எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 7 ஏப்ரல், 2014


மஷ்ரூம் சாண்ட்விட்ச்

The vitamin A , vitamin D , protein and folic acid is high . The bloodstream and lead to gaze .


என்னென்ன தேவை? 

மஷ்ரூம் - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 2,
இஞ்சி,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
குடைமிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
புதினா - அரை கட்டு.
எப்படிச் செய்வது? 

முதலில் காளானைக் கழுவி சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை பிரெட்டில் வைத்து சாண்ட்விட்ச் செய்யவும். கொத்தமல்லி சட்டினி (அல்லது) புதினா சட்னி தொட்டுக் கொள்ள ஏற்றது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக உள்ளது.  ரத்த ஓட்டத்துக்கும் கூரிய பார்வைக்கும் வழிவகுக்கும்.

கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், சுற்றுலா தளங்களில் குவியும் மக்கள்

                                  

விழா, வேத்திகளுக்கு கூட்டம் கூட்ட தெரிந்த இயக்குநர் விஜய்., தன் பட தியேட்டர்களுக்கும் கூட்டம் கூட்டினால் சரி! 'சைவம்' களேபரம்!!



சைவம்' படத்தின் ஆடியோ விழாவை சென்னை, தி.நகர், ஜி.ஆர்.டி ஹோட்டல் கன்வென்ஷன் செண்டரில் மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க வெகு விமரிசையாக கொண்டாடினார் அப்பட இயக்குநர் விஜய்யும், அவரது அப்பாவும், இப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட 'சைவம்' படக்குழுவினர்! ஆனால், இருநூறு பேர் கொள்ளவு கொண்ட அந்த ஹாலில், குடும்பம் குடும்பமாக சுமார் இரண்டாயிரம் பேரை அனுமதித்ததால் அரங்கத்திற்குள் விழா அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்த நேரமான 6.00 மணிக்கு மூச்சு திணறல் ஏற்படும் அளவிற்கு நெரிசல்!
இந்நிலையில் திரையுலக வி.வி.ஐ.பி.கள் மெல்ல மெல்ல விழா அரங்கத்திற்கு வர ஆரம்பிக்க தள்ளுமுள்ளு கும்பலில் சிக்கி திணறி முன்வரிசைக்கு முன்னேறினர். அங்கும் ஒரு ஸ்டேஜூக்கு அப்புறம் இடம் இல்லாமல் போக விழாவிற்கு வந்தவர்களை பெல்ட் போட்டு இறுக்கிய வேஷ்டி சட்டையில் (ஆமாம் சைவத்துக்கும் வேஷ்டி, சட்டைக்கும் என்ன சம்பந்தம்.?!) வரவேற்று, சிரித்து வந்த இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சத்யாமூவிஸ் டி.ஜி.தியாகராஜனும், பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ருத்ரனும் சீட்டிற்காக அங்கும், இங்கும் தேடியபோது அவர்களை கண்டும் காணாதது மாதிரி மேடையில் அலட்டி கொள்ளாது, தன் மகன் பெருமை பேசி நீண்ட நெடுநேரம் வரவேற்புரை நிகழ்த்திய அப்பாவை, வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்! அதேநேரம் சீட் கிடைக்காத டாக்டர் ருத்ரனுக்காக இப்பட நாயகர் நாசரின் (இதில் செட்டிநாட்டு தாத்தாவாக வரும் நாசர் தான் 'சைவம்' பட நாயகர்!) மனைவி கமீலா நாசர் சீட் தேடி அலைந்து, உட்கார்ந்திருந்த ஒருவரை எழுப்பி ருத்ரனை அமர வைக்க முயல, அதை தடுத்த டாக்டர் ருத்ரன் பரவாயில்லை, செய்யாதீர்கள் என வெளிநடப்பு செய்தார். அவரைத்தொடர்ந்து டி.ஜி.தியாகராஜனும் எஸ்கேப் ஆனார்.
ஆனால் இவர்களுக்கு அரை மணிநேரம் கழித்து வந்த நட்சத்திரங்கள் சித்தார்த், விஜய்சேதுபதி, பார்த்திபன், அனுஷ்கா, அமலாபால் உள்ளிட்டோருக்கு உள்ளேயிருந்து புதிது புதிதாக சேர்கள் எடுத்து வர சொல்லி அமர வைத்து, அழகு பார்த்தார் விஜய்., அதிலும்., அனுஷ்கா, அமலாபாலுடன் வந்த மேக்-அப், டச்-அப் உதவியாளர் லேடீஸ்க்கெல்லாம் சீட் ரெடி பண்ணி தந்தது தான் வேடிக்கை! 'தலைவா' பட ஆடியோ வெளியீடு தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடந்தபோது கூட இப்படித்தான் கும்பலை கூட்டி விழாவுக்கு வந்த வி.ஐ.பி.க்களை நெரிசலில் சிக்க விட்டார் இயக்குநர் விஜய்!
விழா வேத்திகளுக்கு கும்பல் கூட்ட தெரிந்த விஜய், அவர் இயக்கும் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களுக்கும் கும்பல் கூட்டும் வித்தையை கற்றுக்கொண்டால், இப்படி அரை டஜன் படங்களுக்கு அப்புறம், அவர் இயக்கும் சைவம் படத்திற்கு அவரது அப்பா அழகப்பன் புரொடியூசர் ஆக வேண்டிய அவசியம் வந்திருக்காதே என்பது தான் விழா நெரிசலில் வந்த, வெந்த விஐபி.க்கள், மீடியாக்களின் புலம்பலாக ஒலித்தது என்றால் மிகையல்ல.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் உள்ளிட்டவைகளுக்கும் மேலாக, நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூற்றுப்படி... அமலாபாலையும் அறிந்த விஜய்., இனி விழா வேத்திகளை எப்படி நடத்த வேண்டுமென முதலில் கற்றுக்கொள்வது நன்று                                                                   

வடிவேலு படத்திற்கு வந்த புதிய பிரச்சனை…!

வடிவேலு படத்திற்கு வந்த புதிய பிரச்சனை…!
March 20
09:212014

கடந்த தேர்தலில் செய்த அட்டகாசத்தால் இரண்டு வருடங்கள் சினிமா பக்கமே வராமல் இருந்த வடிவேலுவை தெனாலிராமன் என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் இவர் தென்னாலி ராமனாகவும், கிருஷ்ன தேவராஜராகவும் நடித்திருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வடிவேலுவை வைத்து பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்த்தபடியே இப்போது படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இம்முறை படத்திற்கு எதிராக குரல் குடுப்பது தமிழ் நாட்டில் இல்லை. ஆந்திராவில்…
ஆமாம், ஆந்திராவில் இருந்து படத்தை வெளியிடக்கூடாது என ’தெலுங்கு மக்கள் பேரவை’ கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, ‘வடிவேலு தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராஜராக அவமதிக்கும் விதமாக நடிப்பதாக கேள்விப்பட்டோம்.. இதனால் இப்படத்தை வெளியட தடை விதிக்க வேண்டும்’ இது தொடர்பாக சென்சார்டு போர்ட்டுக்கும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்’ என தெரிவித்தார். என்னடா பொழுதுபோய் இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தேன் நடந்திருச்சு, நடத்திட்டாய்ங்க….                                                                                                                                                                                                                           

உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினி?

உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினி?
March 21
13:222014
t
ஒரு நடிகையை இன்னொரு நடிகையோடு சேர்ந்து நடிக்க வைக்கிறதுக்குள்ள அப்படத்தின் இயக்குநருக்கு நாக்கு தள்ளி சோடா தெளிச்சு எழுப்ப வேண்டிய நிலைமையில் இருக்கும் கோடம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே சில கேள்விகள் தாருமாறாக சுற்றி வரும் அதாவது அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா?, ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பார்களா? என்ற இந்த இரண்டு கேள்விக்கு பதில் இன்று வரை கிடைக்கவில்லை. தற்போது கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் கமல். இதற்கு ஒரு வியாபார நோக்கமும் இருக்கிறது. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் கமல், ரஜினியின் குருவான பாலச்சந்தர் நடிக்கிறார். இவரை வைத்து ரஜினியை நடிக்க வைப்பது சுலபம் அதுமட்டுமில்லாமல் ரஜினியை வைத்து உலகத்தில் இருக்கும் அனைத்து ரஜினி ரசிகர்களையும் உசுப்பிவிட்ட மாதிரியும் ஆச்சு, படத்திற்கு வியாபாரம், விளம்பரமும் ஆச்சு என்ற எண்ணத்தில் தான் இந்த அந்தர் பல்டியாம்.       

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பிரமோற்சவத்தையொட்டி கோதண்டராமர் கோயில் மகா தேரோட்டம்



திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் சுவாமி கோயிலில் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் சேஷ வாகனத்தில் உற்சவமூர்த்தி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7வது நாளான நேற்று முன்தினம் காலை சூரிய வாகனத்திலும், இரவு சந்திர வாகனத்திலும் உற்சவ மூர்த்திகள் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

8வது நாளான நேற்று மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமாட வீதிகளில் வலம் வந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவ மூர்த்தி வலம் வந்தார். 9ம் நாளான இன்று காலை கோயில் வளாகத்தில் உள்ள மூலவர்களுக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் பல்லக்கு உற்சவமும் உற்சவ மூர்த்திகளுக்கு கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் உள்ள கபில தீர்த்த குளத்தில் சக்கர ஸ்நானமும் மாலை கொடியிறக்கமும் நடக்கிறது.


Pencil movie  photos, Pencil movie  photos  images, Pencil movie  photos Gallery, Pencil movie  photos  Album

சனி, 5 ஏப்ரல், 2014

   

Pothys                                           




...!

காணமல் போன விமானத்தில் இருந்து சமிக்ஞை


தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை  கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சமிக்ஞை காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால் அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள மினகலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

கடந்த மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.