உலகின் முதவாலதாக விரும்பப்படும் சுற்றுலாத்தலமாகப் பாரிஸ்.
பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்குமான சுற்றுலாத்துறைப் போட்டியில் இருவரும் மாறி மாறி முதலிடத்தைப் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனாலும் பரிசையும் அதன் சுற்றுப்புற நகரங்களையும் அடக்கிய Ile-de-France பகுதிகளில் 2013ம் ஆண்டு 32.3 மில்லியன் உல்லாசப்பயணிகள் வந்ததன் மூலம் உலகின் முதவாலதாக விரும்பப்படும் சுற்றுலாத்தலமாகப் பரிசும் அதன் சுற்றுப்புறநகரங்களும் தெரிவாகி உள்ளன என பிராந்திய சற்றுலாச் சபை (Comité Régional du Tourisme) தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாகப் பிரித்தானியாவிலிருந்து வந்து பிரான்சின் தலைநகர விடுதிகளில் தங்கியிருந்தவர்களின் தொகை 2.1 மில்லியனைத் தொட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள், ஜேர்மனியர்கள், இத்தாலியர்கள், சீனர்கள் என இந்த வரிசை நீள்கின்றது. இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் 881.000 பேர் வந்து தங்கியுள்ளனர். இது இந்தப்பகுதி ஆசிய நாடுகளிலிருந்து முன்பு வந்தவர்களை விட் 52.6 சதவீதம் அதிகமாகும் எனச் சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக