தி லட்டு - 30 உருண்டைகள்

பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள் 
250 கிராம் கடலைமா
400 கிராம் சீனி
50 கிராம் பெரிய கல்லுசீனி
100 கிராம் கயு
25 கிராம் ஏலக்காய்
1/2 லீற்றர் எண்ணை
8 கப் தண்ணீர்
1/2 சுண்டு அவித்த கோதுமை மா
சிறிதளவு உப்பு
1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
மஞ்சள் கலறிங்
செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.

பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.
அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள எண்ணெயில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (மாவை விடும்போது எண்ணெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாகவோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)
தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.
பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு எண்ணை வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.
பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கஜூவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் சீனியை 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்த பாணி காச்சவும். பாணிடை தண்ணீரக்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.
அத்துடன் கயு ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு  பூந்தியில் சேரும்வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும். கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரவலாக அடுக்கவும். பின்னர் அதற்கு மேல் பெரிய கல்லுச் சீனியை தூவி அழகுபடுத்தி பரிமாறலாம்.
பூந்தியை பொரிப்பதற்கு என்ன எண்ணெய் என்றாலும் பாவிக்கலாம். நெய் விஷேசமானது. இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். ஆனால் நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

பச்சைக் கற்பூரம் இந்தியாவில் சேர்ப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர் பாவிப்பதாக தெரியவில்லை. கராம்பு அனேகம் பேருக்குப் பிடிக்கும்.  பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்னையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை.
குறிப்பு:
உங்களுக்குத் தேவையான உருண்டைகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்

றவ்வை லட்டு - 30 உருண்டை


E-mailPrintPDF
பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
1 சுண்டு றவ்வை
1சுண்டு சீனி
அரை ரின்பால்
1 சுண்டு தேங்காய் பூ
1 சுண்டு வெள்ளை அரிசி
அரை சுண்டு எள்ளு
50 கிராம் அவிக்காத கோதுமைமா
50 கிராம் ஏலக்காய்

செய்முறை
றவ்வை, தேங்காய்ப்பூ, எள்ளு என்பவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
சீனியை அரைத்து எடுக்கவும்.பின்னர் வறுத்து எடுத்தவற்றை தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த றவ்வை, அரைத்த சீனி, அரைத்த எள்ளு, அரைத்த தேங்காய்பூ, ஏலக்காய் பவுடர் போட்டு ரின்பால் சேர்த்து நன்றாக கலக்கவும். (உருட்டும் பதம் வரவில்லையென்றால் சிறிது கொதிநீர் சேர்க்கலாம்) 
பின்னர் அக்கலவையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்து எடுத்தவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
வெள்ளை அரிசியை ஊறவைத்து மாவாக அரைத்து எடுக்கவும். பின்னர் அதனுடன் அவிக்காத கோதுமைமாவையும்  தண்ணீர் சேர்த்து தடித்த கலவைபோல் எடுத்து , அவ் உருண்டைகளை அவ் மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்து எடுத்து ஆறியபின்னர் பரிமாறலாம்.  

பேரீச்சம்பழக் கேக்

தேவையானபொருட்கள்
400 கிராம் றவ்வை
350 கிராம் சீனி
250 கிராம் மாஜரீன்
400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது)
250 கிராம் முந்திரிகை வற்றல்
1/2 ரின் அன்னாசி
1/2 ரின் ரின்பால்
5 முட்டை
50 கிராம் இஞ்சி
1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்)
1  மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர்
1 மேசைக்கரண்டி வனிலா
50 கிராம் கஜூ

செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும்.
அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஊறவைத்த சேர்வையை கசக்கி தனியாக அடித்து கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். அன்னாசியையும் சிறு துண்டுகளாக்கி அதனுள் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியில் றவ்வை, பேக்கிங்பவுடர், வனிலா போன்றவற்றை தனியாக கலக்கிய பின்னர் அதனுள் சேர்த்து கொள்ளவும்.
அத்துடன் கயு, முந்திரியை வற்றல் என்பவற்றையும் சேர்த்து கலக்கிய பின்னர் 175 பாகையில் 30 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும்.

(குறிப்பு: இஞ்சியை அரைத்து தேயிலை சாயத்தினுள் ஊறவைத்து பின்னர் தும்பு இல்லாது வடித்து சாயத்தை எடுத்தும் பயன்படுத்தலாம்). 


மஸ்கெற் (கோதுமை அல்வா) - 50 துண்டுகள்


E-mailPrintPDF

பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
750 கிறாம் கோதுமை மா
1 கிலோ சீனி
1/6 லீற்றர் எண்ணை
75 கிராம் முந்திரிப்பருப்பு
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை
கோதுமைமாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக குளைத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வைத்து அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் அம்மாக் கலவையை ஊறவைத்த தண்ணீருல் சிறிது சிறிதாக சேர்த்து கரைத்து துணியில் வடித்து பாலாக எடுக்கவும்.

பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை உருக விடவும் . சீனி நன்றாக உருகியதும் அதனுள் அம்மாப் பாலை ஊற்றி கட்டி படாது தொடர்ந்து கிண்டவும்.

கலவை ஒட்டும் பதம் வரும் போது எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும் திரள தொடங்கும் போது அதனுள் முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிண்டவும்.

கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்
குறிப்பு:
உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்

தொதல் - 50 துண்டுகள்


E-mailPrintPDF
தேவையான பொருட்கள்
1 சுண்டு பச்சையரிசி
5 தேங்காய் (அல்லது ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை)
ஏலக்காய்ப்பொடி சிறிதளவு
200 கிராம் கஜு
1 கிலோ சீனி (4 சுண்டு)
3 மேசைக் கரண்டி சவ்வரிசி (பதிலாக வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்)
250 கிராம் சக்கரை

செய்முறை
அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்து கொள்ளவும். முழு தேங்காளாயின் துருவி முதல் பால் தனியாகவும் மற்றைய பாலை தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிளிந்து எடுக்கவும்.
அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ் தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன் கலந்து வைக்கவும்.

பின்னர் வாய் அகன்ற கனமான பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால், சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து 2 மணித்தியாலம் வரை கிண்டவும்.

கலவை திரள தொடங்கியதும் மிகுதியாயுள்ள 6 ரின் தேங்காய்ப்பாலை அல்லது முதல்பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டவும். அத்துடன் தூளாக வெட்டிய கஜூவையும் பொடி செய்த ஏலக்காயையும் போட்டு கெட்டியாகும் வரை கிளறவும்.

பின்னர் கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி கொட்டி ஆறவிடவும். பின்னர் மறுநாள் வெட்டி பரிமாறலாம்.
குறிப்பு:
உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013


விமானம் பறப்பது எப்படி - தொழில் நுட்ப கண்ணோட்டம்


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது?!
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust
கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight
பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்.
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்.
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.
விமானத்தின் எடை ''லிப்ட்'' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ''லிப்ட்'' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.
சரி பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.
அதே போல விமானத்தில் ''டிராக் விசையை கொடுப்பது'' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம்

மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலெழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகாப்டருக்கு வராது) இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆஃப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூரைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.


விண்கல்லை இழுத்துச்சென்று எரிபொருள் நிலையமாக பயன்படுத்த நாசா திட்டம்


விண்வெளியில் சுற்றித்திரியும் ராட்சத விண்கல்லொன்றை இழுத்துச் சென்று சென்று சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தின் எரிபொருள் நிலையமாக பயன்படுத்தும் முயற்சியில் நாசா திட்டமிட்டுள்ளது.

இதற்கான திட்டம் நாசா மற்றும் கலிபோர்னியா அறிவியல் தொழில்நுட்ப மத்திய நிலையம்  ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தை அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்துள்ள அமெரிக்கா,  அதற்காக, இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேவையான பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் வழியில் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் எரிபொருள் நிரப்பி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான எரிபொருள் நிலையம் அமைக்க 5 இலட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லொன்றைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணில் சுற்றி திரியும் அந்த விண்கல் அட்லஸ் 5 ரொக்கெட் மூலம் இழுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அட்லஸ் 5 ரொக்கெட்டுடன் விண்கல்லை பிடிக்கக்கூடிய பெரிய கூண்டு ஒன்றும் அந்த ரொக்கெட்டுடன் சேர்த்து அனுப்பப்படவுள்ளது.

அது விண்கல்லை பிடித்து அப்படியே இழுத்து சென்று சர்வதேச விண்வெளி மையம் அருகே நிலை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்னும் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என நாசா மையம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், விண்கல்லொன்றை நகர்த்தும் முதலாவது மனித முயற்சியாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிப்பு


அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம். இந்த 'குவஸார்' மண்டலம் என்.ஜீ.சீ.6872 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Quasi-stellar radio source ("quasar") என்பது தான் 'குவஸார்'. ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy)மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற்றலைத் தான் ஒளியாக, மின்காந்த அலைகளாக வானில் பல பில்லியன் கிலோ மீற்றத் தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கின்றன.

இந்நிலையிலேயே இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் 'குவஸார்கள்' அடங்கிய ஒரு மண்டலத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG)எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம். ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீற்றர்கள். நமது சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.

நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கெலக்ஸி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கெலக்ஸி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்ஸியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

வழமையாக இருவேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள். அந்தளவுக்கு இந்த மண்டலம் பெரியதாக உள்ளதாம்.

இந்த மாபெரும் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையிலும் நாம் விண்வெளி குறித்து வைத்திருந்த மாதிரிகள் கணக்கீடுகள் அனைத்தும் துவம்சமாகியுள்ளன. குறிப்பாக எல்பர்ட் ஐன்ஸ்டீனின் அண்டவியல் கொள்கையை (Cosmological Principle) இது கேள்விக்குறியாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்டத்தை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பது இந்தக் கொள்கையின் சாரம்சம். ஆனால், இந்த மாபெரும் மண்டலம், அந்தக் கொள்கையை சிதைக்கிறது. இதனால் இந்த புதிய மாபெரும் 'குவஸார்' மண்டலம், அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாந்தங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ரோயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.