செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை; தடங்களை அனுப்பியது க்யூசியாசிட்டி
செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளைக் கற்கள் மற்றும் பாறை இருப்பதை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா க்யூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது.
அது கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வை ஆரம்பித்த நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது.
இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டுவரப்பட்ட சரளைக் கற்களின் பாறைகளை க்யூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.
அந்த பாறைகளின் அளவு மற்றும் வடிவத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட்டிருக்க முடியாது. கட்டாயமாக நீரோடை தான் அந்த கற்களை அடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியாசிட்டி விஞ்ஞானி ரெபேக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப்படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோடையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோடைகள் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. (படங்கள் - நாசா)
| Views: 603 |
By A Web Design
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக