ஜப்பானிய, தாய்வான் படையினர் தண்ணீர் பீரங்கிப் பிரயோகம்
கிழக்கு சீனக் கடல்பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகள் அமைந்துள்ள பகுதியில் ஜப்பானிய கரையோரக் காவல் படைக் கப்பல்களும் தாய்வான் கரையோரக் காவல் படையின் கப்பல்களும் இன்று பரஸ்பரம் பீரங்கிப் பிரயோகம் மேற்கொண்டன.
இத்தீவுகள் ஜப்பானியர்களால் சேன்காகு என அழைக்கப்படுகிறது. சீனாவில் டியாயோ எனவும் தயர்வான் டியாவோயுதாய் எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
டசன் கணக்கிலான தாய்வான் மீன்பிடிப் படகுகள், தாய்வான் கரையோரக் காவல் படைக் கப்பல்களின் துணையுடன் இத்தீவுப் பகுதிக்கு வந்தபோது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
தாய்வான் மீன்பிடிப் படகுகள்மீது ஜப்பானிய கரையோர காவல் படையினர் தண்ணீர் பீரங்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது, தாய்வான் படையினரும் பதிலுக்கு தண்ணீர் பீரங்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக