ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா முடிவு!
)
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. உறுதி செய்தது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக சிரியா மீது குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதில் தீவிரமாக உள்ளது. 'நேற்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுள்ளது. ரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ஒரு முன்முயற்சியை அவர் தெரிவித்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்' என சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக