உங்கள் விடுமுறைக் கனவுகளை நனவாக்கும் மிஹின் ஹொலிடேய்ஸ்
மிஹின் ஹொலிடேய்ஸ் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையான பக்கேஜ்களை சீஷெல்ஸ் மற்றும் ஜகார்த்தா ஆகிய நாடுகளுக்கு கவர்ச்சிகரமான கட்டணங்களுடன் அறிமுகப்படுத்துகின்றது.
.
நிலையான கட்டணங்களுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் டுபாய், ஷார்ஜா, பஹ்ரெய்ன், மதுரை, டாக்கா போன்ற மிஹின் லங்கா சேவையில் ஈடுபடும் இடங்களில் சுவாரஸ்யமான பயண அனுபவத்தை பெறும் வகையில் விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள், ஹோட்டல்கள் குறித்த முழுமையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அப்பிரதேசத்தில் உள்ள ஏனைய ஹோட்டல்களின் கட்டணங்களை ஒப்பிட்டு அறிந்து கொள்ள முடியும் என்பதுடன், குறித்த நகரங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் உல்லாசப்பயணிகளைக் கவரும் இடங்கள் தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
இந்த அங்குரார்ப்பணம் பற்றி கருத்துத் தெரிவித்த மிஹின் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன,
“மிஹின் லங்காவில் உள்ள நாம், பயணங்களை சௌகரியமாகவும், ஓய்வளிப்பதாகவும், தொந்தரவு அற்றதாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் உள்ள மிகச்சிறந்த சலுகைகளை அளித்துவருகின்றோம். மிஹின் ஹொலிடேய்ஸ் இன் ஆரம்பமானது, எமது வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் உள்ள விடுமுறைக்கனவினை நனவாக்கும் என நம்புகின்றோம்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக