எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 7 அக்டோபர், 2012


களுத்துறை 'த சான்ட்ஸ்' ஹோட்டல்



உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு முக்கியமானதாகும். அந்த ஓய்வு எங்கு கிடைக்கும் என ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியாகவும் அழகாகவும் உள்ள இடங்களையே நாடுவர். அப்படியான ஒர் இடத்திலேயே 'த சான்ட்ஸ்' ஹோட்டல் அமைந்துள்ளது. விடுமுறையை கழிக்க வருபவர்களுக்கு ஒரு நவீன வடிவமைப்பில் மகிழ்ச்சிகரமாக பிரமிப்பூட்டும் அனுபவத்தை இந்த ஹோட்டல் அறிமுகம் செய்கின்றது.

களுத்துறை ரமடா ரிசோட் என பிரபல்யம் பெற்ற இந்த ஹோட்டல் நான்கு நட்சத்திர அந்தஸ்தினை பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே 'த சான்ட்ஸ்' என பெயர் மாற்றப்பட்ட இந்த ஹோட்டலை இலங்கையின் முன்னணி ஹோட்டல் கம்பனியான எயிற்கென் ஸ்பேன்ஸ் ஹோட்டல்ஸ் நிறுவத்தினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து சுமார் 37 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள களுத்துறை நகரத்திற்கு அண்மையிலுள்ள வஸ்கடுவ எனும் பிரதேசத்திலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. காலி வீதியிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கடற்கரைக்கு அருகில் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைய பெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்களில் களுத்துறை நகரை அடைய கூடிய இடத்திலுள்ள த சான்ட்ஸிற்கு அருகாமையில் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல், பொது சந்தை மற்றும் பஸ் தரிப்பு நிலையம் ஆகியன காணப்படுகின்றன.   இந்த ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் ஜேர்மனி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாற்றுபவர்களாக காணப்படுகின்றனர்.

அத்துடன் நவீன ரக தங்கும் அறைகள், ஓய்வெடுக்கும் அறை, 24 மணி நேர அறை சேவை, வை-பை சேவை, வாகனங்கள் தரிப்பிடம், சோனா, ஸ்டிம் பாத்,  லைவ் மியூசிக், நகை கடை, நீச்சல் தடாகம், சிறுவர் நீச்சல் தடாகம், சிறுவர் உணவுகள்,  உடற் பயிற்சி நிலையம் மற்றும் கடல் குளியல் உள்ளிட்ட பல வசதிகள் விருந்தினர்களுக்கு தேவையான வகையில் இந்த ஹோட்டலில் உள்ளன.

இதேவேளை, சுமார் 109 அறைகளை கொண்ட இந்த ஹோட்டலில் ஸ்டேன்டட், கபானாஸ், குடும்ப அறை, டியூலக்ஸ் மற்றும் லக்ஸரி சூட் ஆகிய வகையான விடுதி அறைகள் உள்ளன.

இதில் தனி ஒருவர், இருவர், மூவர் என தங்க கூடிய வகையில் அமைய பெற்ற 61 ஸ்டேன்ரட் அறைகளை கொண்டுள்ளது. இருவர் மாத்திரம் தங்கக்கூடிய வகையில் கபானாஸ் எனும் 30 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த கபானாஸ் எனப்படும் அறைகள் புதிய தம்பதியினரின் தேன் நிலவினை கழிப்பதற்கு ஏற்ற வகையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேலதிகமாக நான்கு பேர் தங்கக்கூடிய மூன்று அறைகள் உள்ளன. இரண்டு பேர் தங்கக்கூடிய வகையிலான டியூலக்ஸ் எனும் 14 அறைகள் உள்ளன.  அத்துடன் மூன்று பேர் தங்கக்கூடிய லக்ஸரி சூட் எனும் ஓர் அறை உள்ளது. ஹோட்டலிலுள்ள ஏனைய அறைகளை விட நவீன முறையில் பல முக்கிய வசதிகளுடன் லக்ஸரி சூட் அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வானொலி, எல்.சீ.டி. தொலைக்காட்சி, பாதுகாப்பு பெட்டி, ஒரு நாளைக்கு இரண்டு நேர துப்புரவாக்கல் சேவை, சோபா மெத்தை, வேண்டுகோள் விடுத்தால் தினசரி பத்திரிகை உள்ளிட்ட பல வசதிகளை அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக டென்னிஸ், பட்மின்டன், மேசைப்பந்து, வலைப்பந்து, கரம், ஜிம் ஆகிய விளையாட்டு வசதிகளும் இந்த ஹோட்டலில் உள்ளன. அத்துடன் கடலை அண்டிய பிரதேசத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கின்றமையினால் கடல் சார்ந்த பெயர்களான த யாட், வேவ்ஸ், ஷெல்ஸ், கோறல்ஸ், ஹோரல்ஸ் மற்றும் சாண்ட்ஸ் ஆகிய பெயர்களில் உணவு விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

விருந்தினருக்கு தேவையான அனைத்து வகையான உணவுகளையும் 24 மணித்தியாலங்களும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஹோட்டலில் பிரதான மூன்று உணவகங்கள் மூன்று திசைகளில் காணப்படுகின்றன. இதன் காரணமாக விருந்தினர்கள் விரும்புகின்ற உணவுகளை விரும்பிய இடத்தில் தெரிவு செய்ய முடியும்.

சுமார் 350 பேர் இருக்கும் அளவிற்கு திருமண உள்ளிட்ட பொது நிகழ்வுகளை நடத்துவதற்காக பன்குயிற்றும் உள்ளது. அத்துடன் ஒரு சமயத்தில் இரண்டு திருமண நிகழ்வுகளையும் நடத்த கூடிய வகையிலான வசதிகளையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

அத்துடன் கூமார் 20 பேர் கலந்துகொள்ள கூடிய வகையிலான சிறிய மாநாட்டு மண்டபமும் உள்ளது. விருத்தினர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் இந்த அறையில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், விருந்தினர்களிற்கு ஏற்ற வகையில் விசேட வகையான நாட் பொதிகளையும் 'த சான்ட்ஸ்' ஹோட்டல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது காலை உணவுடன் நீச்சல் தடாக வசதி, இரவு நேர தங்குமிடத்துடன் காலை உணவு மற்றும் நீச்சல் தடாக வசதி, புஃல் போர்ட் எனப்படும் காலை மதியம், இரவு ஆகிய நேர உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி மற்றும் காஃப் போர்ட் எனப்படும் பகல் மற்றும் இரவு உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி உள்ளிட்ட பல பொதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அனைத்து வகையான பொதிகளும் விருந்தினரின் வசதிக்கு ஏற்ற வகையில் மிக குறைந்த கட்டணத்திலான ஒருநாள் பொதிகளாகும். பொது முகாமையாளரான நிரான் ரத்வத்தையினை தலைமையிலான த சான்ட்ஸ் ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

வருட இறுதி பருவகாலம் ஆரம்பிக்கும் இத்தருணத்தில் இப்பொழுதே இவ்விடத்தினை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் வருட இறுதியினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 0094 0342228484 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் gm.thesands@aitkenspenceஎன்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.









சனி, 29 செப்டம்பர், 2012


செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை; தடங்களை அனுப்பியது க்யூசியாசிட்டி



செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளைக் கற்கள் மற்றும் பாறை இருப்பதை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா க்யூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது.

அது கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வை ஆரம்பித்த நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டுவரப்பட்ட சரளைக் கற்களின் பாறைகளை க்யூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

அந்த பாறைகளின் அளவு மற்றும் வடிவத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட்டிருக்க முடியாது. கட்டாயமாக நீரோடை தான் அந்த கற்களை அடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியாசிட்டி விஞ்ஞானி ரெபேக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப்படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோடையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோடைகள் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. (படங்கள் - நாசா)


Views: 603
By A Web Design

LATEST NEWS HEADLINES

tamil movie news
ராட்டினம் படத்தில் நடித்த சுவாதி, அடுத்து, அப்புக்குட்டி நடித்த, மன்னாரு படத்தில் நடித்தார்.

tamil movie news
மம்முட்டி, பிருத்விரா‌ஜ் நடித்த போக்கி‌ரி ராஜாவை ராஜா போக்கி‌ரி ராஜா என்ற பெய‌ரில் தமிழில் டப் செய்தார்கள்.

tamil movie news
தெலுங்கில் 'கேமரா மேன் கங்கா தோ ராம்பாபு' என்ற படத்தில் பவன்கல்யான் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

tamil movie news
விருதுகளில் மட்டுமல்ல வசூலிலும் யு.டிவிக்கு 2012 செப்டம்பர் மாதம் நல்வரவு தான்.

tamil movie news
சுந்தர பாண்டியன் படத்தில், சசிகுமார், அப்புக்குட்டி உட்பட மூன்று பேர், லட்சுமி மேனனிடம், "ஐ லவ் யூ சொல்லி துரத்தியதைப் போல், நிஜத்திலும்,

tamil movie news
ஈகா ( நான் ஈ )பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி சமீபத்தில் சமூக அக்கறையோடு சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறார்.

tamil movie news
அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அறுவை சிசிக்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர்.

tamil movie news
பிரபல இந்தி படமான ஜிஸ்ம் 2' என்ற படத்தில் நடித்து பிரபல்யாமான நடிகை சன்னி லியோன்.

tamil movie news
கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார்.

LATEST NEWS HEADLINES

tamil movie news
ராட்டினம் படத்தில் நடித்த சுவாதி, அடுத்து, அப்புக்குட்டி நடித்த, மன்னாரு படத்தில் நடித்தார்.

tamil movie news
மம்முட்டி, பிருத்விரா‌ஜ் நடித்த போக்கி‌ரி ராஜாவை ராஜா போக்கி‌ரி ராஜா என்ற பெய‌ரில் தமிழில் டப் செய்தார்கள்.

tamil movie news
தெலுங்கில் 'கேமரா மேன் கங்கா தோ ராம்பாபு' என்ற படத்தில் பவன்கல்யான் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

tamil movie news
விருதுகளில் மட்டுமல்ல வசூலிலும் யு.டிவிக்கு 2012 செப்டம்பர் மாதம் நல்வரவு தான்.

tamil movie news
சுந்தர பாண்டியன் படத்தில், சசிகுமார், அப்புக்குட்டி உட்பட மூன்று பேர், லட்சுமி மேனனிடம், "ஐ லவ் யூ சொல்லி துரத்தியதைப் போல், நிஜத்திலும்,

tamil movie news
ஈகா ( நான் ஈ )பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி சமீபத்தில் சமூக அக்கறையோடு சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறார்.

tamil movie news
அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அறுவை சிசிக்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர்.

tamil movie news
பிரபல இந்தி படமான ஜிஸ்ம் 2' என்ற படத்தில் நடித்து பிரபல்யாமான நடிகை சன்னி லியோன்.

tamil movie news
கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார்.

உலகில் மிகவும் உயரம் குறைந்த கார்


ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 45.2 சென்றிமீற்றர் உயரமுடைய ஒரு காரானது உலகில் வீதி பாவனைக்கு ஏற்ற மிக உயரம் குறைந்த கார் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தரையிலிருந்து காரின் அதிகூடிய உயரம் நன்கு அளவிடப்பட்டதை தொடர்ந்து இக்கார் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் மிக உயரம் குறைந்த காராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்காரை ஜப்பானின் அஸாகுச்சியில் உள்ள ஒயொதோ சன்யோ உயர்தர பாடசாலையில் வாகனப் பொறியில் கற்கை நெறியை பயின்றுவரும் மாணவரொருவர் வடிவமைத்துள்ளார். 

விளையாட்டுக் காரை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இக்காரானது வேகம் மற்றம் மேடு பள்ளங்களில் செலுத்துவதில் குறைப்பாடுடன் காணப்பட்டாலும்  சட்டரீதியாக, ஜப்பானிய வீதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிராய் (எதிர்காலம்) என பெயரிடப்பட்ட இக்கார், ஜப்பானின் சி.கியு.10 மோட்டார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆறு பெட்டரிகளுடன் உதவியுடன் இயங்குகின்றனது.

காரின் உடலமைப்பு, ஸ்டீரிங் அமைப்பு, விளக்குகள், இருக்கைகள் மற்றும் ஏனைய பாகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வாகனமானது, பிரிட்டனை சேர்ந்த பெரி வெட்கின் என்பவரால் கடந்த 2009 ஆம் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த காரின் சாதனையை முறிடியத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012


ஜப்பானிய, தாய்வான் படையினர் தண்ணீர் பீரங்கிப் பிரயோகம்


கிழக்கு சீனக் கடல்பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகள் அமைந்துள்ள  பகுதியில் ஜப்பானிய கரையோரக் காவல் படைக் கப்பல்களும் தாய்வான் கரையோரக் காவல் படையின் கப்பல்களும் இன்று பரஸ்பரம் பீரங்கிப் பிரயோகம் மேற்கொண்டன.

இத்தீவுகள் ஜப்பானியர்களால் சேன்காகு என அழைக்கப்படுகிறது. சீனாவில் டியாயோ எனவும் தயர்வான் டியாவோயுதாய் எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டசன் கணக்கிலான தாய்வான் மீன்பிடிப் படகுகள், தாய்வான் கரையோரக் காவல் படைக் கப்பல்களின் துணையுடன் இத்தீவுப் பகுதிக்கு வந்தபோது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

தாய்வான் மீன்பிடிப் படகுகள்மீது ஜப்பானிய கரையோர காவல் படையினர் தண்ணீர் பீரங்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது, தாய்வான் படையினரும் பதிலுக்கு தண்ணீர் பீரங்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா



நாடெங்கிலும் உள்ள சைவ ஆலயங்களில் கிருஷ்ன ஜெயந்தி விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கிருஷ்ன ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பெருந்திரளான மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

உடப்பு - எம்.என்.எம்.ஹிஜாஸ்





மட்டக்களப்பு -   லோஹித்



யாழ்ப்பாணம்- கிரிசன்