யாழ். வல்லிபுர கோவில் கொடியேற்றம்
யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிக்கம்ப பூசைகள் நடைபெற்று பெருமானின் ஆயுதமான சங்கு சக்கரங்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து வசந்த மண்டபத்தை வந்தடைந்தது.
14 நாட்கள் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும் 27ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் 28ஆம் திகதி தேர்திருவிழாவும் 29ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தோற்சவமும் 30ஆம் திகதி கேணித்தீர்த்தமும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.
இக்கொடியேற்றத் திருவிழாவில் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார்.
| Views: 237 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக