பிரமோற்சவத்தையொட்டி கோதண்டராமர் கோயில் மகா தேரோட்டம்
திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் சுவாமி கோயிலில் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் சேஷ வாகனத்தில் உற்சவமூர்த்தி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7வது நாளான நேற்று முன்தினம் காலை சூரிய வாகனத்திலும், இரவு சந்திர வாகனத்திலும் உற்சவ மூர்த்திகள் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
8வது நாளான நேற்று மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமாட வீதிகளில் வலம் வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவ மூர்த்தி வலம் வந்தார். 9ம் நாளான இன்று காலை கோயில் வளாகத்தில் உள்ள மூலவர்களுக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் பல்லக்கு உற்சவமும் உற்சவ மூர்த்திகளுக்கு கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் உள்ள கபில தீர்த்த குளத்தில் சக்கர ஸ்நானமும் மாலை கொடியிறக்கமும் நடக்கிறது. |
கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி டீஸர் வெளியானது..!
-
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி
படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த
நடிப்பி...
5 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக