எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 5 ஏப்ரல், 2014


...!

காணமல் போன விமானத்தில் இருந்து சமிக்ஞை


தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை  கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சமிக்ஞை காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால் அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள மினகலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

கடந்த மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக