எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 14 ஜனவரி, 2013


பால்வெளியில் பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்


குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு பூமியியைப் போன்ற ஒரு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர்.
இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியின் அளவான, குறைவான சுற்றுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆறில் ஒரு நட்சத்திரத்தில் பூமியின் அளவான கிரகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இதன் மூலம் எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை உறுதி செய்ய முடியாது எனவும் வானியலாளர்கள் கூறியுள்ளனர்.
உயிர் வாழத் தகுதியாக இருப்பதற்கு குறித்த கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சூழல் தேவை என்பதோடு தற்ப வெப்பநிலை அதிக சூடாகவும் அதிக குளிராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர ஒளி பட்டுத் தெறிப்பதன் ஊடே கண்டறிந்து வருகின்றது. கெப்லர் தொலைநோக்கியின் முதல் 16 மாத அவதானிப்பில் சுமார் 2,400 கிரகங்களை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமெரிக்க வானியலாளர் சமூகத்தின் மாநாட்டில் மேற்படி ஆய்வு முடிவு சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் பால் வெளியில் இருக்கும் 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியை விட 0.8 முதல் 1.25 வரை அளவு பெரிதான கிரகங்கள் 85 நாட்கள் அல்லது அதனைவிட குறைவான சுற்றுப்பாதையைக் கொண்டதாக அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் நாஸா செய்மதி தொலைநோக்கி அவதானிப்பு பிரிவு தாம் 461 கிரகங்களை இது வரை அவதானித்திருப்பதாக அறிவித்துள்ளது.

யானையின் குணாதிசயங்கள் - அறிந்து கொள்வோம்


E-mailPrintPDF
1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2. யானை தண்ணீர் இருக்கும் இடத்தை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்து கொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை ஒரே முறையில் எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. யானை ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து தம்மை காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். இம்முறையால் பூச்சிகடியில் இருந்தும் தம்மைக் காத்துக் கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டு ஊசியை கூட எடுத்துவிடும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழி நடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்."
10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - அறிந்துகொள்வோம்


E-mailPrintPDF

உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன.
ஆனால் உண்மையில் இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது. 
அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , மாநிலங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் " தேர்வு செய்வோர் அவை" யில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 
உதாரணமாக மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான ஐயோவா மாநிலத்துக்கு 6 உறுப்பினர்கள். மொத்தம் இந்த தேர்வு செய்வோர் அவையில் 538 உறுப்பினர்கள் இருப்பதால் , அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அவையில் 270 வாக்குகளை பெறவேண்டும். 
இதில்சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாநிலங்களில் பெரும்பாலானவை, மாநில வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவருக்கு, இந்த மாநிலத்தின் எல்லா அவை உறுப்பினர் இடங்களையும் தந்துவிடுகின்றன. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விகிதாச்சார நடைமுறை இருக்கிறது.எனவே, நாட்டில் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, அதே சமயத்தில் சில மாநிலங்களில் தோற்றதன் மூலம், இந்த தேர்வு செய்வோர் அவை வாக்குகளில் தேவைப்படும் 270 வாக்குகளைப்பெற முடியாமல் போனால், வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. 
கடந்த 2000ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர், இது போலத்தான், தேசிய அளவில் மக்கள் நேரடியாகப்போட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றாலும், மாநிலத் தேர்வு செய்வோர் அவை வாக்குகளைப் பெறும் போட்டியில் புளோரிடா மாநிலத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் புஷ்ஷிடம் இழந்ததன் மூலம், அதிபர் தேர்தலில் தோற்றார் என்பது சமீபத்திய வரலாறு. 
இன்னொரு விஷயம், இது நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்றாலும், தேர்தலை நடத்தும் பொறுப்பு மாநிலங்களிடமே இருக்கின்றது. எனவே, தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் மாநிலங்களில் பொதுவாக இரு பிரதான கட்சிகளும் குறி வைப்பதில்லை. உதாரணமாக, ஜனநாயகக் கட்சியின் கோட்டைகள் என்று வரலாற்று ரீதியாகவே கருதப்படும் கலிபோர்னியா, நியுயார்க் போன்ற மாநிலங்களிலோ, அல்லது குடியரசுக் கட்சி பலமாக இருக்கும் டெக்ஸாஸ் போன்ற மாநிலங்களிலோ இரு கட்சிகளின் பிரச்சாரங்களைப் பெரிதும் காண முடியாது. 
ஸ்விங் ஸ்டேட்ஸ் அதாவது, வாக்காளர்கள் வரலாற்று ரீதியாக மாறி மாறி வாக்களித்து வரும் சுமார் 11 மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. ஒஹையோ, புளோரிடா, கொலராடோ விஸ்கான்சின், மிச்சிகன், போன்ற இந்த மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 96 தெரிவு செய்வோர் அவைக்கான உறுப்பினர்களைப் பெறத்தான் கடுமையாக இரு வேட்பாளர்களும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். 
இந்த மாநிலங்களில் நேரடிப் பிரச்சாரத்தைத் தவிர, தொலைகாட்சி மூலம் கட்சிகளே நேரடியாகச் செய்யும் விளம்பரங்கள் மற்றும், வேட்பாளர்களின் ஆதரவு குழுக்கள் எல்லாம் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்களில் கடும் பிரச்சாரத்தை செய்கின்றன.இது தவிர, சூப்பர் பேக்ஸ் எனப்படும், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள்-இவை பெரு வணிக நிறுவனங்கள் - மற்றும் சித்தாந்த சார்புக் குழுக்கள் ஆகியவைகளால் செய்யப்படும் விளம்பரங்களும் தொலைக்காட்சிப் பிரச்சாரத்தை சூடு பறக்க வைக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக