Firefox வெளியிடும் புதிய ஸ்மார்ட்போன்
இன்று ஸ்பெய்ன் நாட்டில் துவங்கப்பட உள்ள உலக மொபைல் சந்தை மாநாட்டை முன்னிட்டு 7 புதிய ஸ்மார்ட்போன்களை மொஸில்லா ஃபயர்பாக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில், கூகுள் ஆண்ட்ராய்ட் 78.4 சதவீதமும், ஆப்பிள் நிறுவன போன்கள் 15.6 சதவீதமும் இடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டியில் மொஸில்லா நிறுவனமும் பங்குபெறுவதற்காக சீன நிறுவனமாக இசட்.டி.ஈ.யுடன் (ZTE) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் விலைகள் 25 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதமே ஃபயர்பாக்ஸ் இணைந்துள்ள ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள ஃபயர்பாக்ஸ், அந்த ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் எவ்வளவு போன்கள் இதுவரை விற்பனையாகின என்ற தகவல்களைத் தெரிவிக்கவில்லை.
புதிய ஸ்மார்ட்போன்கள் வளரும் நாடுகளை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பானோசோனிக் நிறுவனத்துடன் இணைந்து இண்டர்நெட் வசதியுடன் கூடிய தொலைக்காட்சிகளைத் தயாரிப்பதற்கு மொஸில்லா நிறுவனம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக