உலகின் முதற்பணக்கார கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ
உலகின் முதற்பணக்கார கால்பந்து வீரராக, போர்த்துக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலை பெற்றுள்ளார். நீண்ட நாட்களாக இந்த சாதனையை வைத்து இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் தொழில்சார் கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலமே கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலையைப் பெற்றுக்கொண்டார்.
122 மில்லியன் பவுண்டுகளை 2013ஆம் ஆண்டின் வருமானமாக இவர் பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் கழக அணியின் ஒப்பந்தம் மற்றும் நைக்கி நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் மூலமே இந்த வருவாயைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டேவிட் பெக்காம் ஓய்வு பெறும்போது அவரின் வருமானம் 165 மில்லியன் பவுண்டுகளாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 120.5 மில்லியன் பவுண்டுகளை வருமானமாக கொண்ட அர்ஜென்டினா வீரர் லியனொல் மெஸ்சி இரண்டாம் இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|---|
கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி டீஸர் வெளியானது..!
-
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி
படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த
நடிப்பி...
5 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக