தீபாவளி பண்டிகையுடன் லக்ஷ்மி குபேர பூசை இன்று
ஐப்பசி மாதத் தேய் பிறை சதுர்த்தசியில் உலகம் முழுவதிலும் வாழும் இந்துப் பெருமக் களால் சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகின்ற தீபாவளி பண்டிகை இன்று ஆகும்.
தீபாவளி பண்டிகை யின் போது பட்டாசுக ளுக்கும் பலகார வகை களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. தீமைகள் அழிக்கப்பட்டதை பெருவிழாவாக எமது முன்னோர்கள் கொண்டாடியுள்ளதற்கு அமையவே இன்றும் நாம் இப்பண்டிகையை கொண்டாடுகின்றோம்.
நரகாசுரன் என்ற அசுரன் மஹா விஷ்ணுவால் அழிக்கப்பட்ட தினத்தை அவரின் தயாராகிய பூமாதேவியின் வேண்டுதலுக்கு அமையவே தீபாவளி அமையப் பெற்றது.
தீபாவளி தினமான இன்று சூரியன் உதயமாவதற்கு முன் தலைக்கு எண்ணெய் தேய்த்து சுடுநீரில் ஸ்ஞானம் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. துலா மாத மகாத்மியம் என்ற நூலில் தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும் என்பதை தைலே லட்சுமி ஜல கங்கா என எடுத்துக்கூறுகின்றது.
தீப ஒளி திருநாளை முன்னிட்டு லக்ஷ்மி குபேர பூஜைகள் இடம் பெறுவது வழக்கமாகும். தீபாவளி தினத்தில் இடம்பெறுகின்ற குபேர பூஜை நாளை (03) செய்ய வேண்டுமெனவும் அமாவாசை நாளை (03) என்பதால் இது பொருந்தும் என சொல்லப்பட்டிருப்பதும் சில பஞ்சாக விதிகளுக்கு அமையும் சோதிட விற்பன்னர்களின் கூற்றுப்படியும் இது மாறுபடலாம் எனவும் கூற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக