எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

Latest Videos

கவர்ச்சிப் படம் 

ஏழைகளின் ஆப்பிள் ! பப்பாளிப் பழத்தின் மருத்துவ குணங்கள்..!

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளியின் பழம், காய் மற்றும் அதன் பாலில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பப்பாளி நல்லது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளி காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

இதன் இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் 'நாடு' என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர வளர்ச்சியும் ஒரு மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளின் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் பிறந்து வாழ்வதற்குரிய சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை 63 ஆவது இடத்திலும் இந்தியா 66 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

எதிர்வரும் வருடத்தில் சுபீட்சமான, மன நிறைவான வாழ்க்யை வாழ்வதற்கு ஏற்ற சூழலை கொண்ட நாடு எது எனும் ஆராயும் முயற்சியை பிரிட்டனின் பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளது.

மக்களின் மனநிறைவான கருத்துக்கள், மற்றும் நாடுகளின் வாழ்க்கை தரம் என்பவற்றை உள்ளடக்கி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரமே சுவிட்சர்லாந்து வாழ்வதற்கு ஏற்ற முதல் நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்கள் மகிழ்ச்சிகரமானவர்களாக காணப்படுவதுடன் தரமான உடல் ஆரோக்கிய நிலையானது அவர்களது ஆயுளை தீர்மானிப்பதாகவும் சுகாதார மற்றும் பொது நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

அதேபோல் ஸ்கெண்டிநேவியா நாடுகளான நோர்வே, சுவிடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளதாக அவ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

புவியியல், குடியியல்; மற்று கலாசாரம், பொருளாதார நிலை உட்பட்ட 11 விடயங்களை பிரதானபடுத்தி இந்த ஆய்வறிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹோங்கோங் ஆகிய நாடுகளே 2013 இல் சிறப்பாக வாழக்கூடிய முதல் 10 நாடுகளாகும். இதில் அமெரிக்கா 16 ஆவது இடத்திலும் பிரிட்டன் 20 ஆவது இடத்திலும் சீனா 49 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

'கலாசார தீவிரவாதத்தை' சட்டரீதியாக எதிர்கொள்வேன்: கமல்ஹாசன்

'என்னுடைய 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்' என்று நடிகரும் - இயக்குநருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

'விஸ்வரூபம்' திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இத்திப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது திரைப்படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. எனது அறிக்கைகள், பேச்சுக்கள் மூலம் அச்சமூகத்தின் அனுதாபியாக என்னை நான் நிரூபித்துள்ளேன். ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.

மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.

சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்த திரைப்படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.

அதற்காகவே இந்த திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.