எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 24 ஜனவரி, 2013



 

சேவை வரிக்கெதிரான உண்ணாவிரதத்தின் போது நட்சத்திரங்கள்

சேவை வரிக்கெதிராக தமிழ்திரையுலகினர் வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டததில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள்.

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்

prototype-harvard-microrobotic-fly-lgபார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது.இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
I-Swarm_Micro_Robot_On_Thumb
இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.
prototype-harvard-microrobotic-fly-lg
முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.
சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது. அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.
மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013


3 கோடியில் பிரமாண்டமான கலர் டிவி உருவாக்கி சாதனை


ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பந்தைய கார் தயாரிக்கும் பிரபல நிறுவனம் பிரமாண்ட கலர் டி.வி. பெட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் விலை எவ்வளவு தெரியுமா? சுமார் 3 கோடியே 35 லட்சம்(4,14,000 பவுண்ட்) ஆகும்.
‘சி.எஸ்.இ.இ.டி. 201’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டி.வி.யின் திரை 16 அடி அகலம் இருக்கும். ஆண்டுக்கு 25 டி.வி.களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறார்கள்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது ரூ.18 லட்சம் மதிப்பில் 84 அங்குலம் (7 அடி அகலம் திரை) கொண்ட டி.வி.க்கள் விற்பனையில் இருக்கின்றன. இப்போது ஆஸ்திரியா நிறுவனம் வெளியிட்டுள்ள 16 அடி அகன்ற திரை டி.வி.யே உலகிலேயே மிக பிரமாண்ட டி.வி. என கருதப்படுகிறது.

எஜமானிக்காக மன்றாடும் நன்றியுள்ள ஜீவன்


இறந்த தனது எஜமானி உயிருடன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் நாயொன்று பிராரத்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தேவாலயம் செல்லும் சம்பவமானது இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மன் செபர்ட் இனத்தை சேர்ந்த லோயல் டொமி எனறு அழைக்கப்படும் 7 வயது நாயே இவ்வாறு தேவாலயத்திற்கு செல்வதை வழக்கமாகிக்கொண்டுள்ளது.

டொமியை கடந்த 7 வருடங்களாக வளர்த்து வந்த அதனது எஜமானியான மரியா மார்கிரட் ரொச்சி என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது இறுதி கிரியைகள் மேற்படி தேவாலயத்திலே இடம்பெற்றுள்ளது.  இவரது இறுதி மரண ஊர்வலத்தில் டொமியும் கலந்துகொண்டிருந்தது.

அன்றிலிருந்து டொமி தன்னை கைவிட்டு சென்ற தனது எஜமானி மீண்டும் உயிருடன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் மேற்படி தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்வதாக பலர் தெரிவித்துள்ளனர்.

டொமி பிரார்த்தனைக்காக ஆலயத்திற்கு செல்லும் போது மேற்படி ஆலயத்தின் பாதிரியார் டொமியை திட்டடிவிடாமல் கருணையுடன் கண்கானிக்கின்றார்.

டொமியும் ஏனையவ பக்தர்களுக்கு இடையூறை விழைவிக்காமல் பிரார்த்தனையின்போது ஒரு ஓரமாக அமர்ந்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

'ஒவ்வொரு நாளும் நடக்கும் பிரார்த்தனை  கூட்டத்தில் டொமி கலந்துகொள்கிறது. அதனது நடத்தைகள் அற்புதமானவை.

பிரார்த்தனையின்போது சத்தமிடாமல் அமைதியாக இருக்கும். இதுவரை ஆலயத்தில் அது குறைத்ததை நான் கேட்டதில்லை. இங்கு வரும் பக்தர்களும் டொமி குறித்து என்னிடம் முறையிட்டதில்லை. தனது எஜமானியின் மீது இத்தகைய அன்பு வைத்திருக்கும் டொமியை என்னால் வெளியே போ என்று கூறமுடியாது என' தேவாலயத்தின் பாதிரியார் டொனேடோ பான்னா தெரிவித்துள்ளார்.

சனி, 19 ஜனவரி, 2013

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.அனைத்து விலங்குகளும்ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும்எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டேஇருந்தது.
 
உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்தமயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது.
 
மயில் தனது வருத்தத்தை மைனாவிடம்கூற,மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷபட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லைஎன்று பதில் கூறியது.
 
இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்னஎன்பதைஉணர்ந்து அதனை மேம்படுத்தவேண்டுமே அன்றிஎது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறைஉணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.
 
நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்.
 
 பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 3 கப்
துவரம் பருப்பு - 1 கப்
வர மிளகாய் - 10
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு நைஸாக, தோசை மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி, சுமார் நான்கு மணிநேரம் புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது சூடானதும் அதில் தோசை போன்று விட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான கார தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
 

செயற்கை இரத்தம் உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை


உயிர்களை காக்க உதவும் இரத்தத்தினை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள். இந்த இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுகிறது. இதற்காக இரத்த தானம் செய்பவர்களையோ, ரத்த வங்கிகளையோ நாடவேண்டியுள்ளது. ஒரு சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டவகை இரத்தம் கிடைப்பதில்லை. இதனைக் கருதியே இந்த செயற்கை இரத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆய்வில் வெற்றி டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்த ஆராய்ச்சியின் பலனாக செயற்கை இரத்தத்தினை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.

இந்த செயற்கை இரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கமளித்த டாக்டர் சோமா கூறுகையில், 'இரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான இரத்த செல்கள் தயாரிக்கப்படும். இந்த செயற்கை இரத்தம், இரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் இரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே செலவாகும். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து இரத்த வங்கிகளிலும் செயற்கை இரத்தம் எளிமையாக கிடைக்கும் எனவும் டாக்டர் சோமா தெரிவித்துள்ளார்.

'நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது இதுவரை இரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த செயற்கை இரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதேசமயம் நோய்த்தொற்று இல்லாததாகவும் இருக்கும். அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும்' என்றும் டாக்டர் சோமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செயற்கை இரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது. இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை இரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐ.ஐ.டி.யின் பயோ டெக்னாலஜி துறை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

திங்கள், 14 ஜனவரி, 2013


பால்வெளியில் பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்


குறைந்தது பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள் பால் வெளியில் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு பூமியியைப் போன்ற ஒரு கிரகம் கண்டறியப்படுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வு மையமான நாஸாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினூடே வானியலாளர்கள் இதனை கண்டறிந் துள்ளனர்.
இதில் எமது பால்வெளியிலுள்ள 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியின் அளவான, குறைவான சுற்றுப் பாதை கொண்ட கிரகங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆறில் ஒரு நட்சத்திரத்தில் பூமியின் அளவான கிரகம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இதன் மூலம் எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை உறுதி செய்ய முடியாது எனவும் வானியலாளர்கள் கூறியுள்ளனர்.
உயிர் வாழத் தகுதியாக இருப்பதற்கு குறித்த கிரகத்தில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சூழல் தேவை என்பதோடு தற்ப வெப்பநிலை அதிக சூடாகவும் அதிக குளிராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர ஒளி பட்டுத் தெறிப்பதன் ஊடே கண்டறிந்து வருகின்றது. கெப்லர் தொலைநோக்கியின் முதல் 16 மாத அவதானிப்பில் சுமார் 2,400 கிரகங்களை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமெரிக்க வானியலாளர் சமூகத்தின் மாநாட்டில் மேற்படி ஆய்வு முடிவு சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் பால் வெளியில் இருக்கும் 17 வீதமான நட்சத்திரங்களில் பூமியை விட 0.8 முதல் 1.25 வரை அளவு பெரிதான கிரகங்கள் 85 நாட்கள் அல்லது அதனைவிட குறைவான சுற்றுப்பாதையைக் கொண்டதாக அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் நாஸா செய்மதி தொலைநோக்கி அவதானிப்பு பிரிவு தாம் 461 கிரகங்களை இது வரை அவதானித்திருப்பதாக அறிவித்துள்ளது.

யானையின் குணாதிசயங்கள் - அறிந்து கொள்வோம்


E-mailPrintPDF
1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2. யானை தண்ணீர் இருக்கும் இடத்தை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்து கொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை ஒரே முறையில் எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. யானை ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து தம்மை காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். இம்முறையால் பூச்சிகடியில் இருந்தும் தம்மைக் காத்துக் கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டு ஊசியை கூட எடுத்துவிடும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழி நடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்."
10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

அமெரிக்க அதிபர் தெரிவு செய்யப்படுவது எப்படி? - அறிந்துகொள்வோம்


E-mailPrintPDF

உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன.
ஆனால் உண்மையில் இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது. 
அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , மாநிலங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் " தேர்வு செய்வோர் அவை" யில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 
உதாரணமாக மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான ஐயோவா மாநிலத்துக்கு 6 உறுப்பினர்கள். மொத்தம் இந்த தேர்வு செய்வோர் அவையில் 538 உறுப்பினர்கள் இருப்பதால் , அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அவையில் 270 வாக்குகளை பெறவேண்டும். 
இதில்சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாநிலங்களில் பெரும்பாலானவை, மாநில வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவருக்கு, இந்த மாநிலத்தின் எல்லா அவை உறுப்பினர் இடங்களையும் தந்துவிடுகின்றன. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விகிதாச்சார நடைமுறை இருக்கிறது.எனவே, நாட்டில் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, அதே சமயத்தில் சில மாநிலங்களில் தோற்றதன் மூலம், இந்த தேர்வு செய்வோர் அவை வாக்குகளில் தேவைப்படும் 270 வாக்குகளைப்பெற முடியாமல் போனால், வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. 
கடந்த 2000ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர், இது போலத்தான், தேசிய அளவில் மக்கள் நேரடியாகப்போட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றாலும், மாநிலத் தேர்வு செய்வோர் அவை வாக்குகளைப் பெறும் போட்டியில் புளோரிடா மாநிலத்தை சர்ச்சைக்குரிய விதத்தில் புஷ்ஷிடம் இழந்ததன் மூலம், அதிபர் தேர்தலில் தோற்றார் என்பது சமீபத்திய வரலாறு. 
இன்னொரு விஷயம், இது நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்றாலும், தேர்தலை நடத்தும் பொறுப்பு மாநிலங்களிடமே இருக்கின்றது. எனவே, தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் மாநிலங்களில் பொதுவாக இரு பிரதான கட்சிகளும் குறி வைப்பதில்லை. உதாரணமாக, ஜனநாயகக் கட்சியின் கோட்டைகள் என்று வரலாற்று ரீதியாகவே கருதப்படும் கலிபோர்னியா, நியுயார்க் போன்ற மாநிலங்களிலோ, அல்லது குடியரசுக் கட்சி பலமாக இருக்கும் டெக்ஸாஸ் போன்ற மாநிலங்களிலோ இரு கட்சிகளின் பிரச்சாரங்களைப் பெரிதும் காண முடியாது. 
ஸ்விங் ஸ்டேட்ஸ் அதாவது, வாக்காளர்கள் வரலாற்று ரீதியாக மாறி மாறி வாக்களித்து வரும் சுமார் 11 மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. ஒஹையோ, புளோரிடா, கொலராடோ விஸ்கான்சின், மிச்சிகன், போன்ற இந்த மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 96 தெரிவு செய்வோர் அவைக்கான உறுப்பினர்களைப் பெறத்தான் கடுமையாக இரு வேட்பாளர்களும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். 
இந்த மாநிலங்களில் நேரடிப் பிரச்சாரத்தைத் தவிர, தொலைகாட்சி மூலம் கட்சிகளே நேரடியாகச் செய்யும் விளம்பரங்கள் மற்றும், வேட்பாளர்களின் ஆதரவு குழுக்கள் எல்லாம் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்களில் கடும் பிரச்சாரத்தை செய்கின்றன.இது தவிர, சூப்பர் பேக்ஸ் எனப்படும், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள்-இவை பெரு வணிக நிறுவனங்கள் - மற்றும் சித்தாந்த சார்புக் குழுக்கள் ஆகியவைகளால் செய்யப்படும் விளம்பரங்களும் தொலைக்காட்சிப் பிரச்சாரத்தை சூடு பறக்க வைக்கின்றன. 

தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)



PDF
பொங்கல் ஸ்பெஷல்"
தேவையான பொருட்கள்:
1 சுண்டு உழுந்து (கோது நீக்கியது)
3 மேசைக்கரண்டி வெள்ளையரிசி
750 கிராம் சீனி
செம்மஞ்சல் கலரிங் சிறிதளவு
எசென்ஸ் சிறிதளவு
1 லீற்றர் எண்ணை
சிறிதளவு தேசிப்புளி


செய்முறை
முதலில் 750 கிராம் சீனியை எடுத்து அதனுள் 3 dl தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காச்ச வேண்டும். சீனி கரைந்ததும் பாகினை 1 கிளாஸ் குளிர்தண்ணீரில் ஒரு துளியினை விட்டுப்பார்க்கும் போது பாகு அடியில் உறையும் தன்மை வரும். அப்படி பாகு உறையும் தன்மை வந்ததும் அதனுள் சிறிது கலரிங், எசென்ஸ், தேசிப்புளி என்பவற்றை சேர்த்து பாகினை உடனே இறக்கி வைக்க வேண்டும்.

வேறேர் பாத்திரத்தில் எண்ணையை கொதிக்க விட வேண்டும்.
எண்ணையை கொதிக்க விடும்போதே உழுந்தினை அரைத்துக்கொள்ளலாம். உழுந்தை 3-4 மணித்தியாலங்கள் ஊறவைத்து கெட்டியாக (இட்டலி பதத்திற்கு ) சிறிதளவு உப்பு, சிறிதளவு கலரிங் சேர்த்து மைபோல அரைத்து எடுக்கவும்.

பின்னர் அரைத்த உழுந்தினை இலகுவான முறையில் ஒரு பொலித்தீன் பையினுள் ஊற்றி வாய்ப்பகுதியை மூடி அடைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மூலையில் சிறு துவாரம் இட்டு அதனூடாக முறுக்கு பிளிவது போல் எண்ணையினுள் 2-3 வட்டமாக   பிளிந்து விடவேண்டும்.

பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி வேக விட வேண்டும். நன்கு வெந்ததும் எடுத்து பாகில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் வேறோர் தட்டில் அடுக்கி வைக்கவும். அவ்வாறே எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும். ஆறியதும் பரிமாறலாம்.

குறிப்பு:
உழுந்தினை அரைத்து அதிக நேரம் வைத்தால் உழுந்து புளிப்பு தன்மையை அடைந்து விடும். எசென்ஸ்க்கு பதிலாக ஏலக்காய் பவுடரையும் பாவிக்கலாம்.

பாகு மிகுதியாக இருந்தால் அதனை தோய்த்தெடுத்த தேன்குழலின்மேல் ஊற்றிவிடலாம். மறுநாள் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மிகவும் எளிதானதும் இலகுவானதும் அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி.
தீபாவளி ஸ்பெஷலாக செய்து பரிமாறி உண்டு மகிழலாம்.

பூந்தி லட்டு - 30 உருண்டைகள்

பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள் 
250 கிராம் கடலைமா
400 கிராம் சீனி
50 கிராம் பெரிய கல்லுசீனி
100 கிராம் கயு
25 கிராம் ஏலக்காய்
1/2 லீற்றர் எண்ணை
8 கப் தண்ணீர்
1/2 சுண்டு அவித்த கோதுமை மா
சிறிதளவு உப்பு
1/2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
மஞ்சள் கலறிங்
செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவு, அளவான உப்பு, பேக்கிங்பவுடர், சிறிது மஞ்சள் நிற கலறிங், சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.

பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசைக்கு மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.
அடுப்பில் தாச்சியை வைத்து எண்ணையை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிய பின் எண்ணெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள எண்ணெயில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (மாவை விடும்போது எண்ணெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாகவோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)
தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.
பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு எண்ணை வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.
பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கஜூவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் சீனியை 3 கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்த பாணி காச்சவும். பாணிடை தண்ணீரக்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.
அத்துடன் கயு ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு  பூந்தியில் சேரும்வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும். கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து பரவலாக அடுக்கவும். பின்னர் அதற்கு மேல் பெரிய கல்லுச் சீனியை தூவி அழகுபடுத்தி பரிமாறலாம்.
பூந்தியை பொரிப்பதற்கு என்ன எண்ணெய் என்றாலும் பாவிக்கலாம். நெய் விஷேசமானது. இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். ஆனால் நெய், லட்டைக் கொஞ்சம் மென்மைப்படுத்திவிடும். எண்ணெயில் பொரிப்பதால் கூடுதல் மொறுமொறுப்புடன் லட்டு சுவையாக இருக்கும்.

பச்சைக் கற்பூரம் இந்தியாவில் சேர்ப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தவர் பாவிப்பதாக தெரியவில்லை. கராம்பு அனேகம் பேருக்குப் பிடிக்கும்.  பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்னையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை.
குறிப்பு:
உங்களுக்குத் தேவையான உருண்டைகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்

றவ்வை லட்டு - 30 உருண்டை


E-mailPrintPDF
பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
1 சுண்டு றவ்வை
1சுண்டு சீனி
அரை ரின்பால்
1 சுண்டு தேங்காய் பூ
1 சுண்டு வெள்ளை அரிசி
அரை சுண்டு எள்ளு
50 கிராம் அவிக்காத கோதுமைமா
50 கிராம் ஏலக்காய்

செய்முறை
றவ்வை, தேங்காய்ப்பூ, எள்ளு என்பவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
சீனியை அரைத்து எடுக்கவும்.பின்னர் வறுத்து எடுத்தவற்றை தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த றவ்வை, அரைத்த சீனி, அரைத்த எள்ளு, அரைத்த தேங்காய்பூ, ஏலக்காய் பவுடர் போட்டு ரின்பால் சேர்த்து நன்றாக கலக்கவும். (உருட்டும் பதம் வரவில்லையென்றால் சிறிது கொதிநீர் சேர்க்கலாம்) 
பின்னர் அக்கலவையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்து எடுத்தவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
வெள்ளை அரிசியை ஊறவைத்து மாவாக அரைத்து எடுக்கவும். பின்னர் அதனுடன் அவிக்காத கோதுமைமாவையும்  தண்ணீர் சேர்த்து தடித்த கலவைபோல் எடுத்து , அவ் உருண்டைகளை அவ் மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்து எடுத்து ஆறியபின்னர் பரிமாறலாம்.  

பேரீச்சம்பழக் கேக்

தேவையானபொருட்கள்
400 கிராம் றவ்வை
350 கிராம் சீனி
250 கிராம் மாஜரீன்
400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது)
250 கிராம் முந்திரிகை வற்றல்
1/2 ரின் அன்னாசி
1/2 ரின் ரின்பால்
5 முட்டை
50 கிராம் இஞ்சி
1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்)
1  மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர்
1 மேசைக்கரண்டி வனிலா
50 கிராம் கஜூ

செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும்.
அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும். சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஊறவைத்த சேர்வையை கசக்கி தனியாக அடித்து கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். அன்னாசியையும் சிறு துண்டுகளாக்கி அதனுள் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியில் றவ்வை, பேக்கிங்பவுடர், வனிலா போன்றவற்றை தனியாக கலக்கிய பின்னர் அதனுள் சேர்த்து கொள்ளவும்.
அத்துடன் கயு, முந்திரியை வற்றல் என்பவற்றையும் சேர்த்து கலக்கிய பின்னர் 175 பாகையில் 30 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும்.

(குறிப்பு: இஞ்சியை அரைத்து தேயிலை சாயத்தினுள் ஊறவைத்து பின்னர் தும்பு இல்லாது வடித்து சாயத்தை எடுத்தும் பயன்படுத்தலாம்). 


மஸ்கெற் (கோதுமை அல்வா) - 50 துண்டுகள்


E-mailPrintPDF

பொங்கல் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
750 கிறாம் கோதுமை மா
1 கிலோ சீனி
1/6 லீற்றர் எண்ணை
75 கிராம் முந்திரிப்பருப்பு
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை
கோதுமைமாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக குளைத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வைத்து அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் அம்மாக் கலவையை ஊறவைத்த தண்ணீருல் சிறிது சிறிதாக சேர்த்து கரைத்து துணியில் வடித்து பாலாக எடுக்கவும்.

பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை உருக விடவும் . சீனி நன்றாக உருகியதும் அதனுள் அம்மாப் பாலை ஊற்றி கட்டி படாது தொடர்ந்து கிண்டவும்.

கலவை ஒட்டும் பதம் வரும் போது எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும் திரள தொடங்கும் போது அதனுள் முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிண்டவும்.

கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்
குறிப்பு:
உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்

தொதல் - 50 துண்டுகள்


E-mailPrintPDF
தேவையான பொருட்கள்
1 சுண்டு பச்சையரிசி
5 தேங்காய் (அல்லது ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை)
ஏலக்காய்ப்பொடி சிறிதளவு
200 கிராம் கஜு
1 கிலோ சீனி (4 சுண்டு)
3 மேசைக் கரண்டி சவ்வரிசி (பதிலாக வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்)
250 கிராம் சக்கரை

செய்முறை
அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்து கொள்ளவும். முழு தேங்காளாயின் துருவி முதல் பால் தனியாகவும் மற்றைய பாலை தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிளிந்து எடுக்கவும்.
அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ் தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன் கலந்து வைக்கவும்.

பின்னர் வாய் அகன்ற கனமான பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால், சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து 2 மணித்தியாலம் வரை கிண்டவும்.

கலவை திரள தொடங்கியதும் மிகுதியாயுள்ள 6 ரின் தேங்காய்ப்பாலை அல்லது முதல்பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டவும். அத்துடன் தூளாக வெட்டிய கஜூவையும் பொடி செய்த ஏலக்காயையும் போட்டு கெட்டியாகும் வரை கிளறவும்.

பின்னர் கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி கொட்டி ஆறவிடவும். பின்னர் மறுநாள் வெட்டி பரிமாறலாம்.
குறிப்பு:
உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்