எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 1 நவம்பர், 2013


நேத்து ராத்திரி நல்லா பட்டாசு வெடிச்சிருப்பீங்க, இந்த அதிரசம், முறுக்கு, உன்னியப்பம் எல்லாம் சாப்ட்டுருப்பீங்க, அப்படி சாப்டலனா ஏதாவது பேக்கரில இருந்து பால்கோவா, ஜாங்கிரி, லட்டு, மிக்சர்னு வாங்கி ஆச ஆசையா சாப்ட்டுருப்பீங்க.... என்னமோ எல்லாம் பாத்த மாதிரியே சொல்ற, உனக்கு இதெல்லாம் தெரியுமான்னு கேக்குறீங்களா? பின்ன, நேத்துல இருந்து இந்த பக்கம் யாரையும் காணோம், இப்பவும் எட்டிப்பாப்பீங்களா மாட்டீங்களான்னு தெரியல, ஆனாலும் நான் என் கடமைய செய்து தானே ஆகணும்....

ஆனா ஒண்ணுங்க, நல்ல நாளும் அதுவுமா ஆன்-லைன்ல இல்லாம குடும்பத்தோட கொண்டாடுற எல்லோருக்கும் ஒரு பெரிய ஓ...... போட்டுக்குறேன் முதல்ல....

அப்புறம், இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, இத்தனநாள் என்னை பொறுத்துகிட்டு சகிச்சுகிட்டு, இருந்த உங்க எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

இத்தன நாள், எனக்கு ரொம்ப தெரிஞ்ச, அப்புறம் தெரியாத பதிவர்கள தேடி தேடி இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஆனா இப்போ அப்படி யாரையும் தேடி ஓடப் போறதில்ல... இங்கயே, நமக்குள்ள நல்லா அறிமுகமானவங்க எல்லாம் எப்படி தீபாவளி கொண்டாடுறாங்க, தீபாவளி பத்தி என்னதான் சொல்றாங்கன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டப் போறேன்.

அப்படி கொட்டுறதுக்கு முன்னாடி ஒரே ஒரு புதுமுக அறிமுகம்... ஆனா நான் கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணா அங்க அட்டனன்ஸ் போட்டுட்டாங்க. சோ அவருக்கு பழசு, நமக்கு புதுசு. இந்த ப்ளாக்ல அப்படி என்ன இருக்குனு கேக்குறீங்களா? 

திரைக்கதை முதல் திரைப்படம் வரை ஒரு கதைய அணுஅணுவா எப்படி உருவாக்குறதுன்னு சொல்லிக்குடுக்குறார். திரைக்கதை மேல ஆர்வம் இருக்குறவங்க வாங்களேன், ஒண்ணா கைக்கோர்க்கலாம்னு கூப்டுறார்... போய் தான் பாருங்களேன்.
கனவுப்பட்டறை 


இந்த தீபாவளி எதனால வந்துச்சு, எப்படி வந்துச்சு, அப்படின்னு ரொம்ப ரொம்ப சிம்பிளா விளக்குறாங்க மீரா அம்மா... கண்டிப்பா படிச்சு பாத்துடுவோம் 

சரி சரி, இப்போ தீபாவளி கவிதைகள்ல ரெண்டை பாக்கலாம்

ஒருநாள் அசுரன் அழிந்ததனால் திருநாள் தீபாவளி வந்திடுச்சாம்... அது ஏன்னு அருணா செல்வம் அண்ணா சொல்றாங்க, கேளுங்க கேளுங்க...

கூடவே நாம எப்போ என்ன பண்ணினா சிவக்குமார் அண்ணா நமக்கு தீவாளி வாழ்த்து சொல்வார்னு பாக்கலாம் வாங்க...

அப்புறம், தீபாவளிய கலகலப்பா கொண்டு போக வேணாமா? அதுக்கு தானே இவங்க எல்லாரும் இருக்காங்க. இவங்கன்னா யார் யாரு?

எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்சவங்க தாங்க... இவங்கள பத்தின அறிமுகம்னு எதுவுமே நமக்கு தேவையில்லை, அப்படி நான் ஏதாவது சொன்னா அது அதிகப்ரசங்கி தனமா தான் இருக்கும். அதனால கப்சிப்ன்னு வாய மூடிட்டு, லிங்க் மட்டும் தரேன், என்னன்னு நீங்களே பாருங்க...

அதுல பாருங்க, எல்லாருமே அவங்கவங்க அனுபவங்கள சொல்றாங்க, அதுவும் ரொம்ப ரொம்ப சுவாரசியமா சொல்றாங்க.... நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க, ஆனாலும் மறுபடியும் படிக்கலாம் வாங்க.

தீபாவளி: பொட்டுவெடி டூ பொக்ரான் குண்டு 

உல்லாசம் பொங்கும் இனிய தீபாவளி 

ஏப்பி டிவாலி

என்ன, இதெல்லாம் படிச்சிட்டீங்களா? இல்ல இனி தான் படிக்கனுமா? படிச்சிட்டீங்கனா சந்தோசம், மகிழ்ச்சி... இல்லனா படிச்சிடுங்க, ரொம்ப சந்தோசப்படுவேன்...

அப்புறம், மதியமா எல்லோர் வீட்லயும் கறிக்குழம்பு தான் விசேசமா இருக்கும். நல்லா சாப்பிடுங்க, சாப்ட்டுட்டு தெம்பா இருங்க, நாம அடுத்த பதிவுல பாக்கலாம்.

சனி, 28 செப்டம்பர், 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழா 
ஒரு விழாவை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா ஒரு உதாரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: ஒரு விழாவினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குப் பதிலாக, எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்த சினிமா நூற்றாண்டு விழா பற்றி சில கருத்துகளைக் கூறுகிறேன்.
 
 
சினிமாத் துறையிலே உள்ள கலைஞர்கள் பலரின் உள்ளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையிலே எழுந்த கோபம், தாபம் இவற்றோடு - அதிலும் குறிப்பாகவும், அதிசயமாகவும் தமிழ் ஏடுகள் சில வெளியிட்டுள்ள கருத்துக்களையும் இணைத்துத் தருவதே இந்தக் கடிதம்.
 
 
தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவு விழாவினை நான்கு நாட்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். 24ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு, கடந்த நூறாண்டு காலத்தில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகப் பெரிய பங்காற்றிய "முதல் சாதனையாளர்" ஜெயலலிதாவிற்கு முதல் விருதினை வழங்கி அவரைப் பெரிதும் பாராட்டியதோடு, மற்றவர்களுக்கும் விருதுகளை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.
 
 
இந்த விழா தொடர்பாக என்னைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டுப் பல்வேறு ஏடுகளில் எழுதி யிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னைச் சந்தித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்டார்கள். ஒரு மூத்த வார இதழின் செய்தியாளர் ஒருவர், தொலை பேசியில் தொடர்பு கொண்டு, "இவ்வளவு தவறுகள் நடைபெற்றிருக்கின்றன, அதைப் பற்றி நீங்கள் ஏன் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்" என்றெல்லாம் கேட்டார். அவர்களுக்கெல்லாம் நான் என்னுடைய நன்றி யினைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
 
 
இந்த சினிமா விழாவினைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என்னுடைய கருத்தை எழுத வேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றஞ்சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற் காகவோ அல்ல. அரசின் சார்பில், ஓர் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து அரசு தரும் நிதி உதவி யோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது, மற்றவர்கள் குற்றம் சொல்வதற்குச் சிறிதும் வாய்ப்பளிக்காத வகையில் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
 
 
 
ஏனென்றால் கர்நாடக கலாச்சாரத் துறை அமைச்சர், இந்த விழாவிற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த திரைத் துறை கலைஞர்கள் இடவசதி, போக்குவரத்து வசதி உரிய அனுமதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர் என்றும், அதற்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருப்பதாக ஏடுகளிலும் ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.
 
 
 
குறிப்பாக 24ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றவர் யார்? அரசு சார்பிலோ, தனியார் சார்பிலோ இதுபோல விழாக்கள் நடத்தப்படுமேயானால் அதற்கு ஒருவர் தலைமை தாங்குவதுதான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் மரபு. ஆனால் இந்த விழாவிற்கான முழுப் பக்க விளம்பரங்களில் "தலைமை ஏற்போர்" என்று குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் முனைவர் கே. ரோசய்யா, தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
 
 
 
எனவே இந்த விழா விற்கு மூன்று பேர் தலைமை வகித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர்கள் ஆகியோர் இதுபோன்ற விழாவிலே கலந்து கொள்கிறார்கள் என்றால், தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவரும், நிகழ்ச்சிக்குத் தலைவராக ஆளுநரும், முன்னிலை வகிப்பவர்களாக முதலமைச்சர்கள் பெயரும் வெளியிடு வதுதான் "ப்ரோட்டாகால்"படி சரியான நடைமுறை. ஆனால் இந்த விழாவில் ஆளுநரும், முதலமைச்சர்களும் தலைமை ஏற்போர்களாக வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! ஒரு விழாவிற்கு எத்தனை தலைவர்கள் என்பதை நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் கூற வேண்டும்! 
 
 
மேலும் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன் வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்தி லிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும். அந்தச் சாதனைக் கலைஞர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காவிட்டால்கூட, அவர்கள் 3 வரும்போதே வரவேற்று, அவர்களுக்கெனத் திட்டமிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர வைத்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் அமர்ந்தவுடன் அங்கிருந்து அகற்றிப் பின் வரிசையில் அமர வைத்தது பண்பாடற்ற செயல் என்றே கூற வேண்டும்.
 
 
 
அதுமாத்திரமல்ல; மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, முதல் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அந்தப் புகைப் படத்தை ஏடுகளிலே வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ரஜினியும், கமலும் இரண்டாவது வரிசையில் எங்கோ நின்று கொண்டிருக்கும் காட்சியையும் கண்டேன். அவர்களுடைய இலட்சக்கணக்கான ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார்கள்?
 
 
நான் மறுபடியும் கூறுகிறேன்; ஏதோ குறை சொல்ல வேண்டு மென்பதற்காக இதனைத் தெரிவிக்கவில்லை. முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதையெல்லாம் கவனிக்க நேரம் இடந்தராது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள்தான் ஆழ்ந்து ஆலோசித்துக் கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால் கலைஞர்கள் எப்போதும் மிகவும் சுயமரியாதை உடையவர்களாக, அனிச்ச மலரை ஒத்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் மனம் வேதனை  அடையும்படி - தன்மானம் காயப்படும்படி நடந்து கொள்ளக்கூடாது.
 
 
 
அடுத்து, இந்த விழாவிற்கான அழைப் பிதழ்கள் ஜனநாயகத்தின் "நான்காவது எஸ்டேட்" என்று பெருமையோடு சொல்லப்படும் பத்திரிகைத் துறையினரில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்படவில்லை. தொலைக்காட்சியினர் பலருக்கும் உள்ளே செல்லவே அனுமதி இல்லை. பாவம்; அவர்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு அனுசரணையாக எப்படியெல்லாம் செய்திகளை வெளியிடுகிறார்கள்; அதற்காகவாவது அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? வார இதழின் பத்திரிகையாளர்கள் "பார்வையாளர்களாக" உள்ளே சென்று, இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திகளைத் திரட்டி வெளியிட்டிருக்கிறார்கள்.
 
 
நான் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்ததைப்போல நாளேடுகள் அ.தி.மு.க. ஆட்சியில், 'பயன்'கருதியும், 'பயம்' கருதியும் சினிமா விழா பற்றிய இப்படிப்பட்ட விவரங்களை வெளியிட முன்வராமல், பொதுமக்கள் கவனத்திலிருந்து மூடி மறைத்து விட்ட போதிலும், சில வார இதழ்கள் 'துணிச்சலாக' கடந்த இரண்டு மூன்று நாட்களாக எழுதி வருகின்றன.
 
 
'குமுதம் ரிப்போர்ட்டர்' வார இதழில் மூன்று பக்கங்களுக்கு வந்துள்ள செய்தியிலிருந்து சில முக்கிய பகுதிகள்: 'இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், முதல்வருடன் குரூப் போட்டோ எடுத்த போது ஒதுங்கிக் கொண்டார். 'தலைவா' படப் பிரச்சினையில் சிக்கிய நடிகர் விஜய், முன்னதாகவே வந்திருந்த போதிலும், பின் 4 வரிசையில் சென்று அமர்ந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து வந்த எந்த நடிகர் நடிகையும் அவருடன் அமராமல் சில சீட்டுகள் தள்ளி அமர்ந்து கொண்டனர்.
 
 
நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை மட்டுமே அனுமதித்தனர். நடிகர் ரஜினிகாந்த், அவர் மகள் சௌந்தர்யாவுடன் வந்தார். ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினி மேடைக்குச் சென்று ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து வணக்கம் தெரிவித்தவுடன் முன் வரிசையில் அமர்ந்தார். அவரிடம், "புரோட்டோ கால்படி உங்களுக்கு மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அரசு அதிகாரிகள் அவரை அங்கு அனுப்பி வைத்தனர். (இது எந்த வகை "புரோட்டோகால்" என்பதை விழா அமைப்பாளர்கள்தான் விளக்க வேண்டும்!) விழா மேடைக்குக் கீழே, சசிகலா, அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். வழக்கமாக சினிமா விழா என்றாலே முதல்வரின் இருக்கைக்கு இடது மற்றும் வலது புறத்தில் நடிகர்கள் ரஜினி, கமல்தான் உட்கார்ந்திருப்பார்கள். 
 
 
இந்நிகழ்ச்சியில் முதல்வர் அருகில் சினிமா தயாரிப்பாளர்களும், 2வது வரிசையில் நடிகைகள் மனோரமா, சரோஜாதேவி, எல்.ஆர். ஈஸ்வரி உட்பட பலரும், மூன்றாவது வரிசையில் நடிகர் ரஜினி, கமல் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். குரூப் போட்டோவுக்காக கமல், இளையராஜா ஆகியோர் 'சேரில்' உட்கார்ந்திருந்தனர். அவர்களை அரசு அதிகாரிகள் எழுந்து நிற்கச் சொன்னார்கள். குரூப் போட்டோவில் ரஜினி ஏனோ இடது ஓரம் ஒதுங்கிக் கொண்டார்'.
 
 
அடுத்து 'ஜூனியர் விகடன்' நேற்றைய இதழின் அட்டைப்படத்திலே 'ஜால்ரா விழா ஆன சினிமா விழா - கடைசியாய் ரஜினி - கசந்த கமல் - ஒதுக்கப்பட்ட விஜய்' என்று அவர்களின் படங்களையும் வெளியிட்டு நீண்ட கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
 
 
"சரித்திரத்தில் எழுதிக் கொண்டாடியிருக்க வேண்டிய 'சினிமா-100' விழா அ.தி.மு.க. கட்சி விழா போல நடந்து முடிந்திருக்கிறது. சினிமா விழாவுக்கு கருணாநிதிக்கு அழைப்பு இல்லை என்ற சர்ச்சைகள் அதிகமானதால், விழா தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன், கருணாநிதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சினிமா விழா காரணமாக சென்னைத் திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் அனைத்தையும் முதல்வர்தான் தேர்வு செய்தாராம். 'பருத்தி வீரன்', 'அரவான்' போன்றவை கூட முக்கிய திரைப்படங்கள் வரிசையில் திரையிடப்பட, தமிழ் சினிமாவில் வசனப் புரட்சியை ஏற்படுத்திய 'பராசக்தி', 'மந்திரி குமாரி', 'வீரபாண்டிய கட்டபொம்மன்' உள்ளிட்ட படங்கள் எதுவுமே அந்த வரிசையில் இடம் பிடிக்கவில்லை. 
 
 
தமிழக அரசு சார்பாக 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்ததை வைத்து, நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை அப்படியே 'ஜெயா டி.வி.'க்குப் போனது. இதனால் மற்ற 'சேனல்'களுக்கு விழாவில் அனுமதி இல்லை. கடைசி நேரம் வரை பத்திரிகையாளர்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அழைப்பிதழும், அனுமதிச் சீட்டும் இல்லாமலேயே பலரும் அரங்கில் நுழைந்தனர். "நான் யாரு தெரியும்ல? அ.தி.மு.க.காரன் கிட்டயே ஐ.டி. கார்டு கேட்குறியா?" என்று செக்யூரிட்டிகளை மிரட்டியே அ.தி.மு.க.வினர் பலரும் உள்ளே புகுந்தனர்.
 
 
வரவேற்புரை முதல் நன்றியுரை சொன்னவர்கள் வரை அனைவருமே ஜெயலலிதா புகழ் பாடினர். போதாக் குறைக்கு கலை நிகழ்ச்சிகளிலும் ஜெ. புகழ் பாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமா சுதந்திரமாகச் செயல்படுகிறது என்றும் பெருமிதப்பட்டார். கமலும் விஜய்யும் இதைக் கேட்டுக் கொண்டுதான் உட்கார்ந்திருந்தனர். ரஜினியும் கமலும் விருது வாங்கியவர்களில் அடக்கம். விழா மேடையில் கடைசி வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்தார் ரஜினி. 30 பேருக்கு விருது கொடுத்த பிறகுதான் ரஜினி அழைக்கப்பட்டார். பெயர் அறிவிக்கப்பட்டதும் ரஜினி வேகமாக வந்தார். விருதை வாங்கியதும் விறுவிறுவெனக் கிளம்பி விட்டார். ஜெயலலிதாவும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. கமல் விருது வாங்க வரும் போது ஜெயலலிதா முகத்தில் சின்ன சிரிப்புக் கூட இல்லை. ரஜினியும், கமலும் பேசும்போது அரங்கத்தில் ஜெயலலிதா இல்லை. 
 
 
அழைப்பே இல்லை என்று சொல்லப்பட்ட விஜய் வந்தது தான் விழாவின் ஹைலைட். அவருக்கு விருது தரப்படவில்லை. ஃபிலிம் சேம்பர் உருவாக்கியிருந்த காணொளியில் கருணாநிதியின் புகைப்படமும், பெயரும் சில நொடிகள் வந்து போனது. விஜயகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்களில் சில காட்சிகளைக் காண்பித் தார்களே தவிர, அவரின் முகத்தை தப்பித் தவறியும் காட்டவில்லை.
 
 
விழாவுக்கு வந்த பிரபலங்களை விட வராத பிரபலங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. பாலுமகேந்திரா, பாரதிராஜா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு, எஸ்.பி.பி., ஷங்கர், மணிரத்னம், பி. சுசீலா, எஸ். ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வரவில்லை. இவர்களில் பலர் விழாவுக்கு அழைக்கப்படவே இல்லையாம். பாலுமகேந்திரா மட்டும் மறுநாள் கலந்து கொண்டார். ஸ்ரீதேவி வந்திருந்தார், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர். ரஹ்மான் பெயரும் விருதுப் பட்டியலி&
/site/news_detail/24522#sthash.TMZYJuhT.dpuf

புதன், 25 செப்டம்பர், 2013


விஜயை அவமதித்த சினிமா நூற்றாண்டு விழா





அட்டகாசமாக நேற்று ஆரம்பித்தது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, இந்நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா பங்ஷனில் அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.இது ஒருபுறமிருக்க இன்விடேஷன் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.
முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது. அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க, இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.
இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறினார் விஜய். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.

தலைவா விமர்சனம்

  20 August 2013



‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை  கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா?’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா. 

மும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி...என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்) 

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்...! ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள்  அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு? அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு  கிடைக்கிற பிரசாதம். 

மிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ... உங்களுக்கே நியாயமா படுதா பாஸ்? படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா... பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’
 என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப். 

ப்ரோ... ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ... கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது. 

அமலா பால் போலீஸ் அதிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்... வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்? 

சத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது... தொடரட்டும். 

படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்... 

ஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா. 

விஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது?