எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 20 மார்ச், 2014


ஆறே கிழமைகளில் 9000 டொலரை மாத்திரம் செலவு செய்து பிரமாண்டமான வீடொன்றை நபரொருவர் நிர்மாணித்துள்ளார்.

தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வீடானது வழமையாக நாம் காணும் வீட்டின் தோற்றத்தை போன்றல்லாது குவிவு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் அரீன் என்பவரே இந்த வீட்டை நிர்மாணித்துள்ளார். இவர் தனது நண்பரான ஹஜார் கிப்ரன் என்பவரின் வீட்டிற்கு சென்றபோதே தனது கனவு இல்லம் பற்றி சிந்தித்துள்ளார். பின்னர் அதனை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வீடானது சீமெந்தாலும் செங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் அடிப்படை அலகுகளுக்கு மாத்திரம் 6000 டொலரை இவர் செலவிட்டுள்ளார். வீட்டை அழகு படுத்துவதற்கான தளபாட வசதிகள் உள்ளடங்கிய ஏனைய விடயங்களுக்கு 3000 டொலர் உள்ளடங்களாக மொத்தமாக 9000 ஆயிரம் ரூபாவை அவர் செலவு செய்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக