வுடன் இருக்கச் செய்கிறது.
இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது.
இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் c-யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.
என்னென்ன தேவை?
தயிர் - 1 கப்,
மைதா - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
ரவை - 1/4 கப் (வறுத்தது),
சோடா உப்பு - சிறிதளவு,
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக அரிந்தது),
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் (சின்னதாக நறுக்கியது),
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து நெல்லிக்காய் அளவில் கிள்ளிக் கிள்ளி எண்ணெயில் பொரித்தெடுக்க வும்.
மசாலா வேர்க்கடலை
என்னென்ன தேவை?
வேர்க்கடலை -100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
அரிசி மாவு - 10 கிராம்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
அம்சூர் தூள் (உலர்ந்த மாங்காய் தூள்) அல்லது எலுமிச்சைச்சாறு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காய்ந்த வேர்க்கடலையை நனைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து, நனைத்த வேர்க்கடலையுடன் பிரட்டி மைக்ரோ வேவ் அவனில் பரப்பி ஒரு நிமிடம் வைக்கவும். பிறகு பிரித்து வைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மறுபடியும் 2 முதல் 3 நிமிடங்கள் வைக்கவும். கரகரப்பாக வறுபட்டதும், ஆறவைத்து ஒரு டப்பாவில் நிரப்பி வைக்கவும்
வெள்ளை கொண்டைக்கடலை வறுவல்
என்னென்ன தேவை?
கொண்டைக்கடலை - 250 கிராம்,
எண்ணெய் தேவையான அளவு.
வெறும் கடாயில் வறுப்பதற்கு...
வறுத்த மசாலா தூள்,
மிளகு, சீரகம், உப்பு, தனியா, காய்ந்த மிளகாய் தூள்,
தனித் தனியாக வறுத்து பொடித்தது - தலா 2 டீஸ்பூன் அல்லது 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கு ஏற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்).
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். அதை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் வைத்து ஃபேனுக்கு அடியில் சிறிது நேரம் காய விடவும். பிறகு ஒரு வாய் அகன்ற கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கொண்டைக்கடலையை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து, வடித்து ஒரு பேப்பரின் மேல் போட்டு வைக்கவும். அது சூடாக இருக்கும்போதே டிரை ரோஸ்ட் செய்யவும் (எல்லாவற்றையும் கலக்கவும்). அந்த காரத் தூளை கொண்டைக்கடலையின் மேல்தூவி, குலுக்கவும். கடலையின் மேல் மசாலா நன்கு ஒட்டிக் கொண்டு ஆறியதும் எடுத்து வைக்கவும்.
கொண்டைக்கடலையை கவனமாக, வெடிக்காதபடி மிதமான தீயில் பொரிக்க வேண்டும்.
மூன்று கலர் காரா பூந்தி
என்னென்ன தேவை?
கடலை மாவு - 2 கப்,
பச்சரிசி மாவு - 6 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை,
தரமான ஃபுட் கலர் 3 (எல்லா பெரிய கடைகளில் கிடைக்கும்).
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப,
வேர்க்கடலை - விரும்பினால் தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
பெருங்காயம் - சிறிது,
காஷ்மீரி மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவைக் கலந்து, உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயம், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும். இதை மூன்று பாகமாக வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்தில் பச்சை கலர் சேர்த்து, ஒரு பாகத்தில் காஷ்மீரி மிளகாய் சேர்த்து, ஒரு பாகத்தில் ஆரஞ்சு கலர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, எண்ணெயின் மேல் காரா பூந்தி துளையிடப்பட்ட கரண்டியைக் கொண்டு ஒரு குழிக்கரண்டி முதல் பாகத்தை ஊற்றி தட்டிக் கொண்டே இருந்தால் பூந்திகள் விழுந்து விடும். எண்ணெய் ஒலி குறையும் வரை வறுக்கவும்.
இப்படி முதல் பாகத்தை முடித்து விட்டு இரண்டாவது கலர் பாகத்தையும் மூன்றாவது கலர் பாகத்தையும் பொரித்து வடிக்கவும். ஒரு டிஸ்யூ பேப்பரின் மேல் பொரித்தவற்றை வைத்து ஆறவிடவும். ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சூடாக இருக்கும்போதே சிறிது மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து எண்ணெயில் வறுத்த முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து, வீட்டில் ஓமப் பொடி இருந்தால் அதையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
மெதுவடை
என்னென்ன தேவை?
முழு உளுத்தம் பருப்பு - 2 கப்,
உப்பு, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வெண்ணைப் பந்து போல் அரைத்து, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கறிவேப்பிலை தூவி வடைகளாகப் பொரித்தெடுக்கவும். மாவைப் புளிக்கவிடாமல் உடனே எண் ணெயில் பொரித்தெடுத்தால் மேலே மொறுமொறுவென்றும், உள்ளே மெத்தென்றும் இருக்கும். எண்ணெய் குடிக்காத வடை ரெடி
வடை கறி
என்னென்ன தேவை?
கடலைப்பருப்பு - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 6 பல்,
பட்டை - 2,
சோம்பு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லி - 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கெட்டியாக சிறிது கரகரப்பாக அரைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு விழுதாக அரைக்க வேண்டும். மேற்கண்ட எல்லா சாமான்களையும் அரைத்த கடலைப் பருப்புடன் சேர்த்து கலந்து வைத்து, தேவையான போது சிறிய சிறிய வட்டங்களாகத் தட்டி பொரித்து (நல்ல பொன்னிறமாக), தயாரான தக்காளி கறியுடன் (அடுத்த பக்கத்தில் செய்முறை உள்ளது) கலக்க வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக