பதிவு செய்த நாள்
09மார்2014
08:12
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் கடற்படை பணியாளர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முதல் தரத்திலான அணுசக்தி திறனுடைய கண்டம் விட்டு கண்டம் தாவும் கடற்படை ஏவுகணைகளுடனான நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கப்பலில் அழுத்த நீர்தொட்டி அமைத்து சோதனை செய்யும் நடத்தப்பட்டது.
கப்பல் கட்டும் தளத்தில் இருந்த நீர்த்தொட்டியின் மூடி, பணியாளர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து கப்பற்படை பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி கழக தலைவர் அவினாஷ் சந்தர் கூறுகையில், பாதுகாப்பு ஆய்வு பணிக்காக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது; அப்போது தொட்டியின் மூடி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எஸ்.அரிஹன்ட் என பெரியடப்பட்டுள்ள இந்த அணுஆயுத ஏவுகணை திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல் எந்த நேரமும் சோதனை நடத்த தயார் நிலையில் உள்ளது. இந்த விபத்தில் கப்பலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இதனால் இந்த சோதனை திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவினாஷ் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களில் நடைபெறும் 3வது கடற்படை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை துறைமுகத்தில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் பேட்டரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கடற்படை அட்மிரல் டி.கே.ஜோஷியும், விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகினார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களுக்கு முன் மும்பையில் கப்பல் கட்டும் பணியின் ஏற்பட்ட வாயு கசிவில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இயந்திர கோளாறு காரணமாக கார்பன் டை ஆக்சைடு கசிவு ஏற்பட்ட இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற கடற்படை விபத்துக்கள் மட்டுமின்றி கடந்த சில மாதங்களில் கடற்படையில் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் அதிலிருந்த 18 மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்தனர். இது கடற்படையில் நடைபெற்ற மிகப் பெரிய விபத்து ஆகும். சிறியதும், பெரியதுமாக அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டாலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக