எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 25 செப்டம்பர், 2013


விஜயை அவமதித்த சினிமா நூற்றாண்டு விழா





அட்டகாசமாக நேற்று ஆரம்பித்தது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, இந்நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா பங்ஷனில் அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.இது ஒருபுறமிருக்க இன்விடேஷன் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.
முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது. அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க, இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.
இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறினார் விஜய். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.

தலைவா விமர்சனம்

  20 August 2013



‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை  கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா?’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா. 

மும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி...என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்) 

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்...! ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள்  அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு? அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு  கிடைக்கிற பிரசாதம். 

மிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ... உங்களுக்கே நியாயமா படுதா பாஸ்? படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா... பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’
 என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப். 

ப்ரோ... ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ... கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது. 

அமலா பால் போலீஸ் அதிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்... வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்? 

சத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது... தொடரட்டும். 

படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்... 

ஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா. 

விஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது? 

புதன், 18 செப்டம்பர், 2013

நூல் உலகம் » Buy Tamil Books online, Audio Books , Subscribe to Tamil Magazines online

நூல் உலகம் » Buy Tamil Books online, Audio Books , Subscribe to Tamil Magazines online

உலகின் மிக உயரமான விமான நிலையம்! - சீனாவில் திறக்கப்பட்டது.

News Service
சீனாவில் உலகின் மிக உயரமான விமான நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.தென்மேற்கு சீனாவில் உள்ள சிசுவன் மாகாணம் டாவ்செங் மாவட்டத்தில் டாவ்செங் யாடிங் விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 4,411 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக உயரமான விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு திபெத்தின் காம்டோ பகுதியில், கடல்மட்த்துக்கு மேல் 4,334 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பங்டா விமான நிலையமே உலகின் மிக உயரமானது என்ற சாதனையைப் படைத்திருந்தது.
  
இதனை டாவ்செங் யாடிங் விமான நிலையம் முறியடித்துள்ளது.இந்த விமான நிலையப்பகுதியிலிருந்து மாகாண தலைநகரமான செங்டுவுக்கு பேருந்தில் செல்ல 2 நாள்கள் வரை ஆகும். ஆனால் இதே தூரத்தை தற்போது விமானத்தின் மூலம் 65 நிமிடத்தில் கடந்து விடலாம். இந்த விமான நிலையத்தை சீன அரசு 255 மில்லியன் டொலர் செலவில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 Jaya TV Special Programs
 
Ennodu Paattu PaadungalHasini Pesum PadamjackpotSokkuthe Manam
 
Teledramas
 SUN TV
ChellameThendralThirumath SelvamThangam
 
 VIJAY TV
RojakootamKodambaakam SchoolKana Kanum KalangalSuper Singer
 
TV Shows
 SUN TV
Athiradi SingerAsatha Povathu Yaru Rani Maha RaniThirai Vimarsanam
 
 VIJAY TV
Koffee With AnuBoys VS GirlsNeeya NaanaIpadikku Rose
 
 KALAIGNAR TV
NaanalEllame Siripputhan Thangamaana PurushanManada Mayilada