எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 29 மார்ச், 2014

வரவேற்பைப் பெற்றுள்ள ‘இனம்’ திரைப்படம்!

inamசந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘இனம்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலக முக்கிய கலைஞர்கள் பலரும் வாழ்த்திவருகின்றனர்.
இனம் படம் பற்றி ஆர்.கே.செல்வமணி :
சந்தோஷ்சிவன் என் இனம் எப்படி அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார். அந்த இன அழிப்பு துயரங்களை கொடுமைகளை ஒரு சதவிகிதம் தான் காட்டியிருக்கிறார். அதுவே இவ்வளவு கொடுமையாக தெரிகிறது. படத்தில் சொல்லப்படாதவை எவ்வளவோ இருக்கின்றன.
கருணாஸ் பாத்திரம் மிக அற்புதமாக உள்ளது. இங்கே சரியான புரிதல் இல்லாமல் அறிவில்லாமல் பேசுகிற பல முட்டாள்களுக்குப் பதிலாக அந்த பாத்திரம் இருக்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ‘என் குடும்பத்தை காப்பாற்ற நான் எதையும் செய்வேன்’ என்கிற அந்த வசனம் தான் இலங்கையில் தன் குடும்பத்தை, இனத்தை காப்பாற்ற எதையும் செய்ய வேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் தமிழர்களின் போராட்டம்
இனம் படத்தை வெளியிடும் இயக்குனர் லிங்குசாமி :
இனம் படத்தைப் பார்த்தோம், பிடித்தது வெளியிடுகிறோம். இதில் வேற எந்த வியாபாரக் கணக்கும் இல்லை. படத்தின் மூலம் இரண்டு சொட்டு கண்ணீர் போதும் அதுதான் எதிர்பார்ப்பு கணக்கு
இயக்குனர் பாலாஜி சக்திவேல் :
“இனம்” ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு. இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. சாதாரண கண் கொண்டு இப்படத்தை பார்க்க வேண்டாம். நெஞ்சில் ஏந்திப் பாருங்கள்
நடிகர் சித்தார்த் :
ஐம்பது நூறு ஆண்டுகளில் மனித இனம் கண்டறியாத மனிதப் படுகொலை இன அழிப்பு தான் இலங்கையில் நடந்தது. அது மனித நாகரிகம் இதுவரை காணாத இனப்படுகொலையாகும். அதைப் பற்றி பேசுகிற இந்த படத்தை அரசியல் படமென்று யாரும் சிறுமைப் படுத்திவிட வேண்டாம். கசப்பான உண்மைகளை உலகமே கைகட்டி நிற்கும் இந்த சூழலில் எடுத்திருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய உணர்ச்சிகரமான முக்கியமான நல்ல படம் “இனம்”                                                                                                                                                                                                                                                                                                                                                          

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - திருடப்பட்ட திரைக்கதையா?

Oru Kanniyum Moondru Kalavanigalum story is stolen story
உலகஅளவில் திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய படங்களில் முக்கியமானதொரு படம் - ராஷோமான். 1950 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் திரைப்படமேதையான அகிராகுரோசாவா. ராஷோமான் படத்தின் திரைக்கதையை உத்தியை தழுவித்தான் பல வருடங்களுக்கு முன் அந்த நாள் என்ற படத்தை இயக்கினார் வீணை எஸ்.பாலசந்தர். சில வருடங்களுக்கு முன் கமல் இயக்கிய விருமாண்டி படமும் ராஷோமான் படத்தின் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமே. திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய மற்றொரு திரைப்படம் -ரன் லோலா ரன்.

1998 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெர்மனிய திரைப்படமான 'ரன் லோலா ரன்' படத்தின் திரைக்கதையும் ராஷோமான் திரைக்கதைக்கு நிகரானது. ராஷோமான் படத்தைப்போலவே இப்படத்திலும் ஒரே சம்பவங்கள்தான்.! சில நிமிட இடைவெளியில் அந்த சம்பவங்கள் நடைபெற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதுதான் கதை. வித்தியாசமானமுறையில் அமைக்கப்பட்ட திரைக்கதைதான் ரன் லோலா ரன் படத்தை அப்போது பரபரப்பாக பேச வைத்தது. இப்படத்தின் திரைக்கதையைத்தான் அப்படியே காப்பியடித்து தன்னுடைய ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
இதே சிம்புதேவன்தான் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

அதை எங்கேருந்து சுட்டிருப்பார்னு தெரியலையே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக