எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 17 மார்ச், 2014

வானில் பறந்த பாம்புகள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு

அமெரிக்காவிலுள்ள வேர்ஜினியா வன பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் பறக்கும் பாம்புகள் சிலவற்றை தமது ஆராய்ச்சியின்போது அவதானித்துள்ளனர்.

ஆசிய மழைக் காட்டுப் பகுதியில் பாம்புகள் உடலை விரித்து தட்டையாக்கி பறப்பதை தாம் கண்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தனது உடலை வடிவாக்கி 100அடி உயரமான மரங்களிலிருந்து அவை வானில் மிதந்தன. பார்ப்பதற்கு அவை வானில் நீந்துவது போல தெரிந்தது' என கலாநிதி ஜேக் செர்ச்சா கூறியுள்ளார்.

'விமானம் ஒன்றின் வடிவம் விமானத்தை உயர்த்தும் விசையை வழங்குவது போலவே பாம்புகள் தமது உடல் வடிவத்தை மாற்றியமைத்து காற்றில் மிதக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக